Thursday, March 29, 2007

E.T. the Extra-Terrestrial


1982 ல வந்த Steven Spielberg படம். இந்த வருஷம் படத்தோட Silver Jubillee year. 20 வருஷம் கழிச்சு 2002ல இந்த படம் சில மாற்றங்கள் பண்ணி மறுபடியும் ரிலீஸ் பண்ணாங்களாம். திங்கக் கிழமை Star Movies ல போட்டாங்க. அன்னிய உலகத்தில இருந்து சில பாடனிஸ்ட்ஸ் பூமிக்கு வர்ராங்க. பூமியில இருக்குற task force அவங்கள பார்த்தனால அவசர அவசரமா கிளம்பி போரப்போ ஒரு குட்டி ஏலியன மட்டும் விட்டுட்டு போயிடராங்க.

அந்த குட்டி ஏலியனுக்கு பூமியில எல்லாம் புதுசா இருக்கு. ஆனா லக்கிலி எலியட் அப்படீன்னு ஒரு 10 வயசு பையன் ப்ரெண்டு ஆயிடது. சீக்கிரம் எலியட்டோட அண்ணன் மைக்கேல், தங்கச்சி கிட்டேயும் ப்ரெண்ட் ஆயுடுது. பூமியோட சூழ்நிலைக்கு அது பழகி அவங்களோட நல்லா பேசவும் செய்யுது. ஆனா திரும்பி அவங்க ஊருக்கு போகனும்னு அதுக்கு மனசில. இவங்க மூனு பேரோட உதவியால அவங்க ஊருக்கு, அத வந்து கூப்டுட்டு போக சொல்லி ஒரு மெசேஜ் அனுப்புது. ரொம்ப home sick ஆகி, எலியட் கிட்ட Phone, home, phone ன் சொல்றப்ப பாவமா இருக்கும். ஒரு transmitter create பண்ணி எப்படியோ மெசேஜ் அனுப்பறாங்க


ஆனா அவங்க வர்ரதுக்குள்ள ETக்கு உடம்பு சரியில்லாம போய், எலியட்டுக்கும் உடம்பு சரியில்லாம போகுது.

Halloween Night அன்னைக்கு காட்டுகுள்ள போற அந்த சீன் தான் ரொம்ப நல்லா இருக்கும். ஒரு மலை மேல போறப்போ, ஈ.டி. சைக்கிளோட அப்படியே பறக்க செய்யும்.

அவங்க அம்மா சீக்கிரம் வந்துருங்கன்னு சொல்லி அனுப்பியும் ஈடி மெசேஜ் அனுப்பனும்னு அங்கேயே இருக்காங்க. அந்த ஃபாரஸ்ட்ல குளிர்ல எலியட்டுக்கும் உடம்பு சரியில்லாம போகுது. ஈடிக்கும் இந்த பூமியில இருக்குற pollution, அவங்க ஊர்காரங்க நியாபகம், gravity எல்லாம் சேர்ந்து உடம்பு சரியில்லாம போயி freeze ஆயிடும். அனுப்புன சிக்னலுக்கும் பதில வரலைன்னு ஈடி ரொம்ப சோர்ந்து போகுது. எலியட்டுக்கு ஒரே அழுகை. ஈடி அவன விட்டுட்டு சீக்கிரம் போயிடும்னு அவனுக்கு தெரிஞ்சு போச்சு. இந்த சீன் தான் ரொம்ப அழுகையா வரும். அப்ப எலியட் சொல்லுவான் 'நீ இங்கேயே என்னோடவே இருந்துறேன். உன்னை யாரும் ஒன்னும் பண்ணாம நான் பார்துக்குறேன்" னு சொல்லும் போது ஈடி home, home அப்படின்னு சொல்லும் (அதோட வீட்டுக்கு போறேன்னு சொல்லிம்). அத கேட்டு எலியட் அழுவான். அவன் அழுகறத பார்த்து அவன் கன்னம், காது எல்லாம் தடவி கொடுக்கும். ரொம்ப emotionalஆ இருக்கும் இந்த சீன்.

எலியட்டுக்கும் ஈடிக்கும் அடுத்த நாள் ட்ரீட்மென்ட் குடுக்கறாங்க. எலியட்டுக்கு நல்லா ஆயிடுது. ஆனா ஈடிக்கு இருக்க இருக்க உடம்பு மோசமாகுது. எலியட்டுக்கு ஈடியோட இருந்த அந்த communication ம் கம்மி ஆயிட்டே வருது.

ஈடிக்கு குடுக்குற ட்ரீட்மென்ட் எதுவும் அதுக்கு உதவாதுன்னு தெரிஞ்சு அதையெல்லாம் நிறுத்த சொல்லி எலியட் கத்துறான். எப்படியாவது ஈடிய இவங்ககிட்ட இருந்து காப்பாத்தி ஸ்பேஸ் ஷிப்ல விடனும்னு நினச்சு அவனோட ப்ரென்ட்ஸ் உதவியோட ஈடிய கூப்டுட்டு ஃபாரஸ்டுக்கு போறான். எல்லாரும் சைக்கிள் எடுத்துட்டு ஈடிய தப்பிக்க வைக்கறாங்க. ஒரு இடத்துல போலீஸ் gun எல்லாம் வச்சுட்டு ரோட் பிளாக் பண்ணுவாங்க. அப்ப ஈடி எல்லா சைக்கிளையும் பறக்க செய்யும். இது தான் ரொம்ப நல்லா இருக்கும்.

அங்க பாரஸ்டுக்கு கூட்டிட்டுபோய் அங்க ரெடியா இருக்குற ஸ்பேஸ் ஷிப்ல விடறாங்க. ஷிப்ல ஏறினதுக்கு அப்புறம் எலியட்டோட தங்கச்சி "Good bye ET" அப்படீன்னு சொல்லுவா. அதுக்கு அவளோட அண்ணன் மைக்கேல் ஈடிக்கு Good bye னா என்னன்னு தெரியாதுன்னு சொல்ல, அத கேட்டு ஈடி அந்த பொண்ணுகிட்ட அவளுக்கு பிடிச்ச வார்த்தையான "Be good"னு சொல்லும்.

அப்புறம் எலியட் கிட்ட வந்து அவனோட ஹார்ட் கிட்ட கை வச்சு நான் எப்பவும் இங்க இருப்பேன்னு சொல்றது ரொம்ப டச்சிங்கா இருக்கும்.

English படத்த பார்த்தா அழுவாச்சி வருமான்னு சொல்றவங்க இந்த படத்த பார்க்கனும்.


இந்த படம் வெறும் ஒரு ஏலியன் வந்துட்டு போற கதைய மட்டும் சொல்லாம..frenidship, love, tolerance and emotional bondage எல்லாத்தையும் சொல்லற மாதிரி எடுத்திருக்காங்க.

13 comments:

said...

பதிவ படிக்கும் போதே அளுவாச்சி அளுவாச்சியா வருது....ம்ம்ம்ம்ம், நான் இதுவரை அந்த படம் பார்க்கலை....பாத்தா அளுதுருவேனோ...

said...

என் மாதிரியான குட்டிபசங்களுக்கு இந்த படத்தினை அறிமுகப்படுத்திய அக்காவுக்கு நன்றி...நன்றி....நன்றி...

said...

//பங்காளி... said...
பதிவ படிக்கும் போதே அளுவாச்சி அளுவாச்சியா வருது....ம்ம்ம்ம்ம், நான் இதுவரை அந்த படம் பார்க்கலை....பாத்தா அளுதுருவேனோ...//

:))

இதே மாதிரி A.I (Artificial Intelligence)ம் நல்லா எடுத்துருப்பாரு. கிளைமேக்ஸ் நல்லா பயமுறுத்தி வருத்தப்பட வச்சிருப்பாரு.

சென்ஷி

said...

//பதிவ படிக்கும் போதே அளுவாச்சி அளுவாச்சியா வருது////

//ம்ம்ம்ம்ம், நான் இதுவரை அந்த படம் பார்க்கலை....பாத்தா அளுதுருவேனோ... ///

அண்ணா நிஜமாவே சொல்ரீங்களா இல்ல கின்டல் பண்ரீங்களா...
பார்க்கலைனா அக்கா பக்கத்துல உக்காந்துக்குறேன்..அழுகாதீங்க..:-))

நன்றி சென்ஷி அண்ணா..

said...

அட சினிமா விமர்சனமா, தங்கச்சி!

நல்லா எழுதியிருக்கிறிங்க!

Steven Spielberg படம்-னு இப்படிதான், 'A.I.' முத நாள் பார்க்க போனோம், சென்ஷி!
வறுத்து எடுத்துட்டானுங்க! படம் முடிஞ்ச உடன, தியட்டரலிருந்து ஒரே ஓட்டம்தான்...escape... ;(

said...

ஸ்டார் மூவிஸ்ல இந்த படத்தை நிறைய தடவை போட்டாச்சு...எப்போ போட்டாலும் எங்க குடும்பத்து வாண்டுங்க முழுக்க பார்க்காம விடமாட்டாங்க...

said...

தென்றல் அண்ணா, சிந்தாநதி அண்ணா

நன்றி

ஆமா,நானே 3 தடவை பார்த்துடேன்.

said...

அசத்தல் படம். அனைவரும் பார்க்கவேண்டிய ஒன்று!

said...

யக்கோவ்...

எங்கூட உக்காந்து படம்பார்க்க தயாரா....அப்ப எதுக்கும் ரெண்டு மூணு டவல் வச்சிக்கோங்க....

ஹி..ஹி..பிழிய பிழிய அளுதாலும் அளுவேன்...

said...

//சேதுக்கரசி said...
அசத்தல் படம். அனைவரும் பார்க்கவேண்டிய ஒன்று!//

தேங்கஸ் அக்கா

said...

//ஹி..ஹி..பிழிய பிழிய அளுதாலும் அளுவேன்..//

:-)))

said...

"ரிலீஸ்", "ஏலியன", "லக்கிலி"-ன்னு இதையெல்லாம் தங்கிலீஷ்ல அடிக்கும் பொழுது, "Silver Jubillee year", "Star Movies", "transmitter create"-ன்னு இதையெல்லாம் தங்லீஷ்ல அடிக்கலாமே!!!

said...

//"Star Movies", "transmitter create"-ன்னு இதையெல்லாம் தங்லீஷ்ல அடிக்கலாமே!!! //

அண்ணா..

சீக்கிரம் தமிழ்ல எழுதி பழகிக்குறேன்.. இப்பத்திக்கு நீங்க சொல்றத செய்யறேன்.. நன்றி.. ரொம்ப நாளா கானோம் உங்களை???

Locations of visitors to this page