Saturday, April 21, 2007

லாரா ஓ லாரா

ப்ரையன் லாராவோட கடைசி மாட்ச் இன்னைக்கு. அவர், ஒரு நாள் போட்டியில இருந்து ரிடையர்மென்ட் அறிவிச்சப்போ, யாருக்கும் நம்ப முடியலை. அந்த கிரவுன்டல இருந்தவுங்களுக்கு ஒன்னுமே புரியலையாம். ரொம்ப சாதாரனமா சொல்லீட்டு போயிட்டார்.



"I honestly feel that my game is over and we should give it to one of the younger players. It's really tough playing one-day internationals out there. After the World Cup the next one-day tournament for the West Indies is in June in England and I would love to sit back and watch and see the team do well," he said.


உலகக் கோப்பைல நல்லா விளையாடாததுக்கு, "All we can say is that we are sorry to our people' அப்படீன்னு சொல்லி மன்னிப்பு கேட்டார். "I think this is the end of my one-day career, for sure," . ஒரு ஸ்போர்ட்ஸ்மேனுக்கு இருக்க வேண்டிய அத்தனை குவாலிட்டீஸ்ம் இருக்குற ஒரு நல்ல வீரர்.

1990ல பாக்கிஸ்தானுக்கு எதிரா கராட்சியில தான் இவரோட கேரியர் ஆரம்பம் ஆச்சு. இது வரைக்கும் 297 ஒரு நாள் போட்டிகள் விளையாடியிருக்கிறார்.

Thank you and best wishes Lara

சீ...சீ..சீ..இந்த பழம் எல்லாம் புளிக்குது....

இந்த பாலம் படங்கள்ல வந்து இருக்காம்




இதன்னமோ பொம்மை மாதிரி இருக்கு

இந்த பாலத்துல போனா கரெக்டா போய் சேறுவாங்களா, கன்ஃபுயூஸ் ஆகாது?.. எந்த ரோட்ல வந்தோம், எதுல போகனும்னு, குழப்பம்ஸ் ஆகும்.:-))
















மேல இருக்குற இடத்துக்கு நம்ம எல்லாரும் பிக்னிக் போலாமா?..எப்படி இருக்கும்...














சீ...சீ..சீ..இந்த பழம் எல்லாம் புளிக்குது....


இது எல்லாம் ஜப்பான்ல இருக்குற பாலங்கள்

Friday, April 20, 2007

ஸென் கதை-7

ஒரு வயசான விவசாயி ஒருத்தர், வயசான காரணத்தினால ஒன்னும் பண்ண முடியாம ஒரே இடத்துல உட்கார்ந்து இருந்தாராம். வயல்ல வேலை செய்ய முடியாம ஒரே இடத்துல உட்க்கார்ந்து இருந்தார். அவர பார்த்து அவர் மகனுக்கு கோவம் கோவமா வந்துச்சாம். "என்ன இந்த கிழவன் ஒரு வேலையும் பண்ண மாட்டெங்குறான். ஏதாவது செஞ்சு இவர அனுப்பனும்' னு முடிவு பண்ணான்

அடுத்த நாள் ஒரு காஃபின் தயார் பண்ணி எடுத்துட்டு வந்து அதுல அவங்க அப்பாவ படுத்துக்க சொன்னான். அவரும் உள்ள படுத்துட்டார். அப்புறம் ஒரு மலை உச்சிக்கு எடுத்துட்டு போய் கீழே உருட்டி விட ஐடியா பண்ணான்.

கீழ தள்ளப் போறப்போ, உள்ள இருந்த பெரியவர், காஃபின் மூடிய தட்டுனாராம். சரி சாகப்போறப்போ அப்பா என்ன சொல்றார்னு கேப்போம்னு மூடிய திறந்தானாம் மகன்.

பெரியவர் சொன்னாராம், " என்னை நீ கீழே தள்ளி உருட்டி விட போறேன்னு தெரியும். எப்படி இருந்தாலும் நான் சாகத்தான் போறேன். அதுக்கு எதுக்கு இந்த காஃபின் வேஸ்ட் பண்ற. எடுத்து வச்சா, நாளைக்கு உன் குழந்தைகள் வேற வாங்க வேண்டியது இல்லைன்னு" சொன்னாராம்.

Moral of the Story

யாராயிருந்தாலும் இந்த உலகத்துல இருக்குறதுக்கு ஒரு காரணம் இருக்கும்

அந்த காரணம் வெளியே தெரியா விட்டாலும்

Wednesday, April 18, 2007

வெற்றி - ஸென் கதை 6


ஒரு ஊர்ல ஒரு வயதான போர் வீரர் ஒருத்தர் இருந்தார். ரொம்ப கெட்டிக்காரர். வயசான அப்புறமும் எதிரிகளை வென்று வந்திருக்கிறார். அவர்கிட்ட தோல்வி அப்படீங்கறதே இல்லை. அவர் கிட்ட பலர் வந்து கத்துகிட்டாங்களாம்.

ஒரு முறை அந்த ஊருக்கு ஒரு சின்ன வயசு போர் வீரர் வந்தான். அவன் இந்த பெரியவர பத்தி கேள்வி பட்டு அவர எப்படியாவது தோர்க்கடிக்கனும்னு முடிவு பண்ணி சண்டைக்கு கூப்டானாம். இந்த இளம் வீரன் கிட்ட என்ன ஒரு பலம்னா, எதிரியோட வீக்னஸ் தெரிஞ்சு, அதையே இவனுக்கு பலமாக்கி தாக்குவான். இதுல இவன மிஞ்சறதுக்கு ஆள் இல்லை. எதிரிய முதல தாக்க விட்டுட்டு அப்புறம் தான் இவன் தாக்குவான்.

அதே மாதிரி இந்த வயதான வீரர் கிட்ட சண்டைய ஆரம்பிச்சான். பெரியவர் வந்து பேசாம அவன் முன்னாடி நின்னுட்டார். இவன் அவர் மேல மண் எடுத்து வீசினான். வாய்க்கு வந்த படி திட்டினான். முதல்ல அவர் அடிக்கட்டும்னு இத்தனையும் செஞ்சு இருக்கான். ஆனால் பெரியவர் ஒன்னும் அசையவே இல்லை. கடைசியில இவனே சோர்ந்து போய், முடியாம போயிட்டானாம்.

பெரியவர் கிட்ட படிக்குற மாணவர்கள் வந்து, "சார் என்ன நீங்க, அவன் அப்படி பேசி, அவமானப் படுத்தீட்டு போறான், நீங்க பேசாம இருக்கீங்க" அப்படின்னு கேட்டு இருக்காங்க.

அதுக்கு பெரியவர் சொன்னாராம், "ஒருவர் நமக்கு ஏதாவது பரிசு கொடுக்க வர்ரப்போ, நம்ம வேண்டாம்னு சொல்லிட்டா, அப்புறம் அந்த பரிசுக்கு யாருக்கு சொந்தம்னு?" கேட்டாராம்.
"To win without violence is the greatest victory!"

Saturday, April 7, 2007

இன்னைக்கு நடந்த BCCI மீட்டிங்


ஒரு வழியா BCCI சில அதிரடி மாற்றங்களை செஞ்சிறுக்கு. திராவிட் தான் அடுத்த மூனு டூருக்கும் கேப்டன். பீல்டிங் கோட்சா ராபின் சிங்கும், பெளலிங் கோட்சா வெங்கடேஷ் பிராசாத்தும் இருப்பாங்க. ரவி சாஸ்திரி தான் மேனேஜர் பங்களாதேஷ் டூருக்கு.

முக்கியமா வீரர்களுக்கு குடுக்குற ஃபீஸ் தான் இப்ப எல்லாருக்கு ஒரே மாதிரி பண்ணிட்டாங்க. ஜெயிச்சா incentive தருவாங்களாம்.

மேட்ச்சுக்கு ரெண்டு வாரத்துக்கு முன்னாடில இருந்து அட்வர்டைஸ்மென்ட் ஷூட் பண்றதுக்கு அனுமதி இல்லை. அதுவும் வருஷத்துக்கு மூனு தானாம். (அண்ணனுகளுக்கெல்லாம் இப்ப எப்படி இருக்கும்..:-0)

எடுத்த முடிவுகளிலேயே எனக்கு ரொம்ப பிடிச்சது டொமஸ்டிக் கிரிக்கெட் இனி அதிகமா ஆடுவாங்க. அதுவும் under 19 மாட்ச் இனி அதிகமா நடக்குமாம்.கண்டிப்பா எல்லாரும் குறிப்பிட்ட அளவு டொமஸ்டிக் கிரிக்கெட் ஆடனும். எல்லா ஸ்டேட் அசோசியேசன்சும் 'fast and lively" wickets தயார் பண்ண சொல்லி போர்ட் சொல்லி இருக்கு.

அவங்க எடுத்த முடிவுகள்

  • Rahul Dravid to captain team for next three tours
  • Performance based payment structure
  • Players can do a maximum of 3 endorsements
  • Ravi Shastri appointed Cricket Manager, Venkatesh Prasad as bowling coach, Robin Singh as fielding coach for Bangladesh tour
  • The frequency of under-19 tours will be increased
  • All state associations to have academies to develop young talent by April 2009
  • Cricket advisory committee set up with Sharad Pawar as its head and including seven former captains who attended Friday's meeting

ஸென் கதையில் அழகு

என்னை தம்பி [ ஹை... ஒரு தம்பி இங்க, தம்பி அண்ணான்னா நல்லா இல்ல :-)] 'அழகு' விளையாட்டுக்கு கூப்டு இருந்தார். எனக்கு அவ்வளவு எல்லாம் எழுத தெரியாது. அதனால இந்த கதையிலேயெ சொல்லிட்டேன். தேங்க்ஸ் அண்ணா.

ஒரு அழகான கார்டன். அத பார்த்துக்குறதுக்கு, பூ, செடி, கொடியில எல்லாம் ரொம்ப ஆர்வமா இருந்த ஒரு ப்ரீஸ்ட் வேலைக்கு வச்சாங்களாம். அவரும் கார்டன ரொம்ப நல்லா பார்த்துட்டார். எப்பவும் கார்ட்ன்லயெ இருந்து, குப்பையெல்லாம் கூட்டி, ஒரு இலை விழுந்தாகூட அத கூட்டி சுத்தம் பண்ணீடுவார். ஒரு நாள் அந்த கார்டனுக்கு ஒரு விருந்தாளி ஒருத்தர் வர்ரதா சொன்னாங்களாம். இவர் உடனே கார்டன இன்னும் அழகா செய்யனும்னு, வெளியே நீட்டீட்டு இருந்த கொடி எல்லாம் கத்திருச்சு, செடி எல்லாம் நல்லா கட்டி, தண்ணி எல்லாம் ஊத்தி கழுவி ரொம்ப சுத்தமா வச்சுட்டார்.

இந்த கார்டனுக்கு பக்கத்துல ஒரு ஸென் மாஸ்டர், வயசானவர் இருக்கார். அவருக்கு எப்பவும் இந்த பூசாரி வேலை செய்யறத ஆர்வமா பார்த்து சந்தோஷப்படுவார். அன்னைக்கும் அப்படித்தான் இவர் சுத்தம் செய்யறத பார்த்துட்டே இருந்து இருக்கார். வேலையெல்லாம் முடிச்சுட்டு ஸென் மாஸ்டர பார்த்து "எப்படி, இன்னைக்கு கார்டன் ரொம்ப நல்லா இருக்கு இல்ல..ஒரு இலை கூட கீழ இல்ல பாருங்க, செடி எல்லாம் கட் பண்ணி, அழகா வச்சிறுக்கேன்" என்று சொன்னாராம். அதுக்கு அந்த மாஸ்ட்ர் ''ஆமா இன்னைக்கு ரொம்ப நல்லா இருக்கு, ஆனா ஒரெ ஒரு குறை மட்டும் இருக்கு என்ன உள்ளே விட்டா நான் அத சரி செஞ்சுறுவே''ன்னு சொன்னாராம். மனசில்லாம பூசாரியும் மாஸ்டர உள்ளே விட்டார். மாஸ்டர் உள்ளே வந்து ஒரு மரக்கிளைய பிடிச்சு உலுக்கி, இலையெல்லாம் கீழே விழ வைச்சாராம். இருக்கமா கட்டி வச்சுறுக்கிற செடிய லூஸ் பண்ணி விட்டாராம். கட்டு லூஸ் ஆனதுனால, செடி பூ எல்லாம் காத்துக்கு ஆடி அழகா இருந்துச்சு. கீழே விழுந்து இருந்த இலைகளும் கலர் கலரா அழகா இருந்துச்சாம்.

"இப்ப பாருங்க, இது இன்னும் அழகா இருக்கு இல்ல" அப்படீன்னு கேட்டாராம். அதுக்கு அப்புறம் தான் பூசாரிக்கு தெரிஞ்சது, அழகுன்னா என்னன்னு. நான் ரொம்ப சிறமப்பட்டு செயற்கைய உருவாக்கீட்டு இருந்தேன், இலவசமா இயற்கை இத்தன அழகா இருக்கும் போதுன்னு சொன்னாராம்.

அப்புறம் அழகு பத்தி சொல்றப்போ, என் ஜூலி பத்தி சொல்லலைனா, அது டென்ஷனாயிடும். பாருங்க இது தான் என்னோட ஜூலி (டேஷான்ட்). குட்டியில எடுத்தது.




இப்போ அதுக்கு 7 வயசு ஆச்சு. ரொம்ப அழகா இருக்கும். அடிக்கடி சண்டை போட்டுப்போம், ஆனா அதுக்கு என்ன விட்டா யாரும் இல்லை, எனக்கும் அத விட்டா வேற வழி இல்லை. அதனால சிக்கிரம் பேசீடுவோம்.


அப்பப்போ ரொம்ப புத்திசாலின்னு நினப்பு வந்துடும் அதுக்கு. இல்லாத பந்தா எல்லாம் பண்ணும். அப்பதான் எனக்கு டென்ஷன் ஆகும். அதுவும் இங்க வந்தப்புறம், இங்க இருக்குற ஆளுக மாதிரியே இதுவும் கொஞ்சம் 'ஒரு மாதிரி' ஆயுட்டு வருது. ஆனா அது என்ன பண்ணாலும் அழகு தான். நைட்ல நாங்க எல்லாம் தூங்கின அப்புறம் கத்தும். அப்புறம் அம்மா ''ஹே.. ஜூலி பேசாம தூங்கு''ன்னு சொல்லனும்.. அப்பதான் அது தூங்கும்.. இது டெய்லி நடக்கும். அதுவும் அதுக்கு தெலுங்குல சொன்னாதான் புரியும்.... :-))).

இது தான் என்னோட அழகு பதிவு. நல்லா இருக்கா?

Friday, April 6, 2007

ஆப்டிமிஸம்.-ஸென் கதை-4


ஒரு தடவை ஜப்பானிய ஜெனரல், அவரோட படையோட ஒரு போருக்கு போயிட்டு இருந்தாராம். அவரோட படை ரொம்ப பலம் வாய்ந்தது. கண்டிப்பா போர்ல ஜெயிச்சுறுவோம்னு அவர் confidentஆ இருந்தார். ஆனா வீரர்கள் அவ்வளவு confidentஆ இல்லை. தோத்து போயிறுவோம்னு ஒரு பயம் அவங்களுக்கு. Battle fieldக்கு போற வழியில ஒரு கோயில்ல சாமி கும்பிட போனாங்களாம்.

சாமி கும்பிட்டு முடிச்ச அப்புறம் ஜெனரல் ஒரு காசு எடுத்து 'நான் இப்போ டாஸ் போடப்போறேன். பூ விழுந்தா நாம தோத்து போயிறுவோம், தலை விழுந்தா ஜெயிச்சுறுவோம்னு சொன்னாராம். வீரர்கள் எல்லாருக்கும் ஒரே டென்ஷன். தலை விழனும்னு கடவுள்கிட்ட வேண்டிட்டாங்க. ஜெனரல் டாஸ் போட்டார். தலை விழுந்துச்சு. வீரர்கள் எல்லாருக்கும் ஒரே சந்தோஷம். ஆஹா நாம் ஜெயிக்கப்போறோம்னு.

அதே சந்தோஷத்தோட போய் fight பண்ணி ஜெயிச்சுட்டாங்களாம். ஜெயிச்ச அப்புறம் அவரோட lieutenant சொன்னாராம்..' no one can change the distiny'. அதுக்கு ஜெனரல் சிரிச்சிட்டே 'ஆமா நமக்கு ஜெயிக்கிறதுக்கு வேண்டிய பலம் இருந்துச்சு, நாம ஜெயிக்கனும்ங்கிறது விதி' அப்படீன்னு சொல்லிட்டே அவர் டாஸ் பண்ண காச lieutenant கிட்ட காமிச்சாராம். அதுல ரெண்டு பக்கமும் தலை தான் இருந்துச்சாம்.

கவாஸ்கர் தேவை- கபில்தேவ்


கவாஸ்கர இந்திய கிரிக்கெட்டர்ஸ்க்கு கோட்சா இருக்க சொல்லி கபில்தேவ் சொல்ரார். கவாஸ்கர் தான் இந்திய கோட்ச்சா இருக்கிறதுக்கு சரியான ஆள் அப்படீன்னு சொல்லி இருககார். 'நான் விளையாடும் போது அவர் கிட்ட நிறைய அட்வைஸ் கேப்பேன். அவர் மாதிரி திறமை வாய்ந்தவங்க இப்ப கண்டிப்பா ஏதாவது செய்யனும். அவங்களாகவே முன்வந்து இந்த பொறுப்ப எடுத்துக்கனும். ஏன்னா இந்திய கிரிக்கெட் இத விட மோசமா போக முடியாது, இந்தியா வெளிநாட்டு கோட்ச் அப்பாயின்ட் பண்ணக்கூடாது' ன்னு சொல்லி இருக்கார். இப்ப இந்திய கிரிக்கெட் போர்ட் எல்லா பழைய கேப்டன்களையும் இன்னைக்கு கூப்டு இருக்காங்க இல்ல. அப்ப கவாஸ்கர பார்த்து கபில்தேவ் இத கண்டிப்பா சொல்வேன்னு சொல்லி இருக்கார்.
ஒருத்தர் மட்டும் இல்லாம ரெண்டு மூனு பேர் சேர்ந்து இந்த responsibility எடுத்துக்கனும்னு நினைக்குறேன். நீங்க என்ன நினைக்கீறீங்க.?

Wednesday, April 4, 2007

கிரிகெட்டை தடை செய்த கிராமங்கள்



உலக்கோப்பைல இருந்து இந்தியா வெளியே வந்ததுக்கு அப்புறம் ஹரியானா மாநிலத்தில 28 கிராமங்கள் கிரிக்கெட்ட தட செஞ்சிறுச்சாம். கபில்தேவ் மாதிரி பெரிய பெரிய கிரிக்கெட்டர்ஸ் எல்லாம் ஹரியானால இருந்து தான வந்தாங்க. ஆனா இப்ப இந்தியா மோசமா விளையாடினதுனால மனசு ஒடிஞ்சு போய், இனிமேல் ஹாக்கி, கபடி, புட்பால், வாலிபால், ரெஸ்ட்லிங் போன்ற விளையாடுக்கள் நாங்க ப்ரமோட் பண்ணப்போரோம்னு சொல்லி இருக்காங்க. அது மீறி கிரிக்கெட் விளையாடினா, சினிமால வர்ரமாதிரி ஊர விட்டு ஒதுக்கி வச்சுருவாங்களாம்....:-)). இந்த செய்திய தேவா சிங் அப்பட்டீன்னு ஒரு பஞ்சாயத்து தலைவர் சொல்லி இருக்கார்.

''நாட்டாமை, தீர்ப்ப மாத்துன்னு'' யாராவது சொல்லப்போறாங்க இப்ப..:-))


மேட்ச் ஃபிக்ஸிங் பற்றி ஸ்டீவ் வா

ஆஸ்திரேலியாவோட பழைய கேப்டன் ஸ்டீவ் வா, மேட்ச் fixing க்கு players தான் ஏதாவது செய்யனும்னு சொல்லி இருக்கார். ''இது கிரிக்கெட்ல இருக்க கூடாது, நேர்மையான வீரர்களுக்கு இது ரொம்ப வருத்தம் அளிக்கும் விஷயம்''னு சொல்லி இருக்கார்.

''ICCக்கு இத எப்படி நிறுத்தறுதுன்னு தெரியலை, பல வருஷங்களுக்கு முன்னால ஒரு கமிட்டி ஃபார்ம் பண்ணாங்க, ஆனா இது வரைக்கும் ஒன்னும் பண்ண முடியலை அவங்களால, அதனால இதுக்கு வீரர்கள் தான் முடிவு கட்டனும்னு'' சொல்லி இருக்கார். ''ஒவ்வொறு கிரிக்கெட் வீரரும், நான் நூறு சதவீதம் இதற்காக குரல் கொடுக்கிறேன்னு சொல்லி..ஒரு declaration கூட எல்லாரும் sign பண்ணலாம்''னு சொல்லி இருக்கார். இந்த மேட்ச் fixing னால கிரிக்கெட் விளையாட்டே பாதிக்கப்படுது, கொலைகளும் நடக்குதுன்னு சொல்ரார்.

''இப்ப பாகிஸ்தான் கோட்ச் பாப் உல்மர் கொல்லப்பட்டதற்கு பாகிஸ்தான் மட்டும் காரணமா இருக்காது, ரெண்டு மூனு நாடுகள் சம்பந்தப்பட்டிருக்கும்'' னு சொல்ரார்.

கிரிக்கெட் வீரர்கள் இந்த விளையாட்டு மேல ஒரு passion இருக்கிறதனால தான விளையாட வர்ராங்க. அதுனால அவங்க மனசு வச்சா இதற்கு ஒரு முடிவு கட்டலாம். ஆனா அவங்க தான் இதுக்கு help ம் பண்றாங்க. ஹ்ம்ம்.

ஸ்ட்ராபெர்ரி சுவை-ஸென்


ஒரு ஸென் மாஸ்டர் காட்டுக்குள்ள நடந்து போயிட்டு இருக்கும் போது ஒரு புலி துரதுச்சாம். அதுக்கு பயந்து ஒட்டிட்டே ஒரு மலை உச்சிக்கு போயிட்டாராம். இனி ஓடறதுக்கு இடம் இல்லை. எட்டிப் பார்த்தா பள்ளம். அப்போ பக்கத்துல இருந்த ஒரு கொடிய பிடிச்சு மேல ஏறீட்டார். அப்போ ரெண்டு எலிகள் அந்த கொடிய கடிச்சு திண்ண ஆரம்பிச்சதாம். கண்டிப்பா அந்த கொடி பிஞ்சு ஓடியத்தான் போகுது. ஆனா அவரோ கொடியில இருக்குற ஒரு ஸ்ட்ராபெரி பழத்த பரிச்சு தின்ன ஆரம்பிச்சாராம். எப்பவும் விட அது ரொம்ப சுவையா இருந்ததா நினச்சாராம் அவர்.

(:-))) என்னை மாதிரி.... திட்டு வாங்கும் போது ice-cream சாப்டா அது ரொம்ப டேஸ்டா இருக்கும்....)
Locations of visitors to this page