Friday, April 6, 2007

கவாஸ்கர் தேவை- கபில்தேவ்


கவாஸ்கர இந்திய கிரிக்கெட்டர்ஸ்க்கு கோட்சா இருக்க சொல்லி கபில்தேவ் சொல்ரார். கவாஸ்கர் தான் இந்திய கோட்ச்சா இருக்கிறதுக்கு சரியான ஆள் அப்படீன்னு சொல்லி இருககார். 'நான் விளையாடும் போது அவர் கிட்ட நிறைய அட்வைஸ் கேப்பேன். அவர் மாதிரி திறமை வாய்ந்தவங்க இப்ப கண்டிப்பா ஏதாவது செய்யனும். அவங்களாகவே முன்வந்து இந்த பொறுப்ப எடுத்துக்கனும். ஏன்னா இந்திய கிரிக்கெட் இத விட மோசமா போக முடியாது, இந்தியா வெளிநாட்டு கோட்ச் அப்பாயின்ட் பண்ணக்கூடாது' ன்னு சொல்லி இருக்கார். இப்ப இந்திய கிரிக்கெட் போர்ட் எல்லா பழைய கேப்டன்களையும் இன்னைக்கு கூப்டு இருக்காங்க இல்ல. அப்ப கவாஸ்கர பார்த்து கபில்தேவ் இத கண்டிப்பா சொல்வேன்னு சொல்லி இருக்கார்.
ஒருத்தர் மட்டும் இல்லாம ரெண்டு மூனு பேர் சேர்ந்து இந்த responsibility எடுத்துக்கனும்னு நினைக்குறேன். நீங்க என்ன நினைக்கீறீங்க.?

15 comments:

said...

//ஒருத்தர் மட்டும் இல்லாம ரெண்டு மூனு பேர் சேர்ந்து இந்த responsibility எடுத்துக்கனும்னு நினைக்குறேன். நீங்க என்ன நினைக்கீறீங்க.? //

இல்லப்பா எனக்கு சுத்தமா டைம் இல்ல:-))

said...

படிச்சதுக்கு தேங்க்ஸ் அபி அப்பா

said...

////ஒருத்தர் மட்டும் இல்லாம ரெண்டு மூனு பேர் சேர்ந்து இந்த responsibility எடுத்துக்கனும்னு நினைக்குறேன். நீங்க என்ன நினைக்கீறீங்க.? //

இல்லப்பா எனக்கு சுத்தமா டைம் இல்ல:-))

*******

//படிச்சதுக்கு தேங்க்ஸ் அபி அப்பா //

********

நீங்க புத்திசாலி! வாழ்த்துக்கள்!

said...

அபிஅப்பாவும் அவந்தியும் -ஒரு நாள் ரெண்டு பேரும் கிறுக்குல பெரிய கிறூக்கு நாங்க தாங்கறீங்க..
ஒரு நாள் புத்திசாலி நம்ம ரெண்டுபேரும் அப்படிங்கறீங்க...நடத்துங்க நடத்துங்க.

said...

''நீங்க புத்திசாலி! வாழ்த்துக்கள்!''

அபி அப்பா சொன்னது நிஜமாவே புரியலை...

அக்கா உண்மைய பேசறோம்..:-))

said...

இல்லை சகோ.மு.லெஷ்மி, இது ஒரு வார்த்தை விளையாட்டு, நிஜமாகவே குழந்தைகளை இதுக்கு பழக்கப்ப்டுத்தனும்.

10 நாள் முன்பு நான் அபியிடம் பேசிய போது:

நான்: அம்மாவிடம் கேட்கலாம்

அபி: லாம்

நாம்:ம்

பிறகு அமைதி.

நான்: என்ன பேச்சையே காணும்

அபி: நாம் புள்ளி வச்சேன், அது உங்களுக்கு கேக்கலை

*****இது போல பழக்கனும்.

நானும் கொத்ஸும் பேசும் போது கூட அது போல் நடக்கும்.

said...

/ஒருத்தர் மட்டும் இல்லாம ரெண்டு மூனு பேர் சேர்ந்து இந்த responsibility எடுத்துக்கனும்னு நினைக்குறேன். நீங்க என்ன நினைக்கீறீங்க.?
/
batting, bowling னு தனி தனி கோட்ச் வேணும் சொல்றீங்களா, தங்கச்சி?

இந்த கோட்ச் விசயத்தில ஏன் வெளிநாடு கோட்ச் வேண்டாம்.. இந்திய கோட்ச் இருந்தா நல்லா இருக்கும்-னு ஸ்ரீகாந்த், கபில் மாதிரி பெரிய தலைகளாம் நினைக்கிறாங்க-னு புரியல...who fits for this jobகிறது தான் முக்கியம். இது சம்பந்தம்மா infosys mentor நாராயண மூர்த்தி கட்டுரை பார்த்தேன். நல்லாதான் சொல்லிருக்காரு.
நீங்க படிச்சீங்களா, அவந்திகா! இல்லனா... உங்க மின்னஞ்சல் முகவரிதாங்க.. அனுப்பிவைக்கிறேன்.

said...

அபி அப்பா, nice conversation!
அபி கலக்குறாங்க! என்ன வயசு?

said...

39

said...

அபி அப்பா

:-)).... உங்களுக்கு குறும்பு ஜாஸ்தி

said...

இல்லப்பா நான் 3 ன்னுதான் டைப் செய்தேன் பக்கத்துல 9 வந்து ஒட்டிகிச்சு இலவச இணைப்பா:-))

said...

அபி அப்பா இதெல்லாம் நம்பற மாதிரியே இல்லை.
மூன்று பக்கத்துல எப்படி தானா 9 வரும்..அது ஒன்னும் பக்கத்துல இல்லயே தப்பிதமா டைப்படிக்க..


இன்னோன்னு 3 வயசு குழந்தை எப்படிங்க ம் ல புள்ளி விட்டேன்னு சொல்லும்...சும்மா நீங்க தான் கலந்தடிக்கிறீங்கன்னு நினைக்கிறேன். அவளுக்கு தமிழ் எழுதத்தெரியுமா அதுக்குள்ள...

ஆனா இந்த குழந்தைங்க வார்த்தை விளையாட்டுன்னு சொன்னீங்களே அது அட்டகாசமான ஒரு விஷயம் தான்.

said...

:-))))

அக்கா இந்த.. 3, 9...இது தான் நானும் கேக்கலாம்னு நினச்சு..அப்புறம் அபி பாபாவுக்காக விட்டுட்டேன்..

அந்த அண்ணாவோட வயச மறந்து போயி டைப் பண்ணிட்டார். :-))

said...

/முத்துலெட்சுமி said...
அபி அப்பா இதெல்லாம் நம்பற மாதிரியே இல்லை
/
நல்லா கேளுங்கங்க...;)
ஹலோ.... அபி அப்பா..ஹலோ...


/அந்த அண்ணாவோட வயச மறந்து போயி டைப் பண்ணிட்டார். :-))
/
இருக்கலாம்... அப்படினா.. மாத்தில போட்டுருக்கணும்...

said...

//தென்றல் said...
/முத்துலெட்சுமி said...
அபி அப்பா இதெல்லாம் நம்பற மாதிரியே இல்லை
/
நல்லா கேளுங்கங்க...;)
ஹலோ.... அபி அப்பா..ஹலோ...


/அந்த அண்ணாவோட வயச மறந்து போயி டைப் பண்ணிட்டார். :-))
/
இருக்கலாம்... அப்படினா.. மாத்தில போட்டுருக்கணும்... //

மூனும் தெரிஞ்சவங்க(எத்தனை நாளுக்கு தான் 4ம் தெரிஞ்சவங்கன்னு சொல்வது) முத்து லெஷ்மி வந்து ஏதாவது சொல்லி என்னய காப்பாத்துங்க:-))

Locations of visitors to this page