Wednesday, April 4, 2007

மேட்ச் ஃபிக்ஸிங் பற்றி ஸ்டீவ் வா

ஆஸ்திரேலியாவோட பழைய கேப்டன் ஸ்டீவ் வா, மேட்ச் fixing க்கு players தான் ஏதாவது செய்யனும்னு சொல்லி இருக்கார். ''இது கிரிக்கெட்ல இருக்க கூடாது, நேர்மையான வீரர்களுக்கு இது ரொம்ப வருத்தம் அளிக்கும் விஷயம்''னு சொல்லி இருக்கார்.

''ICCக்கு இத எப்படி நிறுத்தறுதுன்னு தெரியலை, பல வருஷங்களுக்கு முன்னால ஒரு கமிட்டி ஃபார்ம் பண்ணாங்க, ஆனா இது வரைக்கும் ஒன்னும் பண்ண முடியலை அவங்களால, அதனால இதுக்கு வீரர்கள் தான் முடிவு கட்டனும்னு'' சொல்லி இருக்கார். ''ஒவ்வொறு கிரிக்கெட் வீரரும், நான் நூறு சதவீதம் இதற்காக குரல் கொடுக்கிறேன்னு சொல்லி..ஒரு declaration கூட எல்லாரும் sign பண்ணலாம்''னு சொல்லி இருக்கார். இந்த மேட்ச் fixing னால கிரிக்கெட் விளையாட்டே பாதிக்கப்படுது, கொலைகளும் நடக்குதுன்னு சொல்ரார்.

''இப்ப பாகிஸ்தான் கோட்ச் பாப் உல்மர் கொல்லப்பட்டதற்கு பாகிஸ்தான் மட்டும் காரணமா இருக்காது, ரெண்டு மூனு நாடுகள் சம்பந்தப்பட்டிருக்கும்'' னு சொல்ரார்.

கிரிக்கெட் வீரர்கள் இந்த விளையாட்டு மேல ஒரு passion இருக்கிறதனால தான விளையாட வர்ராங்க. அதுனால அவங்க மனசு வச்சா இதற்கு ஒரு முடிவு கட்டலாம். ஆனா அவங்க தான் இதுக்கு help ம் பண்றாங்க. ஹ்ம்ம்.

5 comments:

said...

ICC, BCCI யுமே இதை விளையாட்டாக பார்க்காமல் ஓரு பணங்காய்ச்சி மரமாக எத்தனை விதமாக பணம் பண்ணலாமென ஆரம்பித்துவிட்ட பிறகு வெளிசக்திகளும் களத்தில் குதிப்பதை தவிர்க்க இயலாது....ஆளாளூக்கு முடிந்தவரையில் பணத்தை அள்ளுகிறார்கள்.....

இதில் அடிபட்டுப்போவது விளையாட்டும் அதை தீவிரமாய் காதலிக்கும் அப்பாவி ரசிகர்களும்தான்.....

said...

ஆமாண்ணா

இந்த sport ம் நாமளுந்தான் லூசுக..ம்ம்ம்..தேங்ஸ் படிச்சதுக்கு

said...

வா சொல்றது சரிதான் சகோதரி.

திருடனா பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.

said...

எனக்கு பிடிச்ச வீரர்களில் ஒருவர் ஸ்டீவ் வா(க்). அவர் எதையும் ஒளிவு மறைவின்றி பேசுவதுனாலையே எனக்கு பிடிக்கும். அவர் சொல்வது போல், வீரர்கள் நினைத்தாலொழிய இந்த ஃபிக்ஸிங்கை ஒழுக்க முடியாது.

Well said Steve.

said...

//மணிகண்டன் said...
வா சொல்றது சரிதான் சகோதரி.//


//Fast Bowler said
Well said Steve//

தேங்ஸ் அண்ணா..எனக்கும் ஸ்டீவ் வா ரொம்ப பிடிக்கும்...

Locations of visitors to this page