Thursday, March 29, 2007

E.T. the Extra-Terrestrial


1982 ல வந்த Steven Spielberg படம். இந்த வருஷம் படத்தோட Silver Jubillee year. 20 வருஷம் கழிச்சு 2002ல இந்த படம் சில மாற்றங்கள் பண்ணி மறுபடியும் ரிலீஸ் பண்ணாங்களாம். திங்கக் கிழமை Star Movies ல போட்டாங்க. அன்னிய உலகத்தில இருந்து சில பாடனிஸ்ட்ஸ் பூமிக்கு வர்ராங்க. பூமியில இருக்குற task force அவங்கள பார்த்தனால அவசர அவசரமா கிளம்பி போரப்போ ஒரு குட்டி ஏலியன மட்டும் விட்டுட்டு போயிடராங்க.

அந்த குட்டி ஏலியனுக்கு பூமியில எல்லாம் புதுசா இருக்கு. ஆனா லக்கிலி எலியட் அப்படீன்னு ஒரு 10 வயசு பையன் ப்ரெண்டு ஆயிடது. சீக்கிரம் எலியட்டோட அண்ணன் மைக்கேல், தங்கச்சி கிட்டேயும் ப்ரெண்ட் ஆயுடுது. பூமியோட சூழ்நிலைக்கு அது பழகி அவங்களோட நல்லா பேசவும் செய்யுது. ஆனா திரும்பி அவங்க ஊருக்கு போகனும்னு அதுக்கு மனசில. இவங்க மூனு பேரோட உதவியால அவங்க ஊருக்கு, அத வந்து கூப்டுட்டு போக சொல்லி ஒரு மெசேஜ் அனுப்புது. ரொம்ப home sick ஆகி, எலியட் கிட்ட Phone, home, phone ன் சொல்றப்ப பாவமா இருக்கும். ஒரு transmitter create பண்ணி எப்படியோ மெசேஜ் அனுப்பறாங்க


ஆனா அவங்க வர்ரதுக்குள்ள ETக்கு உடம்பு சரியில்லாம போய், எலியட்டுக்கும் உடம்பு சரியில்லாம போகுது.

Halloween Night அன்னைக்கு காட்டுகுள்ள போற அந்த சீன் தான் ரொம்ப நல்லா இருக்கும். ஒரு மலை மேல போறப்போ, ஈ.டி. சைக்கிளோட அப்படியே பறக்க செய்யும்.

அவங்க அம்மா சீக்கிரம் வந்துருங்கன்னு சொல்லி அனுப்பியும் ஈடி மெசேஜ் அனுப்பனும்னு அங்கேயே இருக்காங்க. அந்த ஃபாரஸ்ட்ல குளிர்ல எலியட்டுக்கும் உடம்பு சரியில்லாம போகுது. ஈடிக்கும் இந்த பூமியில இருக்குற pollution, அவங்க ஊர்காரங்க நியாபகம், gravity எல்லாம் சேர்ந்து உடம்பு சரியில்லாம போயி freeze ஆயிடும். அனுப்புன சிக்னலுக்கும் பதில வரலைன்னு ஈடி ரொம்ப சோர்ந்து போகுது. எலியட்டுக்கு ஒரே அழுகை. ஈடி அவன விட்டுட்டு சீக்கிரம் போயிடும்னு அவனுக்கு தெரிஞ்சு போச்சு. இந்த சீன் தான் ரொம்ப அழுகையா வரும். அப்ப எலியட் சொல்லுவான் 'நீ இங்கேயே என்னோடவே இருந்துறேன். உன்னை யாரும் ஒன்னும் பண்ணாம நான் பார்துக்குறேன்" னு சொல்லும் போது ஈடி home, home அப்படின்னு சொல்லும் (அதோட வீட்டுக்கு போறேன்னு சொல்லிம்). அத கேட்டு எலியட் அழுவான். அவன் அழுகறத பார்த்து அவன் கன்னம், காது எல்லாம் தடவி கொடுக்கும். ரொம்ப emotionalஆ இருக்கும் இந்த சீன்.

எலியட்டுக்கும் ஈடிக்கும் அடுத்த நாள் ட்ரீட்மென்ட் குடுக்கறாங்க. எலியட்டுக்கு நல்லா ஆயிடுது. ஆனா ஈடிக்கு இருக்க இருக்க உடம்பு மோசமாகுது. எலியட்டுக்கு ஈடியோட இருந்த அந்த communication ம் கம்மி ஆயிட்டே வருது.

ஈடிக்கு குடுக்குற ட்ரீட்மென்ட் எதுவும் அதுக்கு உதவாதுன்னு தெரிஞ்சு அதையெல்லாம் நிறுத்த சொல்லி எலியட் கத்துறான். எப்படியாவது ஈடிய இவங்ககிட்ட இருந்து காப்பாத்தி ஸ்பேஸ் ஷிப்ல விடனும்னு நினச்சு அவனோட ப்ரென்ட்ஸ் உதவியோட ஈடிய கூப்டுட்டு ஃபாரஸ்டுக்கு போறான். எல்லாரும் சைக்கிள் எடுத்துட்டு ஈடிய தப்பிக்க வைக்கறாங்க. ஒரு இடத்துல போலீஸ் gun எல்லாம் வச்சுட்டு ரோட் பிளாக் பண்ணுவாங்க. அப்ப ஈடி எல்லா சைக்கிளையும் பறக்க செய்யும். இது தான் ரொம்ப நல்லா இருக்கும்.

அங்க பாரஸ்டுக்கு கூட்டிட்டுபோய் அங்க ரெடியா இருக்குற ஸ்பேஸ் ஷிப்ல விடறாங்க. ஷிப்ல ஏறினதுக்கு அப்புறம் எலியட்டோட தங்கச்சி "Good bye ET" அப்படீன்னு சொல்லுவா. அதுக்கு அவளோட அண்ணன் மைக்கேல் ஈடிக்கு Good bye னா என்னன்னு தெரியாதுன்னு சொல்ல, அத கேட்டு ஈடி அந்த பொண்ணுகிட்ட அவளுக்கு பிடிச்ச வார்த்தையான "Be good"னு சொல்லும்.

அப்புறம் எலியட் கிட்ட வந்து அவனோட ஹார்ட் கிட்ட கை வச்சு நான் எப்பவும் இங்க இருப்பேன்னு சொல்றது ரொம்ப டச்சிங்கா இருக்கும்.

English படத்த பார்த்தா அழுவாச்சி வருமான்னு சொல்றவங்க இந்த படத்த பார்க்கனும்.


இந்த படம் வெறும் ஒரு ஏலியன் வந்துட்டு போற கதைய மட்டும் சொல்லாம..frenidship, love, tolerance and emotional bondage எல்லாத்தையும் சொல்லற மாதிரி எடுத்திருக்காங்க.

Tuesday, March 27, 2007

தப்பும் சரியும்....ஸென் கதை

ஒரு தடவை ஒரு ஸென் மாணவன் ஒருத்தன் திருடீட்டானாம். மத்தவங்கள்ளாம் டீச்சர் கிட்டே போய் சொல்லியிருக்காங்க. ஆனா டீச்சர் ஒன்னுமே சொல்லாம விட்டுட்டார். மறுபடியும் ரெண்டாவது தடவை அந்த மாணவன் திருடி இருக்கான். அப்பவும் திருடுன மாணவன டீச்சர் ஒன்னுமே சொல்லலையாம். மத்த மாணவர்களுக்கெல்லாம் ரொம்ப கோவம் வந்து திருடின பையன் மேல action எடுக்கலைனா நாங்க எல்லாம் இந்த ஸ்கூல விட்டு போயிடுவோம்னு ஒரு complaint எழுதி குடுத்தாங்களாம்.

அத படிச்சுட்டு டீச்சர் சொன்னாராம், உங்களுக்கு எல்லாம் எது தப்பு எது சரின்னு தெரிஞ்சு இருக்கு. அதனால சரியா நடந்துக்குரீங்க. ஆனா திருடுன மாணவனுக்கு தெரியலை. அவன வெளிய அனுப்புனா அவனுக்கு யார் சொல்லி குடுப்பாங்கன்னு கேட்டாராம். அதனால நீங்க எல்லாம் போனாலும் நான் கவலை பட மாட்டேன், இவன் தான் எனக்கு வேனும்னு சொல்லிட்டாராம்.

அத கேட்டுட்டு திருடுன மாணவன் தான் செஞ்ச தப்ப உணர்ந்து திருந்தீட்டான். மத்த மாணவர்களும் ஒற்றுமையா இருந்தாங்களாம்.

லூசு பொண்ணு.- Wierd.. :-))

ராதாக்காவும், சிந்தாநதி அண்ணாவும் weird gameக்கு என்னை கூப்டு இருக்காங்க. நானும் ரெண்டு நாளா யோசிசுட்டு இருக்கேன். என்ன எழுதறதுன்னே புரிய மாடேங்குது. ஊர்ல இருக்குற ப்ரெண்ட்ஸ்க்கு கூப்டு கேக்கலாம்னா..அதுக எல்லாத்தையும் சொல்லி என்னை totalaa confuse பண்ணீருவாங்க, அதனால நானே சொல்லிடறேன்.

என்னோட தூக்கம்-
தூங்கறது என்ன பெரிய விஷயம்னு நினைக்காதீங்க. இதுல யாராலும் என்னோட போட்டி போட முடியாது. Continuous ஆ 20 hrs சர்வ சாதாரணமா நானும் என் கஸின் மது அக்காவும் தூங்குவோம். ரெண்டு மாசம் முன்னாடி, அம்மா ஊருக்கு போயிருந்தாங்க. நல்ல peak winter. நான் ஸ்கூல்க்கு போயிட்டு வந்து கதவு, Screen எல்லாம் போட்டு, room heater போட்டு நல்லா தூங்கிட்டேன். (சாயந்திரம் 3 மணிக்கு). அப்பா 8 மணிக்கு வந்து கதவ தட்டி தட்டி பார்த்து...ஒன்னும் use இல்லை. ஜூலியும் என்னோட சேர்ந்து கெட்டுப் போச்சு..அதுக்கும் தூக்கம்...பாவம் அப்பா பயந்து, அழுது, அம்மாக்கு ஃபோன் பண்ணா, அம்மா சர்வ சாதாரணமா, அவ சொர்கத்துல சைக்கில் ஓட்டீட்டு இருப்பானு சொல்லி போன கட் பண்ணிட்டாங்க. அப்புறம் நான் தூங்கிட்டு இருக்கேன்னு ஒரு மணி நேரம் வெளியே உக்காந்துட்டு, கடைசியா ஒரு தடவை try பண்ணி பார்த்துட்டு, கதவ உடைச்சரலாம்னு அப்பா முடிவு பண்ணி தட்டுனாங்க. கதவோட நல்ல நேரம் முழிச்சுட்டேன்.

தூங்குனா நல்லா உளருவேன். LKG, UKG படிக்கும் போது இப்படி ஒரு தடவை தூக்கத்துல ஸ்கூல்ல சொல்லி குடுத்த rhyme சொல்லீட்டு இருந்தேனாம். நடுவுல நிறுத்திட்டேனு எல்லாரும் அடுத்த என்னன்னு கேட்டு இருக்காங்க. நான் Good Girl, அப்படியே continue பண்ணி rhyme fullaa சொல்லி முடிச்சுட்டேன் தூக்கத்திலேயே. இப்பவும் நல்லா உளருவேன். ஆனா வீட்ல ஒத்துக்க மாட்டேன். WWE விளையாடுவேன், அது என்னமோ maths formula, chemistry formula எல்லாம் தூக்கத்துல தான் நல்லா நியாபகம் வருது. முழிச்சுட்டா மறந்து போகுது. அதுனால தான் தூங்கிட்டே இருக்கேன்.... :-))

Theaterல போய் படம் பாக்குறது மட்டும் என்னால முடியாது. இது வரைக்கும் 4 or 5 times தான் போயிருப்பேன். அதுவும் கடைசியா போய் 2 வருஷம் இருக்கும். வீட்ல காமெடி படம் மட்டும் பார்ப்பேன். படம் பார்க்க பார்க்க அதுக்கு முன்னாடி என்ன நடந்ததுன்னு மறந்து போகும். அதுனால எதுக்கு வம்புன்னு காமெடி மட்டும் பார்ப்பேன். Popeye show, Tom and Jerry என்னோட favourites. WWE பார்த்தா பக்கத்துல யாரும் உக்கார முடியாது.

அப்புறம் Gems and Bourbon biscuits, அப்படியே சாப்பிடுவேன். பேக்கட் பேக்கட்டா இல்லை, பெட்டி பெட்டியா....எத்தன குடுத்தாலும். யாருக்கு குடுக்க மாட்டேன். கடைக்கு நான் போனா கேக்காமலே கடைக்காரர் எடுத்துக் குடுத்துறுவார்.

last but not the least...நான் இத சொல்லியே ஆகனும்... இதுக்காக தான் இந்த போஸ்டே போட்டேன்.....இத்தன நாள் இந்த லூசு பசங்கள போய் நம்பீட்டு இருந்தேன் பாருங்க. இப்ப தான் தெரியுது எவ்வளவு பெரிய weird ஆசைன்னு. நடக்குற காரியமா இது எல்லாம்..ஹ்ம்ம்ம்....அது நினச்சா தான்...'புள்ளி ராஜா' வந்து சொன்ன மாதிரி நான் லூசு பொண்ணுதான்.

Monday, March 26, 2007

எப்ப படிச்சு முடிப்பேன்....சென் (ZEN)

நான் சென் (Zen) கதைகள் சிலது படிச்சு இருக்கேன். பங்காளி அண்ணா இப்ப சென் பத்தி எழுதறார் இல்ல?...அத பார்த்துட்டு எனக்கும் அந்த குட்டி குட்டி கதைகள் இங்க சொல்லனும்னு தோனுச்சு. தென்றல் அண்ணாவும் சொல்ல சொல்லி கமெண்ட் போட்டு இருக்கார். அதனால எனக்கு நியாபகம் இருக்குற சென் கதைகள் பத்தி எழுதப்போறேன். போரடிச்சா சொல்லுங்க.. OK?

பங்காளி அண்ணா...with your wishes I am starting this

கதை..

சென் படிச்சுட்டு இருந்த ஒரு மாணவன் அவங்க டீச்சர் கிட்டே போய் "ஐயா, நான் நல்லா படிச்சா, சென் படிச்சு முடிக்க எவ்வளவு நாள் ஆகும்"னு கேட்டானாம். அதுக்கு டீச்சர் சொன்னாராம் '10 வருஷம் ஆகும்" னு.

மாணவன் -" ரொம்ப நல்லா படிச்சா?"

டீச்சர் - "20 வருஷம்"

மாணவன் - "இன்னும் கஷ்டப்பட்டு படிச்சா?"

டீச்சர் - "30 வருஷம்"

மாணவனுக்கு ஓன்னும் புரியலை. என்ன ஐயா இப்படி சொல்ரீங்கன்னு கேட்டானாம். அதுக்கு டீச்சர் சொன்னாராம்

"When you have your one eye on the goal, then you will have only one eye on the path to achieve it. Then you will lack concentration"

(இது தமிழ்ல எழுத தெரியலை, மன்னிக்கவும்)

Monday, March 19, 2007

NO TENSION PLEASE

இந்த Dravid வச்சுட்டு என்ன பண்ண..மறுபடியும் ஷேவாக்க எடுத்து கடுப்படிச்சுட்டு இருக்கார். சீக்கிறம் திரும்பி வந்தராலாம்னு ஐடியாவானு தெரியலை...

சச்சின்
கங்குலி
உத்தப்பா
திரேவிட்
ஷேவாக்
யுவராஜ்
தோனி
அகர்கர்
கும்ப்ளே
ஜாகீர் கான்
முனாஃப்


டாஸ் லூஸ் பண்ணிட்டோம்..முதல்ல நாம பவுளிங்க பண்ணி இருந்தா நமக்கு advantage. அவங்கள 150 உள்ள அவுட் பண்ணி, நாம அந்த டோட்டல 25 ஓவர்ல எடுத்து ரன் ரேட் ஜாஸ்தி பண்ணி இருக்கலாம். அப்ப ஈசியா 6 ரன் ரேட் வந்து இருக்கும். இப்ப 300+ எடுக்கனும். நம்ம அண்ணனுக என்ன பண்ணப் போறாங்களோ.

டாஸ் லூஸ் பண்ணப்பறம் திராவிட் முகமே சரியில்லை. Confidence இருக்குற மாதிரியே தெரியலை. பிட்ச்ல moisture இருக்கு.

கும்ப்ளே இருக்குறது ஒரு ஆறுதல்.

பெர்முடா கேப்டன் Irvine Romaine, "Some of the smaller nations are showing what they can do and we would love to join in the upsets அப்படீன்னு சொல்லி இருக்கார். ஹ்ம்ம்ம்....இது எல்லாம் கேக்க வேண்டி இருக்கு. அது கரெக்ட் தானே. இந்த கிரவுண்ட்ல 250 -270 தான் எடுக்க முடியும்னு சொல்றாங்க.

நாம happy ஆ feel பண்றதுக்கு இதோ ஒரு விஷயம்...

I can honestly say that we have a player called Lionel Cann," says Bermuda skipper Irving Romaine. "He loves India. He has named his child India. His biggest player is actually Tendulkar. Right now I'm hoping Tendulkar does not hit a catch to him because he will probably drop it to watch him bat." -The Hindu

இதுல அந்த மந்திரா பேடி வேற அப்பப்ப 'புத்திசாலிதனமான கேள்விகள்' கேட்டு, expert comments குடுத்து, எல்லாரையும் 'அசர' வச்சுட்டு இருக்கு..கஷ்டம்


இந்த போஸ்ட் முடிக்கறுதுக்குள்ள ஒரு விக்கெட்.



NO TENSION PLEASE..SAY CHEEEEESSSEEEEE.. ஹி..ஹி..ஹி..

DISTURBED PAKISTAN

பாகிஸ்தான் கேப்டன் இன்ஜமாம் ODI இல் இருந்து Retirement announce பண்ணிட்டார். அவங்க கோச் லேட் பாப் வுல்மெர் கிட்ட முதல்லேயே பேசினாராம். Inzy has scored 11,663 runs in 376 ODIs for Pakistan, slamming 10 centuries and 83 half centuries. Zimbabwe match தான் கடைசி மேட்ச்னு சொல்லி இருக்கார். லேட் பாப் உல்மர்க்காக நாங்க அடுத்த மேட்ச் விளையாடறோம்னு சொல்லி இருக்கார்.

பாகிஸ்தான் டீம் இப்ப ரொம்பவே டவுன் ஆகி இருப்பாங்க. பாவம்.


பாப் உல்மர்க்கு எத்தன pressure and stress இருந்து இருக்கும். அவர் "Doing it internationally, it takes a toll on you" னு சொல்லி இருக்கார்.நம்ம டீம் நல்லா விளையாடலைனா நமக்கு வருத்தம் இருக்கத்தான் செய்யும். இவ்ளோ செலவு செஞ்சு அவங்கள அனுப்புறோம், such an important sporting event, so our expectation will naturally be high. அவங்களும் கொஞ்சமாவது responsible ஆ ஆடனும். அது இல்லைங்கிற போது தான் மக்கள்க்கு கோவம் வருது. ஆனா இப்ப பாப் உல்மர் இறந்ததுக்கு அப்புறம் அத express பண்றதுக்கு ஒரு அளவு இருக்கனுமோனு தோனுது. இங்க நம்ம நாட்ல டோனி வீட்டையும் அடிச்சு நொறிக்கீட்டாங்க. வுல்மர் இறந்தது, பாகிஸ்தானுக்கு மட்டும் இல்லை, மத்த டீமையும் கொஞ்சம் affect பண்ணும்.

"I am shocked and badly hurt. We have lost a good coach and a good person."-Inzamam-ul-Haq

He's given a lot to Pakistan cricket, he brought them from nowhere to the top." Waqar Younis.

"One of our 12th men bringing drinks out told us about it. Everyone just stood back in shock for quite a while. When I was out in the field I was thinking about lots of different things for probably the last 10 or 12 overs of the game. Everybody was immediately saddened by what we heard. We have played a game of cricket, but there are a lot of bigger things happening around the world. "Ricky Ponting

Bob Woolmer had such a massive influence on my cricket career, and I know that there are countless cricketers around the globe who are just as devastated as I am by his sudden passing. Bob literally gave his life for the game he loved so dearly. My thoughts and prayers are with Gill and the family."Jonty Rhodes

நம்ம நாட்லேயும், பாகிஸ்தான்லேயும், இதுக்கு முன்னாடி இது போல நல்ல perform பண்ணலைனா மக்களோட reaction எப்படி இருந்ததுங்கிறத நினச்சு பார்த்ததுனால தான் உல்மர்க்கு இது மாதிரி ஆகிறுச்சுனு நினைக்குறேன்.

Performance நல்லா இல்லைனா நாம நம்மளோட comments express பண்ணலாம், கோவப்படலாம், but within limits.


On behalf of Cricket bloggers Condolences, thoughts and prayers

for Bob Woolmer and the family

Sunday, March 18, 2007

லூசு பசங்க...

Shock.. கோவம், ஏமாற்றம் எல்லாத்துக்கும் மேல I couldnt belive it...

இவ்வ்வ்வ்ளோ நாள் wait பண்ணி, நம்ம ஆளுக பின்னப் போறாங்கன்னு, எல்லார்த்துக்கிட்டேயும் பந்தா விட்டு, Home Work , Project Work எல்லாம் சீக்கிரம் முடிச்சு, தூங்காம இருக்கிறதுக்கு எனக்கும் அப்பாக்கும் ஏதாவது கலந்து குடுக்க சொல்லி அம்மா கிட்ட கேட்டு, (கடைசியில திட்டு வாங்கி)....மேட்ச் பார்க்க உட்கார்ந்தா, Mashrafe Mortaza பின்னிட்டார்.


சொன்ன மாதிரி Mashrafe Mortaza superb ஆ பவுளிங்க் போட்டு, நம்ம playersஅ தினர அடிச்சுட்டார் இல்ல?....கண்டிப்பா இவர் பெரிய ஆளா வரப் போரார்... பேட்ஸ்மேன அடேக் பண்ணி, பவுன்ஸர் போட்டு பயங்கரமா போடுரார்...

நாம பேட்டிங்க முதல்ல பண்ணது தப்பா?... அப்படியெல்லாம் இல்லைனும் சொல்றாங்க...லூசு பசங்க..லைனா parade மாதிரி திரும்பி வந்துட்டாங்க... நம்ம DADA தான் ஏதோ கொஞ்சம் ஆடி இருக்கிறார். யுவராஜ் was good and confident, ஆனா அவரையும் Razzak அனுப்பிட்டார்...

குட்டிப் பையன் Tamim Iqbal, 17 yrs தான் ஆச்சாம் அவனுக்கு...என்னா அடி அடிச்சுட்டான்....

அவங்க நல்லா confident ஆ இருக்காங்க...committed and determined...இது எல்லாம் நம்ம Players கிட்ட இருக்கானு தெரியலை....

இருந்தாலும் நாமளே அவங்கள கைவிடக்கூடாது..

அதுனால


Failure is the first step towards success....:-)))....


Munaf Musa Patel


Munaf Musa Patel
Born July 12, 1983, Ikhar, Gujarat
Bowling style Right-arm medium-fast
Best - 4/49
இது வரைக்கும் ரெண்டு விக்கட் எடுத்துட்டார்.

Saturday, March 17, 2007

INDIA VS BANGLADESH

NO COMMENTS - :-((((....

நம்ம முதல் மேட்ச்...

At last...much awaited is going to start

நம்ம முதல் மேட்ச் ஆரம்பம் ஆகப் போகுது.... :-))..

பங்களாதேஷுக்கு எதிரா இந்தியா நல்லா விளையாடியிருக்காங்க.. பயந்துக்குறதுக்கு ஒன்னும் இல்லை...கங்குலியின் ஸ்கோர் பங்களாதேஷுக்கு எதிரா ரொம்ப நல்லா இருக்கு..( avg-56.14). உலக கோப்பையின் முதல் போட்டிகள்ல நம்ம சச்சின் averag 80.67....

ஆனா பங்களாதேஷும் சாதாரண டீம் இல்லை..warm up matchல நல்லா விளையாடினாங்க..அவங்க டீம்ல இருக்குற இளம் ஆட்டக்காரர்கள் ஃபீல்டிங்க் நல்லா செய்யராங்க..

Manjural Islam Rana

Manjural Islam Rana, Bangladesh Bowler, ஒரு விபத்துல இறந்துட்டாராம்....பாவம்.. எத்தன முயற்சி எடுத்து இருப்பார் இது வரைக்கும்.. என்ன எல்லாம் கனவு கண்டிருப்பார்.. எல்லாம் ஒரு நிமிஷத்தில போயிருச்சு..அவங்க டீம்ல இருக்கறவுங்க அழுதாங்களாம்.....படிச்சுட்டு மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு..

2001/02 ல, இந்தியா, Port of Spain ல மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரா first batting செய்து, வெறும் 123 ரன் தான் எடுக்க முடிஞ்சது.. இங்க விளையாடின 9 மேட்ச்ல, 2 மேட்ச் தான் இந்தியா ஜெயிச்சு இருக்கு...

Mashrafe Mortaza தான் இன்னைக்கு பலர் கவனத்த ஈர்க்க போறவர்....வேகப் பந்து வீச்சாளர்... இவரும் பதானும் ப்ரெண்ட்ஸ்....

இது என்னோட டீம் இன்னைக்கு...நீங்க என்ன சொல்றீங்க.?

கங்கூலி
உத்தப்ப்பா
சச்சின்
திராவிட்
யுவராஜ் சிங்
டோணி
பதான்
ஹர்பஜன்
கும்ப்ளே
முனாஃப் படேல்
ஜாகிர் கான்

Hindu ல இன்னைக்கு 4 bowlers தான் இருப்பாங்கன்னு போட்டு இருக்காங்க...பார்க்கலாம்....

Best Wishes India

Friday, March 16, 2007

எங்க ஸ்கூல் அஞ்சு ஜார்ஜ்....

எங்க Schoolல 1oth Std ல ரிப்போர்ட் கார்ட்ல, எங்களுக்கு ஸ்போர்ட்ஸ் grade குடுக்கறதுக்கு நிறைய டெஸ்ட் வைப்பாங்க. ஒவ்வொறு கிளாஸ்க்கும் தனி தனியா இந்த டெஸ்ட் வச்சு, வருஷ கடைசியில கிரேட் குடுப்பாங்க. இதுல எல்லாரும் compulsary யா கலந்துக்கனும்.

முதல் டெஸ்ட் நீளம் தாண்டுதல் (long jump). நான் தானே ரோல் நம்பர் ஒன்.. அதனால எல்லாத்துக்கும் முதல்ல மாட்டிக்குவேன்.. நான் தாண்டி முடிச்சதும் அடுத்தது என் close friend, ஜம்ப் பண்ணா. தாண்டி முடிச்ச அப்புறம், கிளாஸ் பசங்க ரீடிங் எடுத்து, மிஸ் கிட்ட வந்து, 7.5 mtrsனு சொன்னாங்க. மிஸ்சுக்கு ஒரே ஆச்சரியம்., "நிஜமாவே 7.5 mts ஆ, அஞ்சு ஜார்ஜ் கூட 7.5 mts தாண்டலை..அது எப்படி நம்ம ஸ்கூல்ல இப்படி ஒரு பொண்ணா...நான் பார்க்கனும் அந்த பொண்ண கூப்பிடுங்க"ன்னு சொன்னாங்க....

என் friend க்கே நம்ப முடியலை...ஆனா மிஸ் கிட்ட போய் சொல்லாம, நமக்கு என்ன, கிரேட் வரட்டும்னு அவ பேசாம இருந்தா... என்னாலும் நம்ப முடியலை ... அவ குதிக்கறதுக்கு ஓடி கூட வரலை..நடந்து வந்து அந்த லைனுக்கு முன்னாடி, ஒரு step மட்டும் எடுத்து வச்சு, படம் காமிச்சுட்டு போயிட்டா...எப்படி 7.5 mts னு எனக்கே ஷாக்...

அப்புறம் நாங்க நம்ப முடியாம இன்னொரு தடவை எல்லா பசங்களையும் கேட்டு பார்த்தா ..... அது just....0.75 mts...

அந்த 10 நிமிஷத்துக்குள்ள என் freind Arjuna Award வரைக்கும் போயிட்டா...கனவுல..

Wednesday, March 14, 2007

சச்சின்

1989-90 ல் சச்சின் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டி


சச்சினின் முதல் டெஸ்ட் சதம்

1990ல் இங்கிலாந்துக்கு எதிராக Manchester ல் நடந்த இரண்டாவது டெஸ்டில் சச்சின் முதல் சதம் அடித்தார்.

ஒரு நாள் ஆட்டத்தில், Man of the Match அவார்ட் இது வரை 53 முறை வாங்கியுள்ளார்...

ஒன்பது முறை Sharjha விலும் , 10 முறை ஆஸ்திரேலியாவிற்கு எதிராகவும் Man of the Match award பெற்றுள்ளார்.


சச்சினைப் பற்றி இவங்க எல்லாம்....

Sir Donald Bradman
"I saw him playing on television and was struck by his technique, so I asked my wife to come look at him. Now I never saw myself play, but I feel that this player is playing much the same as I used to play, and she looked at him on Television and said yes, there is a similarity between the two...his compactness, technique, stroke production... it all seemed to gel !"

David Boon
''Technically he stands out as the best because of his ability to increase the pace at will''

Dennis Lillee
"If I've to bowl to Sachin, I'll bowl with my helmet on. He hits the ball so hard"

Steve Waugh
"You take Don Bradman away and he is next up I reckon."

Shane Warne
"I'll be going to bed having nightmares of Sachin just running down the wicket and belting me back over the head for six. He was unstoppable. I don't think anyone, apart from Don Bradman, is in the same class as Sachin Tendulkar. He is just an amazing player."

Steve Waugh: (after being defeated in the Coca Cola Cup finals in Sharjah)
"It was one of the greatest innings I have ever seen. There is no shame being beaten by such a great player, Sachin is perhaps only next to the Don''.

Australian Media
"The most exciting batsman of his time because he finds the right balance between reason and passion, technique and power, nerves and placement and judgement that applies to all tastes."

Sachin சொன்னது...
Memorable Day: Beating Pakistan in the 1992 World Cup
Worst Day: Losing the first ODI in RSA in 1992
Heroes: Gavaskar, Viv Richards, Imran Khan, Sandeep Patil
Greatest Influence: My family
Current Players Admired: Vinod Kambli, Brian Lara, Jonty Rhodes
Favourite Ground: Sydney Cricket Ground
Least Favourite Ground: Bangalore
Changes to Improve: None! I enjoy the game!
Funniest Moment: batting with Vinod Kambli in a school game. Vinod dropped his bat and started to fly a kite.
Other Sports Followed: tennis in particular.
Hobbies: Collect CD's
Other Stars: Maradona, Boris Becker
Favourite Actors: Amitabh Bachchan, Madhuri Dixit, Nana Patekar
TV Show: None in particular
Film: Coming To America
Spare Time: Listening to peaceful music, with friends.
Embarrassing moment: People asking for my autograph and then asking me my name!
Music: Pop
Hates: Rumours
Car: Maruti Food: Steak Drink: Orange/Apple Juice and Water
Favourite Restaurant: Bukhara, Maurya Sheraton, New Delhi Holiday Resort: Yorkshire, Headingley Hotel: Park Royal Darling Harbour,
Sydney Clothes: official - jacket and tie;casual- jeans and t-shirt
Wildest dream: Listen to loud music and watch movies. And then in the evening, go for a very long drive.
Newspapers: Times of India, Mid-day, Afternoon Dispatch
Authors: Haven't started reading books yet!
Magazines: Sportstar
Motto: Be true to yourself

Saturday, March 10, 2007

World Cup 2007

கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள் 1975 முதல் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடந்து வருகிறது. முதல் உலகக் கோப்பை இங்கிலாந்தில் நடை பெற்றது. ஆஸ்த்ரேலியா அதிகமாக 3 முறையும், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் தலா ஒரு வருடமும் வென்று வந்திருக்கிறது. 1983 முபு வரை 60 ஓவர்களாக இருந்த போட்டி, உலகக் கோப்பை போட்டிக்கு பின்னர் இது 50 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 2007 ஆம் ஆண்டின் உலகக்கோப்பை மேற்கிந்திய தீவு நாடுகளில் நடைபெற உள்ளது உங்களுக்கு தெரிந்ததே.
சுவாரஸ்யமா ஆரம்பிச்சு இருக்கும் இந்த உலகக் கோப்பையை பார்க்க, உங்களைப் போலவே நானும் ஆர்வமா இருக்கேன்.
நம்ம டீம் வெற்றி பெற வாழ்த்துக்கள்..
Best Wishes Team India

வணக்கம்

அண்ணா, அக்கா எல்லாருக்கும் வணக்கம்

கிரிக்கெட் எனக்கு ரொம்ப பிடிக்கும். அதை உங்ககிட்ட பகிர்ந்து கொள்ள நான் எடுக்கும் ஒரு முயற்சி. எனக்கு பிடித்த, பிடிக்காத வீரர்கள், நாடு, ஆட்டம், பற்றி பகிர்ந்து கொள்ள ஆசை. நேரம் கிடைக்குற போது கிரிக்கெட் பற்றி உங்க கிட்ட பிளாக் மூலமா, உங்க சப்போர்ட்டோட டிஸ்கஸ் பண்றேன். கிரிக்கெட் பற்றி இங்க இருக்கிற ஆர்டிக்கல்ஸ் எல்லாம் நான் படிச்சுட்டு வர்ரேன்.
நன்றி
Locations of visitors to this page