Saturday, March 17, 2007

நம்ம முதல் மேட்ச்...

At last...much awaited is going to start

நம்ம முதல் மேட்ச் ஆரம்பம் ஆகப் போகுது.... :-))..

பங்களாதேஷுக்கு எதிரா இந்தியா நல்லா விளையாடியிருக்காங்க.. பயந்துக்குறதுக்கு ஒன்னும் இல்லை...கங்குலியின் ஸ்கோர் பங்களாதேஷுக்கு எதிரா ரொம்ப நல்லா இருக்கு..( avg-56.14). உலக கோப்பையின் முதல் போட்டிகள்ல நம்ம சச்சின் averag 80.67....

ஆனா பங்களாதேஷும் சாதாரண டீம் இல்லை..warm up matchல நல்லா விளையாடினாங்க..அவங்க டீம்ல இருக்குற இளம் ஆட்டக்காரர்கள் ஃபீல்டிங்க் நல்லா செய்யராங்க..

Manjural Islam Rana

Manjural Islam Rana, Bangladesh Bowler, ஒரு விபத்துல இறந்துட்டாராம்....பாவம்.. எத்தன முயற்சி எடுத்து இருப்பார் இது வரைக்கும்.. என்ன எல்லாம் கனவு கண்டிருப்பார்.. எல்லாம் ஒரு நிமிஷத்தில போயிருச்சு..அவங்க டீம்ல இருக்கறவுங்க அழுதாங்களாம்.....படிச்சுட்டு மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு..

2001/02 ல, இந்தியா, Port of Spain ல மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரா first batting செய்து, வெறும் 123 ரன் தான் எடுக்க முடிஞ்சது.. இங்க விளையாடின 9 மேட்ச்ல, 2 மேட்ச் தான் இந்தியா ஜெயிச்சு இருக்கு...

Mashrafe Mortaza தான் இன்னைக்கு பலர் கவனத்த ஈர்க்க போறவர்....வேகப் பந்து வீச்சாளர்... இவரும் பதானும் ப்ரெண்ட்ஸ்....

இது என்னோட டீம் இன்னைக்கு...நீங்க என்ன சொல்றீங்க.?

கங்கூலி
உத்தப்ப்பா
சச்சின்
திராவிட்
யுவராஜ் சிங்
டோணி
பதான்
ஹர்பஜன்
கும்ப்ளே
முனாஃப் படேல்
ஜாகிர் கான்

Hindu ல இன்னைக்கு 4 bowlers தான் இருப்பாங்கன்னு போட்டு இருக்காங்க...பார்க்கலாம்....

Best Wishes India

4 comments:

said...

அவந்திகா,

மஞ்சூருல் இஸ்லாமின் மரணம் பங்களாதேஷ் அணியை நிலை குலையச்செய்திருக்கும். பாவம் அவர்கள். :( இந்நிலையில் இன்றைய முதல் ஆட்டம். சொல்லவும் வேண்டுமா இந்தியா வெல்லும் என்று.

said...

ஸ்பின்னர்ல யாராவது ஒருத்தரை உக்கார வச்சிட்டு அந்த இடத்தை ஷேவக்குக்கு கொடுக்கலாம்ங்றது என்னோட ஐடியா....ஏன்னா இந்த மாதிரி ச்சின்ன டீம் கூட விளையாடினா ஷேவாக்கோட Confidence அதிகரிக்க வழியிருக்கு....என்ன பண்றது நல்ல விளையாண்ட பயபுள்ள இப்ப சொதப்புது....ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் அவந்திகா....என்ன சொல்றீங்க?

said...

பங்காளி அண்ணா warm up match ல கூட நல்லா விளையாடலை...
எப்பவும் ஸ்பின்னர்ஸ் ரெண்டு பேர் இருந்தா நல்ல இருக்கனும்னு நான் நினப்பேன்..ஆனா நீங்க சொல்றது சரி..to rise his confidence, this could be the right moment.... ஆனா கண்டிப்பா இந்த முறை ஏமாத்தமாட்டார்னு தோனுது...

Fast bowler...

yes...that loss will have an affect on today's paly

said...

அண்ணா நீங்க சொன்ன மாதிரியே சேவாக் இருக்கார்....

நல்லா விளையாடனும்

Locations of visitors to this page