Friday, March 16, 2007

எங்க ஸ்கூல் அஞ்சு ஜார்ஜ்....

எங்க Schoolல 1oth Std ல ரிப்போர்ட் கார்ட்ல, எங்களுக்கு ஸ்போர்ட்ஸ் grade குடுக்கறதுக்கு நிறைய டெஸ்ட் வைப்பாங்க. ஒவ்வொறு கிளாஸ்க்கும் தனி தனியா இந்த டெஸ்ட் வச்சு, வருஷ கடைசியில கிரேட் குடுப்பாங்க. இதுல எல்லாரும் compulsary யா கலந்துக்கனும்.

முதல் டெஸ்ட் நீளம் தாண்டுதல் (long jump). நான் தானே ரோல் நம்பர் ஒன்.. அதனால எல்லாத்துக்கும் முதல்ல மாட்டிக்குவேன்.. நான் தாண்டி முடிச்சதும் அடுத்தது என் close friend, ஜம்ப் பண்ணா. தாண்டி முடிச்ச அப்புறம், கிளாஸ் பசங்க ரீடிங் எடுத்து, மிஸ் கிட்ட வந்து, 7.5 mtrsனு சொன்னாங்க. மிஸ்சுக்கு ஒரே ஆச்சரியம்., "நிஜமாவே 7.5 mts ஆ, அஞ்சு ஜார்ஜ் கூட 7.5 mts தாண்டலை..அது எப்படி நம்ம ஸ்கூல்ல இப்படி ஒரு பொண்ணா...நான் பார்க்கனும் அந்த பொண்ண கூப்பிடுங்க"ன்னு சொன்னாங்க....

என் friend க்கே நம்ப முடியலை...ஆனா மிஸ் கிட்ட போய் சொல்லாம, நமக்கு என்ன, கிரேட் வரட்டும்னு அவ பேசாம இருந்தா... என்னாலும் நம்ப முடியலை ... அவ குதிக்கறதுக்கு ஓடி கூட வரலை..நடந்து வந்து அந்த லைனுக்கு முன்னாடி, ஒரு step மட்டும் எடுத்து வச்சு, படம் காமிச்சுட்டு போயிட்டா...எப்படி 7.5 mts னு எனக்கே ஷாக்...

அப்புறம் நாங்க நம்ப முடியாம இன்னொரு தடவை எல்லா பசங்களையும் கேட்டு பார்த்தா ..... அது just....0.75 mts...

அந்த 10 நிமிஷத்துக்குள்ள என் freind Arjuna Award வரைக்கும் போயிட்டா...கனவுல..

14 comments:

said...

ஹைய்யோ ஹைய்யோ.. :))))

அவந்திகா, உண்மையச் சொல்லுங்க, அந்த ப்ரெண்டே நீங்க தானே ;)

said...

ஹா ஹா

அக்கா....என் அம்மா பேரு தான் அந்த பொண்ணுக்கும்.. அந்த பேர நான் டைப் பண்ண அப்புறம்..அம்மா முறைச்சாங்க..:-((...சுதந்திரமா ஒன்னும் எழுத விட மாட்டேங்கிறாங்க.
அதனால சும்மா ப்ரெண்ட்னு மட்டும் போட்டேன்...

அக்கா..நான் ஜாவலின் சேம்பியன் எங்க school ல... 4 வருஷமா...
நிஜமாக்கா.. நம்புங்க..(dont ask me how many participated in the event)

said...

நல்ல கலாட்டா தான்!

//
அக்கா..நான் ஜாவலின் சேம்பியன் எங்க school ல... 4 வருஷமா...
நிஜமாக்கா.. நம்புங்க..
//
வாழ்த்துக்கள்-னு சொல்ல வந்தேன்..
"
(dont ask me how many participated in the event)"

இப்படி 'புதிரா' முடிச்சேட்களே ??
இருந்தாலும்...நம்புறேன்..

வாழ்த்துக்கள்!! :)

said...

//நான் தானே ரோல் நம்பர் ஒன்.. அதனால எல்லாத்துக்கும் முதல்ல மாட்டிக்குவேன்.. //
A-ல பேர் இருந்தா இந்த மாதிரி சில பிரச்சனையும் இருக்கு, நன்மைகளும் இருக்கு அவந்திகா :) .

//உண்மையச் சொல்லுங்க, அந்த ப்ரெண்டே நீங்க தானே ;) //
எனக்கும் அதே சந்தேகம் தான் :)

said...

\\சுதந்திரமா ஒன்னும் எழுத விட மாட்டேங்கிறாங்க. //
என்ன அங்க அதிகாரமா பக்கத்துல
இடுப்புல கைவச்சுகிட்டு
அதட்டறாங்களா
என்கிட்ட சொல்லும்மா நான்
பாத்துக்கறேன் அவங்கள.
வளரவிட மாட்டாங்களே.

said...

//அது just....0.75 mts... ///

நல்லா பார்த்தீங்களா *just 7.5cm* ஆ இருந்திருக்கப் போகுது :)

//A-ல பேர் இருந்தா இந்த மாதிரி சில பிரச்சனையும் இருக்கு, நன்மைகளும் இருக்கு ///
என்ன நன்மைகள்னு கொஞ்சம் சொல்லுங்க மணி

said...

அவந்திகாவை சுதந்திரமா எழுத விடும்படி நான் சொன்னதா உங்க அம்மாகிட்டே சொல்லுங்க. நான் சொன்னா உங்க அம்மா கேட்டு நடப்பாங்களான்னு திருப்பி கேக்காதீங்க :)

said...

சகோதரி அவந்திகாவை சுதந்திரமாக ப்ளாக்காற்ற விடாமல் தடுக்கும் 'அம்மா' வை கண்டிக்கிறோம். :-)))

said...

தென்றல் அண்ணா..

6 பேர் தான் கலந்திகிட்டாங்க...ஆனா 4 வருஷம் வாங்கி இருக்கேனே.. இங்க எங்க வீட்ல Once upon a time..loooooooooooooooooong lonnnng ago..lemon & spoon ல ஜெயிச்சதுக்கு எல்லாம் ஒலும்பிக் ரேஞ்சுக்கு ஷோ உட்டுட்டு இருக்காங்க
அதுக்கு நான் பரவாயில்லை இல்ல..
:-))

மணிகண்டன்...நீங்க எல்லாம் நம்பனும்

லட்சுமி அக்கா...நீங்க இருக்கும் போது எனக்கு என்ன பயம்.. நம்ம 'FANS' எல்லாம் அங்க இருக்காங்க இல்ல..இங்க அனுப்பி வைங்க..

Abul anna..thanks..

said...

கலை அக்கா..பங்காளி அண்ணா..

இது எல்லாம் படிச்சதுக்கு அப்புறம் அம்மாக்கு புரிஞ்சு இருக்கும்.. நான் யாருன்னு...thanks anna..

said...

நீ கவலைப்படாதேம்மா! நாங்க இருக்கோம் உனக்கு சப்போட்டா:-)) நீ தைரியமா எழுது(அம்மான்னா கொஞ்சம் அப்டிதான்..கண்டுக்ககூடாது:-)))

said...

//நீ கவலைப்படாதேம்மா! நாங்க இருக்கோம் உனக்கு சப்போட்டா//

thanks anna...:-)))....எனக்கு பின்னாடி அதிரடிப்படை இருக்கு..

said...

//எனக்கு பின்னாடி அதிரடிப்படை இருக்கு//

அதிரடிப்படை என்ன? ஆவியுலகமே இருக்கு!

கவலைப்பாடாதீங்க!

said...

தேங்க்ஸ் ஆவீஸ்...

Locations of visitors to this page