ஒரு தடவை ஒரு ஸென் மாணவன் ஒருத்தன் திருடீட்டானாம். மத்தவங்கள்ளாம் டீச்சர் கிட்டே போய் சொல்லியிருக்காங்க. ஆனா டீச்சர் ஒன்னுமே சொல்லாம விட்டுட்டார். மறுபடியும் ரெண்டாவது தடவை அந்த மாணவன் திருடி இருக்கான். அப்பவும் திருடுன மாணவன டீச்சர் ஒன்னுமே சொல்லலையாம். மத்த மாணவர்களுக்கெல்லாம் ரொம்ப கோவம் வந்து திருடின பையன் மேல action எடுக்கலைனா நாங்க எல்லாம் இந்த ஸ்கூல விட்டு போயிடுவோம்னு ஒரு complaint எழுதி குடுத்தாங்களாம்.
அத படிச்சுட்டு டீச்சர் சொன்னாராம், உங்களுக்கு எல்லாம் எது தப்பு எது சரின்னு தெரிஞ்சு இருக்கு. அதனால சரியா நடந்துக்குரீங்க. ஆனா திருடுன மாணவனுக்கு தெரியலை. அவன வெளிய அனுப்புனா அவனுக்கு யார் சொல்லி குடுப்பாங்கன்னு கேட்டாராம். அதனால நீங்க எல்லாம் போனாலும் நான் கவலை பட மாட்டேன், இவன் தான் எனக்கு வேனும்னு சொல்லிட்டாராம்.
அத கேட்டுட்டு திருடுன மாணவன் தான் செஞ்ச தப்ப உணர்ந்து திருந்தீட்டான். மத்த மாணவர்களும் ஒற்றுமையா இருந்தாங்களாம்.
8 comments:
எச்சூச் மீ..
இதில் உள்குத்து ஏதும் இல்லீயே..
கதை சூப்பரூ
சென்ஷி
அவந்திகா! ஒரு சேதி தெரியுமா? இந்த சென் இருக்காரே அவரு சின்ன சின்ன கதை சொல்வதிலே கில்லாடி. இப்போ பிளாக் வேற எழுதரார். அவர் தான் முதல் பின்னூட்டம் போட்ட 'சென்'ஷி:-)))
படிச்சேன், தங்கச்சி!
நன்றி!
//சென்ஷி said...
எச்சூச் மீ..
இதில் உள்குத்து ஏதும் இல்லீயே..//
Dont worry..அதான் வெளியே அனுப்ப மாட்டோம்னு சொல்லீட்டோம் இல்ல..:-))
(அண்ணா சும்மா... கோவிச்சுகாதீங்க)
அபி அப்பா
இவர் தானா சென்?...அதான் எல்லா விஷயமும் பேசரார்?..
தென்றல் அண்ணா ,,நன்றி
நல்ல கதை. தப்பு செய்தவங்கள அடிச்சி திருத்தனும்ன்னு இல்லையம்மா.... அன்பாலயும் திருத்தலாம். :)
இந்த பதிவுக்கு வர்ற ஒரே சின்ன பையன் நான்தான் போலிருக்கு...ஹி..ஹி...
//வர்த்தகம் said...
இந்த பதிவுக்கு வர்ற ஒரே சின்ன பையன் நான்தான் போலிருக்கு...ஹி..ஹி..//
அப்ப உங்களை தம்பி ன்னு கூப்பிடட்டுமா?..:-)))
Post a Comment