Monday, March 19, 2007

DISTURBED PAKISTAN

பாகிஸ்தான் கேப்டன் இன்ஜமாம் ODI இல் இருந்து Retirement announce பண்ணிட்டார். அவங்க கோச் லேட் பாப் வுல்மெர் கிட்ட முதல்லேயே பேசினாராம். Inzy has scored 11,663 runs in 376 ODIs for Pakistan, slamming 10 centuries and 83 half centuries. Zimbabwe match தான் கடைசி மேட்ச்னு சொல்லி இருக்கார். லேட் பாப் உல்மர்க்காக நாங்க அடுத்த மேட்ச் விளையாடறோம்னு சொல்லி இருக்கார்.

பாகிஸ்தான் டீம் இப்ப ரொம்பவே டவுன் ஆகி இருப்பாங்க. பாவம்.


பாப் உல்மர்க்கு எத்தன pressure and stress இருந்து இருக்கும். அவர் "Doing it internationally, it takes a toll on you" னு சொல்லி இருக்கார்.நம்ம டீம் நல்லா விளையாடலைனா நமக்கு வருத்தம் இருக்கத்தான் செய்யும். இவ்ளோ செலவு செஞ்சு அவங்கள அனுப்புறோம், such an important sporting event, so our expectation will naturally be high. அவங்களும் கொஞ்சமாவது responsible ஆ ஆடனும். அது இல்லைங்கிற போது தான் மக்கள்க்கு கோவம் வருது. ஆனா இப்ப பாப் உல்மர் இறந்ததுக்கு அப்புறம் அத express பண்றதுக்கு ஒரு அளவு இருக்கனுமோனு தோனுது. இங்க நம்ம நாட்ல டோனி வீட்டையும் அடிச்சு நொறிக்கீட்டாங்க. வுல்மர் இறந்தது, பாகிஸ்தானுக்கு மட்டும் இல்லை, மத்த டீமையும் கொஞ்சம் affect பண்ணும்.

"I am shocked and badly hurt. We have lost a good coach and a good person."-Inzamam-ul-Haq

He's given a lot to Pakistan cricket, he brought them from nowhere to the top." Waqar Younis.

"One of our 12th men bringing drinks out told us about it. Everyone just stood back in shock for quite a while. When I was out in the field I was thinking about lots of different things for probably the last 10 or 12 overs of the game. Everybody was immediately saddened by what we heard. We have played a game of cricket, but there are a lot of bigger things happening around the world. "Ricky Ponting

Bob Woolmer had such a massive influence on my cricket career, and I know that there are countless cricketers around the globe who are just as devastated as I am by his sudden passing. Bob literally gave his life for the game he loved so dearly. My thoughts and prayers are with Gill and the family."Jonty Rhodes

நம்ம நாட்லேயும், பாகிஸ்தான்லேயும், இதுக்கு முன்னாடி இது போல நல்ல perform பண்ணலைனா மக்களோட reaction எப்படி இருந்ததுங்கிறத நினச்சு பார்த்ததுனால தான் உல்மர்க்கு இது மாதிரி ஆகிறுச்சுனு நினைக்குறேன்.

Performance நல்லா இல்லைனா நாம நம்மளோட comments express பண்ணலாம், கோவப்படலாம், but within limits.


On behalf of Cricket bloggers Condolences, thoughts and prayers

for Bob Woolmer and the family

9 comments:

said...

//Performance நல்லா இல்லைனா நாம நம்மளோட comments express பண்ணலாம், கோவப்படலாம், but within limits.
//

Well said Avanthi.. and a such a nice post with natural emotions.

said...

//Performance நல்லா இல்லைனா நாம நம்மளோட comments express பண்ணலாம், கோவப்படலாம், but within limits.//

இதுதான் நச்! கொஞ்சம் வேளையிருக்கு 10 நிமிஷம் பின்ன வாரேன்!

said...

ரசிகர்களுக்கு எல்லாமே extreme level தான். ஒன்னு கோபுரத்துல
தூக்கி வைப்பாங்க. இல்லன்னா தூக்கி
குப்பையில் போடுவாங்க.

said...

இது தொடர்பா என்னோட பதிவு....

http://pangaali.blogspot.com/2007/03/sir-bob-woolmer1948-2007.html

said...

எல்லாரும் feel பண்றோம்.... ஹ்ம்ம்ம்

said...

உணர்ச்சிகரமான பதிவு!

விளையாட்டில் மட்டுமல்ல; வாழ்க்கையிலும் இதெல்லாம் ஸகஜம் என்பதை எப்பத்தான் நம்ம ஆளுங்க புரிஞ்சுக்கப் போறாங்களோ?

வுல்மர் மறைவிற்கு என் அனுதாபங்கள்!

said...

"அய்யோ இந்தியா" என்று பயத்துடன் விளையாடியது வங்பாளதேசம்.

"வங்காளதேசம்தானே.." என்று அலட்சியமாக விளையாடியது இந்தியா. ..

இதுதான் இந்தியாவின் தோல்விக்கு காரணம்

தோத்தது கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால் அதுக்காக ரசிகர்களின் வெறிச்செயல்கள்தான் மனதைப் பாதிக்கின்றது.

இதிலிருந்து நமக்கு கிடைதத பாடம் என்னவென்றால் விளையாட்டில் அரசியல் கலக்க கூடாது.

திறமையுள்ளவர்களுக்கு மட்டுமே இடம் கொடுக்க வேண்டும்.

விஜய் தொலைக்காட்சியில பார்த்தீங்கன்னா சாதாரண தமிழ்நாடு அளவு பாட்டு போட்டிக்கு கூட எவ்வளவு கஷ்டப்பட்டு ஆட்களை தேர்வு செய்றாங்க..

அது மாதிரி இந்தியாவே நம்பி இருக்கின்ற இந்த கிரிக்கெட் விளையாட்டும் அந்த அளவுக்கு ஊர் ஊரா போய் ஆட்களை தேர்வு செய்வது அவசியம்.

எத்தனையோ இளைஞர்கள் திறமையிருந்தும் அதனை வெளிப்பயுடுத்த சந்தர்ப்பம் கிடைக்காமல் இருக்கின்றார்கள்.

said...

/On behalf of Cricket bloggers Condolences, thoughts and prayers

for Bob Woolmer and the family
/

ஆமா.. தங்கச்சி! அவருடைய குடும்பத்தாருக்கு நமது ஆழ்ந்த அனுதாபங்கள்..

said...

நல்ல பதிவு சகோதரி.

க்ரிக்கெட்டை மதமாவும், வீரர்களை கடவுளாவும் வழிபடற ரசிகர்கள் நம்மாளுங்க. அதை விளையாட்டா பார்க்காம் வாழ்க்கையா பார்க்கறது தான் எல்லாத்துக்கும் காரணம். நம்ம அணி வெற்றி பெறனும்னு நினைக்கறது ஒரு இயற்கையான உணர்வாயிருந்தாலும், தோத்தா இப்படி ரியாக்ட் பண்ரது தப்பு. ஒருவகைல அதுவே நம்ம பசங்க மனசில பயத்தை உண்டு பண்ணும். பங்களாதேஷ் கிட்ட தோத்த அன்னைக்கு இரவு திராவிட்டோ மத்த வீரர்களோ தோல்விய பத்தி கவலைப்பட்டத விட அவங்க வீடு என்னாச்சோன்னு கவலைப்பட்டது தான் அதிகமா இருக்கும். அதுவும் அவங்களோட ஆட்டத்தை கண்டிப்பா பாதிக்கும். ஜெயிக்கும் பொழுது கைதட்டறது மட்டும் ரசிகர்க்ளோட வெலை இல்ல. தோக்கும்போது நம்பிக்கை அளிக்கறதும் தான்!

பாப் உல்மரின் மறைவுக்கு அனுதாபங்கள் :(

Locations of visitors to this page