Sunday, March 18, 2007

லூசு பசங்க...

Shock.. கோவம், ஏமாற்றம் எல்லாத்துக்கும் மேல I couldnt belive it...

இவ்வ்வ்வ்ளோ நாள் wait பண்ணி, நம்ம ஆளுக பின்னப் போறாங்கன்னு, எல்லார்த்துக்கிட்டேயும் பந்தா விட்டு, Home Work , Project Work எல்லாம் சீக்கிரம் முடிச்சு, தூங்காம இருக்கிறதுக்கு எனக்கும் அப்பாக்கும் ஏதாவது கலந்து குடுக்க சொல்லி அம்மா கிட்ட கேட்டு, (கடைசியில திட்டு வாங்கி)....மேட்ச் பார்க்க உட்கார்ந்தா, Mashrafe Mortaza பின்னிட்டார்.


சொன்ன மாதிரி Mashrafe Mortaza superb ஆ பவுளிங்க் போட்டு, நம்ம playersஅ தினர அடிச்சுட்டார் இல்ல?....கண்டிப்பா இவர் பெரிய ஆளா வரப் போரார்... பேட்ஸ்மேன அடேக் பண்ணி, பவுன்ஸர் போட்டு பயங்கரமா போடுரார்...

நாம பேட்டிங்க முதல்ல பண்ணது தப்பா?... அப்படியெல்லாம் இல்லைனும் சொல்றாங்க...லூசு பசங்க..லைனா parade மாதிரி திரும்பி வந்துட்டாங்க... நம்ம DADA தான் ஏதோ கொஞ்சம் ஆடி இருக்கிறார். யுவராஜ் was good and confident, ஆனா அவரையும் Razzak அனுப்பிட்டார்...

குட்டிப் பையன் Tamim Iqbal, 17 yrs தான் ஆச்சாம் அவனுக்கு...என்னா அடி அடிச்சுட்டான்....

அவங்க நல்லா confident ஆ இருக்காங்க...committed and determined...இது எல்லாம் நம்ம Players கிட்ட இருக்கானு தெரியலை....

இருந்தாலும் நாமளே அவங்கள கைவிடக்கூடாது..

அதுனால


Failure is the first step towards success....:-)))....


42 comments:

said...

அவந்திகா...

இதத்தான் மண்டபத்துல தனியா புலம்ம்பறதுன்னு சொல்லுவாங்க...ஹி..ஹி

திருவிளையாடல் நாகேஷ்தான் நினைவுக்கு வர்றார்....ஹி..ஹி...

கவலப்படாதீங்க அம்மனீ...வெற்றியுந் தோல்வியும் ஜகஜம்....

said...

//இருந்தாலும் நாமளே அவங்கள கைவிடக்கூடாது..
அதுனால


Failure is the first step towards success....:-)))....
//

சரி போனாப் போகுது!

இனி மேலாவது நல்ல விளையாடட்டும்!

said...

மிகுந்த நம்பிக்கையோடு மேட்ச் பார்த்தால் இப்படி ஆகிவிட்டது..

இனிமே அடுத்த ரவுண்ட் போனால்தான் கிரிகெட் பற்றியே பேசறது என்று முடிவு செய்துவிட்டேன்.. :(

said...

//இதத்தான் மண்டபத்துல தனியா புலம்ம்பறதுன்னு சொல்லுவாங்க...ஹி..ஹி
//

கூட என்னையும் சேர்த்துக்குங்க :(

said...

இனி சிறீலங்காவோட இருக்கிற மாட்ச் என்ன நடக்கும் அப்படீன்னு நினைக்கிறீங்க?

கவலைப்பட்டு பிரயோஜனமில்லை:))

said...

//கவலப்படாதீங்க அம்மனீ...வெற்றியுந் தோல்வியும் ஜகஜம்.... //

போங்கண்ணா அப்படி நினைக்க முடியலை...:-(((...நான் பிளாக் ஆரம்பிச்ச நேரம்..

பாருங்க Ireland வரப்போராங்க...

ஆனா இந்த வருத்ததிலேயும் ஒரு சின்ன சந்தோஷம்...அது என்னன்னு தெரியும் இல்லண்ணா?...:-))...

said...

என்னங்க அவந்திகா! உலக கோப்பை கிரிக்கெட் நடக்குதா??

said...

//சரி போனாப் போகுது! இனி மேலாவது நல்ல விளையாடட்டும்!///

No other way...இப்படி தான் நினச்சுக்கனும்...

///இனிமே அடுத்த ரவுண்ட் போனால்தான் கிரிகெட் பற்றியே பேசறது என்று முடிவு செய்துவிட்டேன்.. ///

ஹ்ம்ம்ம் ஆமாண்ணா

//கூட என்னையும் சேர்த்துக்குங்க :(//

Join the club...:-((..தனியா தான் நான் புலம்பல்ஸ்..வீட்ல யாரும் இல்லை...

said...

//இனி சிறீலங்காவோட இருக்கிற மாட்ச் என்ன நடக்கும் அப்படீன்னு நினைக்கிறீங்க?///

நல்லா ஆடுவாங்கன்னு நினைச்சுட்டு இருக்கேன்...

அபிஅப்பா..உங்க போஸ்ட் படிச்சேன்..
சூப்பர்..அபி பாப்பாவ விட்டுருந்தா கூட நல்லா விளையாடி இருக்கும்... எங்க அருமை எல்லாம் யாருக்கு தெரியுது...

said...

தங்கச்சி,

இன்னிக்கு விடியக்காலை 3 மணி வரை முழிச்சு மேட்ச் பார்த்ததுக்கு நீ வைச்ச தலைப்பு கரெக்ட் இருக்கு :)))

said...

ஏன் இந்த ஒப்பாரி. டோண்ட் வொர்ரி.

நம்ம செமி-ஃபைனல் வரைக்கும் போறோம்... கன்ஃபார்ம்...

said...

நான் 5 மணி வரைக்கும் முழிச்சு இருந்து..'நம்ம ப்ரெண்ட்ஸ' மேட்சு பார்த்து ரசிச்சேன்..நானும் லூசு பொண்ணுதான்...:-))...

//நம்ம செமி-ஃபைனல் வரைக்கும் போறோம்... கன்ஃபார்ம்...///

:-))))....யெஸ்..யெஸ்..யெஸ்

said...

//ஏன் இந்த ஒப்பாரி. டோண்ட் வொர்ரி. //

தலைவா பாஃஸ்ட் பவுலர்! இப்பதானய்யா என்கிட்ட புலம்பி தீத்த. நீ ஆறுதல் சொல்றியா அவந்திகாவுக்கு. நல்லாயிருக்கு:-))

said...

///தலைவா பாஃஸ்ட் பவுலர்! இப்பதானய்யா என்கிட்ட புலம்பி தீத்த. நீ ஆறுதல் சொல்றியா அவந்திகாவுக்கு. நல்லாயிருக்கு:-))///

ஹா ஹா..ஹா,,,All in the Game...

said...

அவந்திகா! நா ஒரு ஐடியா சொல்லவா நம்ம டீம் ஜெயிக்க?

said...

சொலுங்க..சொல்லுங்க

said...

நா சீரியஸா சொன்னாகூட காமடியா போகும்..அதனால வாயை மூடிக்கிறேன்

said...

// அபி அப்பா said...
தலைவா பாஃஸ்ட் பவுலர்! இப்பதானய்யா என்கிட்ட புலம்பி தீத்த. நீ ஆறுதல் சொல்றியா அவந்திகாவுக்கு. நல்லாயிருக்கு:-))
//

நம்பிக்கைலதானே உலகம் ஓடுது. (தத்துவம்...)

said...

அதாவது பெவிலியன் என்பதை பிட்ச்சுன்னு உங்க பிளாக் பெயரை மாத்தி பாருங்க. கொஞ்ச நேரமாவது நின்னு ஆடுவாங்க, டக்கு டக்குன்னு பெவிலியன் திரும்பாம:-)))

அதுபோல மே.இ.ல போட்டி நடப்பதால் (அங்க ஸ்பின் பிட்ச்சு) நம்ம fast bowlar தன் பிளாக் பேரை spin bowlar என மாத்திக்குமாறு ....எப்டி இந்தியா ஜெயிக்க வழி:-)))))அடிக்க வராதீங்கப்பா!

said...

//நம்பிக்கைலதானே உலகம் ஓடுது. (தத்துவம்...) // ம்ஹும் எனக்கு நம்பிக்கையில்லை. ஒருவேள பாஸ்ட் பவுலர் நீங்க போயிருந்தா மொர்டாசாவையும், இக்பாலையும் ஒரு வழிப் பண்ணிருப்பீங்க. ;-)

said...

எல்லாரும் கிண்டல் பண்றீங்க..hmmmm
Boooooooooooooys..chaaaaaargeeee...

பாருங்க நாளைக்கு...

said...

//Failure is the first step towards success....:-)))....//

அது சரி! அதுக்காக முதலில் தோத்து தோத்தே பழகிவிட்டால் என்னாவது?

said...

//அது சரி! அதுக்காக முதலில் தோத்து தோத்தே பழகிவிட்டால் என்னாவது?//

இப்படியெல்லாம் திருப்பு questions கேக்ககூடாது..நாங்களே அழுத்துட்டு இருக்கோம்...:-(((...

said...

//நாங்களே அழுத்துட்டு இருக்கோம்...:-(((...//

சாரி! நாங்கள்ளாம் அர பாடி வண்டியிலேயே ஆடாம நிக்கரவய்ங்க. விரக்தியில அழுவதெல்லாம் கிடையாது.

said...

//சாரி! நாங்கள்ளாம் அர பாடி வண்டியிலேயே ஆடாம நிக்கரவய்ங்க. விரக்தியில அழுவதெல்லாம் கிடையாது//

அண்ணா..ஆடாம நிப்பீங்க..அப்புறம் sudden brake போட்டா..வடிவேலு மாதிரி டைவ் அடிப்பீங்களா..
:-)))...நாங்க எதுக்கு வம்புன்னு உக்காந்துப்போம்...

said...

//ஜெஸிலா said...
ம்ஹும் எனக்கு நம்பிக்கையில்லை. ஒருவேள பாஸ்ட் பவுலர் நீங்க போயிருந்தா மொர்டாசாவையும், இக்பாலையும் ஒரு வழிப் பண்ணிருப்பீங்க. ;-)
//
வாங்க ஜஸிலா,
இந்த சாப்பல் பய இருக்குற வரைக்கும் என்னை டீம்ல எடுக்க மாட்டாய்ங்க. :(

said...

//அதுபோல மே.இ.ல போட்டி நடப்பதால் (அங்க ஸ்பின் பிட்ச்சு) நம்ம fast bowlar தன் பிளாக் பேரை spin bowlar என மாத்திக்குமாறு ....எப்டி இந்தியா ஜெயிக்க வழி:-)))))அடிக்க வராதீங்கப்பா!
//
என்னய்ய நீங்க வேற. நேத்து மொர்தாஜா பவுலிங் பாத்தீங்களா???

said...

//என்னய்ய நீங்க வேற. நேத்து மொர்தாஜா பவுலிங் பாத்தீங்களா???///

அபி அப்பா இன்னும் ப ச லையே இருக்கார் போல இருக்கு...

said...

இன்னமும் அளுவாச்சியா....

கவலைப்படாதீங்க....அவனவன் ஸ்பான்சர்ஸ்கிட்ட இருந்து கோடி கோடியா பணத்த வாங்கீட்டு உக்காந்திருக்காய்ங்க.....நம்ம பயலுக ஆடி ஜெயிக்காட்டியும்...அவங்க மேட்ச் பிக்ஸ் பண்ணி செமி பைனல் வரைக்கு கொண்டு போய்ருவாய்ங்க...அதுனால தைரியமா இருங்கப்பு.....

Anonymous said...

உருப்பட வழியைப் பார். இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு மில்லியன் மக்கள்
உணவின்மையால் பார்வை இழக்கின்றார்கள். இறக்கின்றார்கள். அதைப்பற்றிக் கவலைப்படு. வூட்டல வேலை வெட்டி கெடயாதா?
You r a LOOSUP PONNU.

புள்ளிராஜா

said...

//You r a LOOSUP PONNU.//

thank you very much..:-))..

said...

//உருப்பட வழியைப் பார். இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு மில்லியன் மக்கள் உணவின்மையால் பார்வை இழக்கின்றார்கள். இறக்கின்றார்கள். அதைப்பற்றிக் கவலைப்படு. வூட்டல வேலை வெட்டி கெடயாதா?//

அது சரி! அவுங்களுக்கு போயி சோறு போடுறத விட்டுட்டு இங்க வந்து ஏன் இதெல்லாம் படிச்சுட்டு comment போடுற, அனானி அங்கிள்?

said...

அவந்திகா,

புள்ளிராஜான்னு ஒரு அனானி போட்ட கமெண்ட் நினச்சு வருத்தப்படாதீங்க.இந்த மாதிர் முகம் காட்ட கூட தைரியம் இல்லாத கோழைகள் இப்ப்டை தான் பேசுவாங்க. இதே புள்ளிராஜா கொஞ்ச நாள் முன்னாடி என்னோட ப்திவுலயும் இதே மாதிரி ஒரு பின்னூட்டம் போட்டாரு. அதையிம் அதுக்கு நன் சொன்ன பதிலையும் கீழே பாருங்க..

////100 கோடி இந்தியனில் 10 கோடிக்கு மேல் கோப்பையும், தட்டுமாக‌
தண்ணீருக்கும் உணவுக்குமாக தெருத் தெருவாக கையேந்துகின்றான்.
நீங்க என்னன்டா ஒரு உலகக் கோப்பைக்கு இந்தக் குதி குதிக்கீறிங்க.
வெள்ளைக்காரன் பட்டினியை ஒழிச்சிட்டுத்தான் உலகக் கோப்பைக்கு ஓடுறான். ஒரு நாள் பட்டினி கிடந்தா சொல்லுறது புரியும் கண்ணா.


புள்ளிராஜா

//

வாங்க புள்ளிராஜா, நீங்க படற ஆதங்கத்தை ஒத்துக்கறேன். நாங்க அதுக்காக ஒன்னும் செய்யலை தான். இவ்வளவு கவலைப்படற நீங்க அவங்களுக்காக ஏதாவது செய்யாம ஏன் வெட்டியா இங்கே வந்து பின்னூட்டம் போட்டுகிட்டு இருக்கீங்க.

//வெள்ளைக்காரன் பட்டினியை ஒழிச்சிட்டுத்தான் உலகக் கோப்பைக்கு ஓடுறான்//
அப்படின்னு எப்படி சொல்றீங்க. எல்லா ஊரிலயும்,நாட்டுலயும் பசி,பட்டினி,வறுமை வன்முறை எல்லாம் இருக்கு. அதுக்காக எதுவும் நடக்காம இல்லை.நடந்துகிட்டு தான் இருக்கு. சுனாமி, குஜராத் நிலநடுக்கம் மாதிரி எவ்வளவோ விஷயங்களுக்கு கிரிக்கெட் வீரர்கள் விளையாடி நிதி திரட்டியும் தந்திருக்காங்க. அதையும் பாருங்க!

///

இந்த மாதிரி ஆளுங்களை எல்லாம் சீரியாஸா எடுத்துக்காதீங்க. கவிதைல நாட்டம் இருக்கறவங்க கவிதை பதிவுகள் போடறாங்க. ஆன்மீகத்துல நாட்டம் இருக்கறவங்க ஆன்மிக்கப்பதிவுகள் போடறாங்க. நமக்கு கிரிக்கெட்ல இண்ட்ரெஸ்ட் இருக்கு. அதனால் கிரிக்கெட் பத்தி எழுதறோம். அதனால தொடர்ந்து எழுதுங்க. இந்த மாதிரி பேசறவங்ச் பேசிகிட்டே தான் இருப்பாங்க..

Anonymous said...

இந்தப் பதிவை தேசிபண்டிட்ல் இணைத்துள்ளேன். நன்றி ஹை.
http://www.desipundit.com/2007/03/18/worldcup/

said...

/லூசு பசங்க... /

உங்க தலைப்பையும், பதிவையும் படிச்சிட்டு கொ சம் நேரம் சிரிச்சேன்... ;)

சரியான தலைப்பு..தான்..!

வெள்ளி கிழமைக்கு அப்புறம்தான் "நம்ம ஆள்கள" பத்தி
எதுவும் பேசணும்-னு முடிவு! ம்ம்ம்.. பார்க்கலாம்...;(

(cross our fingers..!)

said...

Dubukku anna...thendral, seenu anna

thnaks

said...

என்ன அவந்தி அவங்க ஆடாததப் பத்தி பேசி நீ அடிச்சு ஆடற போல பின்னூட்டத்தில.ஜமாய்.

said...

என்ன சகோதரி, என்னோட பின்னூட்டத்தை காணும் ?

said...

அவந்திகா இன்னும் 2 ரன் எடுத்து தமிழ்மணம் களத்திலிருந்து பெவிலியன் அனுப்பப்படுவார்:-)))

said...

அவந்திகா மேடம் பங்களாதேஷ் வெற்றி பெற்றதற்குக் காரணம் நம்ம ஆளுகளோட ஒருவித அலட்சியம். இஇதெல்லாம் ஒரு டீமா என்ற நினைப்போடு களத்திற்குள் நுழைந்தால் இப்படித்தான் மரண அடி கிடைக்கும். போட்டி முடிந்த பிறகு டிராவிட் தோல்விக்கான காரணத்தை சொன்னதையும் அதற்கு பங்களாதேஷ் கேப்டன் நெத்தியபடியாக பதில் சொல்லியிருப்பதையும் பார்த்தீர்களா? கேட்டீர்களா? நமக்கு இஇதுவும் வேணும்.. இன்னமும் வேணும்.. எத்தனையோ துவக்க ஆட்டக்காரர்கள் அணியில் நுழைய வருடக்கணக்காக காத்திருக்கும்போது ஒரு வருடத்திய சராசரி ரன் ரேட்டே 15 என்ற சாதனையை வைத்திருக்கும் சேவக்கை ஏன் டிராவிட் கட்டிக் கொண்டு அழ வேண்டும்? இஇஇந்த முட்டாள்தனத்தால் இப்போது அவதிப்படுவது யார்? அடுத்து வரவிருக்கும் இலங்கை, பெர்முடா அணிகளுக்குடனான போட்டிகளில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்தால் மட்டுமே நாம் சூப்பர் சிக்ஸிற்குள் நுழைய முடியும். இல்லாவிட்டால் நம் கோச் கிரேக் சேப்பலுக்கு ஒரு "தனி விமானம்" தயார் செய்து கொண்டு நம் வீரர்கள் தாயகம் திரும்ப வேண்டியதுதான்.

said...

//அபி அப்பா said...
அவந்திகா இன்னும் 2 ரன் எடுத்து தமிழ்மணம் களத்திலிருந்து பெவிலியன் அனுப்பப்படுவார்:-)))//

இன்னும் 1 ரன்தான் பாக்கி...

சென்ஷி

said...

//கவிதைல நாட்டம் இருக்கறவங்க கவிதை பதிவுகள் போடறாங்க. ஆன்மீகத்துல நாட்டம் இருக்கறவங்க ஆன்மிக்கப்பதிவுகள் போடறாங்க. நமக்கு கிரிக்கெட்ல இண்ட்ரெஸ்ட் இருக்கு. அதனால் கிரிக்கெட் பத்தி எழுதறோம். //

Athe...Athee...

Locations of visitors to this page