Tuesday, March 27, 2007

லூசு பொண்ணு.- Wierd.. :-))

ராதாக்காவும், சிந்தாநதி அண்ணாவும் weird gameக்கு என்னை கூப்டு இருக்காங்க. நானும் ரெண்டு நாளா யோசிசுட்டு இருக்கேன். என்ன எழுதறதுன்னே புரிய மாடேங்குது. ஊர்ல இருக்குற ப்ரெண்ட்ஸ்க்கு கூப்டு கேக்கலாம்னா..அதுக எல்லாத்தையும் சொல்லி என்னை totalaa confuse பண்ணீருவாங்க, அதனால நானே சொல்லிடறேன்.

என்னோட தூக்கம்-
தூங்கறது என்ன பெரிய விஷயம்னு நினைக்காதீங்க. இதுல யாராலும் என்னோட போட்டி போட முடியாது. Continuous ஆ 20 hrs சர்வ சாதாரணமா நானும் என் கஸின் மது அக்காவும் தூங்குவோம். ரெண்டு மாசம் முன்னாடி, அம்மா ஊருக்கு போயிருந்தாங்க. நல்ல peak winter. நான் ஸ்கூல்க்கு போயிட்டு வந்து கதவு, Screen எல்லாம் போட்டு, room heater போட்டு நல்லா தூங்கிட்டேன். (சாயந்திரம் 3 மணிக்கு). அப்பா 8 மணிக்கு வந்து கதவ தட்டி தட்டி பார்த்து...ஒன்னும் use இல்லை. ஜூலியும் என்னோட சேர்ந்து கெட்டுப் போச்சு..அதுக்கும் தூக்கம்...பாவம் அப்பா பயந்து, அழுது, அம்மாக்கு ஃபோன் பண்ணா, அம்மா சர்வ சாதாரணமா, அவ சொர்கத்துல சைக்கில் ஓட்டீட்டு இருப்பானு சொல்லி போன கட் பண்ணிட்டாங்க. அப்புறம் நான் தூங்கிட்டு இருக்கேன்னு ஒரு மணி நேரம் வெளியே உக்காந்துட்டு, கடைசியா ஒரு தடவை try பண்ணி பார்த்துட்டு, கதவ உடைச்சரலாம்னு அப்பா முடிவு பண்ணி தட்டுனாங்க. கதவோட நல்ல நேரம் முழிச்சுட்டேன்.

தூங்குனா நல்லா உளருவேன். LKG, UKG படிக்கும் போது இப்படி ஒரு தடவை தூக்கத்துல ஸ்கூல்ல சொல்லி குடுத்த rhyme சொல்லீட்டு இருந்தேனாம். நடுவுல நிறுத்திட்டேனு எல்லாரும் அடுத்த என்னன்னு கேட்டு இருக்காங்க. நான் Good Girl, அப்படியே continue பண்ணி rhyme fullaa சொல்லி முடிச்சுட்டேன் தூக்கத்திலேயே. இப்பவும் நல்லா உளருவேன். ஆனா வீட்ல ஒத்துக்க மாட்டேன். WWE விளையாடுவேன், அது என்னமோ maths formula, chemistry formula எல்லாம் தூக்கத்துல தான் நல்லா நியாபகம் வருது. முழிச்சுட்டா மறந்து போகுது. அதுனால தான் தூங்கிட்டே இருக்கேன்.... :-))

Theaterல போய் படம் பாக்குறது மட்டும் என்னால முடியாது. இது வரைக்கும் 4 or 5 times தான் போயிருப்பேன். அதுவும் கடைசியா போய் 2 வருஷம் இருக்கும். வீட்ல காமெடி படம் மட்டும் பார்ப்பேன். படம் பார்க்க பார்க்க அதுக்கு முன்னாடி என்ன நடந்ததுன்னு மறந்து போகும். அதுனால எதுக்கு வம்புன்னு காமெடி மட்டும் பார்ப்பேன். Popeye show, Tom and Jerry என்னோட favourites. WWE பார்த்தா பக்கத்துல யாரும் உக்கார முடியாது.

அப்புறம் Gems and Bourbon biscuits, அப்படியே சாப்பிடுவேன். பேக்கட் பேக்கட்டா இல்லை, பெட்டி பெட்டியா....எத்தன குடுத்தாலும். யாருக்கு குடுக்க மாட்டேன். கடைக்கு நான் போனா கேக்காமலே கடைக்காரர் எடுத்துக் குடுத்துறுவார்.

last but not the least...நான் இத சொல்லியே ஆகனும்... இதுக்காக தான் இந்த போஸ்டே போட்டேன்.....இத்தன நாள் இந்த லூசு பசங்கள போய் நம்பீட்டு இருந்தேன் பாருங்க. இப்ப தான் தெரியுது எவ்வளவு பெரிய weird ஆசைன்னு. நடக்குற காரியமா இது எல்லாம்..ஹ்ம்ம்ம்....அது நினச்சா தான்...'புள்ளி ராஜா' வந்து சொன்ன மாதிரி நான் லூசு பொண்ணுதான்.

18 comments:

said...

//இத்தன நாள் இந்த லூசு பசங்கள போய் நம்பீட்டு இருந்தேன் பாருங்க. இப்ப தான் தெரியுது எவ்வளவு பெரிய weird ஆசைன்னு
//

Its all part of game. take in right sprit.

said...

//தூங்குனா நல்லா உளருவேன்.//

தூங்காட்டி ரொம்ப நல்லா:-))

என்னப்பா இன்னிக்கு "தேவ்" தமிழ்மணம் ஸ்டார் பதிவுல அண்ணாத்த கச்சேரி இருக்கு. முதல் வரிசைல வந்து உக்காரனும் தெரியுதா? :-))

said...

////இத்தன நாள் இந்த லூசு பசங்கள போய் நம்பீட்டு இருந்தேன் பாருங்க. இப்ப தான் தெரியுது எவ்வளவு பெரிய weird ஆசைன்னு
//
இது தற்காலிகமான வியர்டுங்க. இப்ப சரியாயிட்ட மாதிரி. 2011ல திரும்ப வந்துடும் :) எனக்கும் தான்.

said...

//Its all part of game. take in right sprit. //

I have forgotten that long back.. just for this post I have added here...

அபி அப்பா..

கரெக்ட்..தூங்காட்டி ரொம்ப நல்லா தான்....:-))

மணிகண்டன் அண்ணா உங்க போஸ்ட் ரொம்ப நல்லா இருந்துச்சு...நன்றி

said...

இவ்வளவு தானா உங்க weird? ம்..பரவால்லே..

நல்லா எழுதியிருக்கீங்க....:)

said...

//ராதாக்காவும், சிந்தாநதி அண்ணாவும் weird gameக்கு என்னை கூப்டு இருக்காங்க//


ஒன்னையே நானும் கூப்பிட்டு இருக்கேன்.... :)

Anonymous said...

Eppa Paaththaalum Gamesh Velladaratha Vittachhe !!!!

Ravi

said...

சிந்தாநதி , இராம், ரவி அண்ணா நன்றி

அவ்வளவு தான்..இதுக்கு மேல உண்மைய சொல்லக்கூடாது,,,

நீங்க கூப்டது எனக்கு தெரியாது.. அப்ப எத்தன பேர் என்ன லூஸ்ன்னு நினச்சுட்டு இருந்து இருக்கீங்க...:-((


/Eppa Paaththaalum Gamesh Velladaratha Vittachhe !///

புரியலை..
/

said...

\\அப்ப எத்தன பேர் என்ன லூஸ்ன்னு நினச்சுட்டு இருந்து இருக்கீங்க...:-((//

அவந்தி ,அய்யோ அய்யோ...
தாங்கலப்பா _/\_

said...

//\அப்ப எத்தன பேர் என்ன லூஸ்ன்னு நினச்சுட்டு இருந்து இருக்கீங்க...:-((//

ஆஹா! இதுக்கு இதுதான் அர்த்தமா? நான் டீப்பா யோசிக்காம, ஐய் நம்ம கூட 3 பேர் கூப்பிட்டாங்களேன்னு சந்தோஷப்பட்டுட்டேனே! அப்ப நாந்தான் லூசா?:-))

said...

//அவந்தி ,அய்யோ அய்யோ...
தாங்கலப்பா _/\_ ///

ஹி ஹி...பெரிய லூசு..இல்ல?

அபி அப்பா

பரவாயில்லை, லூசா இருக்கறது எவ்வளவு கஷ்டம்னு நமக்கு தான தெரியும்..:-))

said...

/... அம்மா சர்வ சாதாரணமா, அவ சொர்கத்துல சைக்கில் ஓட்டீட்டு இருப்பானு சொல்லி /

உங்களையும் காமடி-ல யாரும் அடிச்சிக்க முடியாது போல, தங்கச்சி!

/WWE பார்த்தா பக்கத்துல யாரும் உக்கார முடியாது.
/
இப்படிலாம் மிரட்டகூடாது..

நானும் WWE ஒரு 5 நிமிசமாவது பார்க்கணும் முயற்சி பண்ணுறதுண்டு.
அதை புரிஞ்சிக்கவே முடியறதில்லை...

said...

//நானும் WWE ஒரு 5 நிமிசமாவது பார்க்கணும் முயற்சி பண்ணுறதுண்டு.
அதை புரிஞ்சிக்கவே முடியறதில்லை.//

அண்ணா எனக்கே தெரியும் அது உண்மை இல்லைனு..இருந்தாலும் பார்க்குறத நிறுத்த முடியலை...அதுவும் என்னோட heroes எல்லாம் வந்தா... கண்டிப்பா மிஸ் பண்ண மாட்டேன்..

said...

மக்களே...

நான் அப்பவே சொல்லல...இந்த பொண்ணு சரளமா எழுதுது....அம்மனி பெரிய ஆளா வருவாங்கோ....

அட்வான்ஸ் வாழ்த்துக்கள மறுபடியும் சொல்லிக்கிறேன்.

ஒரு காலத்துல நமக்கும் கும்பகர்ணன்னு பேரு....யாரு கண்ணு பட்டுச்சோ, இப்பல்லாம் 5 மணி நேரம் கூட தூங்க முடியல...ம்ம்ம்ம்ம்

said...

//நான் அப்பவே சொல்லல...இந்த பொண்ணு சரளமா எழுதுது....அம்மனி பெரிய ஆளா வருவாங்கோ..அட்வான்ஸ் வாழ்த்துக்கள மறுபடியும் சொல்லிக்கிறேன்.//

அய்யோ..தேங்ஸ் அண்ணா...:-))

said...

சகோதரி அவந்திகா

படுத்தவுடன் தூங்குகிறவனும், பசியாறச் சாப்பிடுபவனும் இந்த உலகத்தில் கொடுத்து வைத்தவர்கள். நீங்கள் தூக்கத்தோடு WWE பார்க்கும் அளவுக்கு ஓய்வும் கிடைப்பவராக இருந்தால் உண்மையாகவே கொடுத்து வைத்தவர்தான். அடுத்தப் பிறவியில் இதற்காகவே பெண்ணாக பிறக்க வேண்டுமப்பா..

தமிழ்சரண்

said...

//உண்மையாகவே கொடுத்து வைத்தவர்தான். அடுத்தப் பிறவியில் இதற்காகவே பெண்ணாக பிறக்க வேண்டுமப்பா..//

இதென்ன அண்ணா...பொண்ணுக தான் relax ஆ இருக்காங்களா..

said...

//last but not the least...நான் இத சொல்லியே ஆகனும்... இதுக்காக தான் இந்த போஸ்டே போட்டேன்.....இத்தன நாள் இந்த லூசு பசங்கள போய் நம்பீட்டு இருந்தேன் பாருங்க//

இது ஊரரிஞ்ச weirdன்னு சொல்லியும் தெரியணுமா என்ன:):)

தூக்க வியாதி உங்களுக்கும் இருக்கா??சரியா போச்சு:):)

மத்தபடி அழைப்ப ஏற்று வந்து இந்த பதிவ போட்டதுக்கு ரொம்ப நன்றி அவந்திகா:):)

Locations of visitors to this page