ஒரு வயசான விவசாயி ஒருத்தர், வயசான காரணத்தினால ஒன்னும் பண்ண முடியாம ஒரே இடத்துல உட்கார்ந்து இருந்தாராம். வயல்ல வேலை செய்ய முடியாம ஒரே இடத்துல உட்க்கார்ந்து இருந்தார். அவர பார்த்து அவர் மகனுக்கு கோவம் கோவமா வந்துச்சாம். "என்ன இந்த கிழவன் ஒரு வேலையும் பண்ண மாட்டெங்குறான். ஏதாவது செஞ்சு இவர அனுப்பனும்' னு முடிவு பண்ணான்
அடுத்த நாள் ஒரு காஃபின் தயார் பண்ணி எடுத்துட்டு வந்து அதுல அவங்க அப்பாவ படுத்துக்க சொன்னான். அவரும் உள்ள படுத்துட்டார். அப்புறம் ஒரு மலை உச்சிக்கு எடுத்துட்டு போய் கீழே உருட்டி விட ஐடியா பண்ணான்.
கீழ தள்ளப் போறப்போ, உள்ள இருந்த பெரியவர், காஃபின் மூடிய தட்டுனாராம். சரி சாகப்போறப்போ அப்பா என்ன சொல்றார்னு கேப்போம்னு மூடிய திறந்தானாம் மகன்.
பெரியவர் சொன்னாராம், " என்னை நீ கீழே தள்ளி உருட்டி விட போறேன்னு தெரியும். எப்படி இருந்தாலும் நான் சாகத்தான் போறேன். அதுக்கு எதுக்கு இந்த காஃபின் வேஸ்ட் பண்ற. எடுத்து வச்சா, நாளைக்கு உன் குழந்தைகள் வேற வாங்க வேண்டியது இல்லைன்னு" சொன்னாராம்.
Moral of the Story
யாராயிருந்தாலும் இந்த உலகத்துல இருக்குறதுக்கு ஒரு காரணம் இருக்கும்
அந்த காரணம் வெளியே தெரியா விட்டாலும்
15 comments:
இதே மாதிரி கதை ஒண்ணு நம்ம ஊர்லயும் சொல்லுவாங்க....
"மகன் அப்பாவுக்கு நெளிஞ்ச அலுமினிய தட்டுல சோறு போடுவான்....அப்பா செத்து போய்டுவாரு...மகன் தட்டை வெளியே தூக்கி வீசப்போகும் போது அவனோட மகன் சொல்லுவான்...அப்பா அந்த தட்ட பத்திரமா வை நாளைக்கு நான் அதுலதானே உனக்கு சோறுபோடனும்னு....."
அப்பா...அம்மாவ நல்லபடியா பாத்துக்கனும்னு சொல்றதுக்காக இந்த கதை சொல்லுவாங்க....
அவந்திகா! யாருக்கு பயன் படுதோ இல்லியோ சென் கதை எனக்கு நல்லா யூஸ் ஆகுது. நேத்திக்கு என் வீட்டுக்கு வந்த ஒரு பிரண்ட்"என்ன அலங்கோலமா இருக்கு"ன்னு கேட்டப்ப உங்க சென் கதை சொல்லி "எதுவும் நேச்சுரலா இருக்கனும்"ன்னு அவருக்கு புரிய வச்சேன். மனுஷன் வாயை திறக்கலை:-))
குடும்ப உறவுகள் இன்னைக்கு இருக்கற நிலைமையில் இது ரொம்ப அவசியமான கதை தான். தான் தன் குடும்பம்ம்னு நினைச்சுட்டு பெத்தவங்கள மறந்துபோறவங்களுக்கு இதப்படிச்சுக் காண்பிக்கணும்.
நல்ல விஷயம் வாழ்த்துக்கள்!....
பங்காளி அண்ணா
உங்களைப் பார்த்து தான இந்த கதை எழுத ஆரம்பிச்சேன்..:-)))
அபி அப்பா
பங்காளி அண்ணாவும், காட்டாறு அக்காவும், ஒரு வேலையும் செய்யாம இருக்கவா சொல்லுது ஸென்? அப்படின்னு என்ன கிண்டல் பண்றாங்க.. இப்ப நீங்களும் இப்படி சொன்னா, நான் எழுதற கதைய படிச்சு எல்லாரும் கெட்டுப் போறாங்கன்னு உண்மை ஆயுடும்..:-))))
லட்சுமி அக்கா, சிவா அண்ணா தேங்க்ஸ்..:-)
என்னம்மா ஆச்சு உனக்கு இந்த சின்ன வயசுல!
தத்துவக்கதைகளுக்குப் போயிட்டே!
கிரிக்கெட் இன்னும் நடந்துகிட்டுதான் இருக்கு தெரியுமில்லை?
ஆஸிக்காரங்க அடிச்சு நொறுக்கறாங்க.
போம்மா! போய் அதைப் பாரு!
எங்களுக்கும் அதைப் பத்தி சொல்லு!
:)
நல்ல கதை, வாழ்க்கையின் உண்மைகளை கதைகளாய் கண்முன்னே
தருபவைதானே இந்த ஜென் கதைகள். என்ன, கற்றுக் கொள்ளுதலையும்
செயல்படுத்துதலையும் நம்மிடமே விட்டுவிடுகிறது.
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்!
:)
// அவந்திகா said...
அபி அப்பா
பங்காளி அண்ணாவும், காட்டாறு அக்காவும், ஒரு வேலையும் செய்யாம இருக்கவா சொல்லுது ஸென்? அப்படின்னு என்ன கிண்டல் பண்றாங்க.. இப்ப நீங்களும் இப்படி சொன்னா, நான் எழுதற கதைய படிச்சு எல்லாரும் கெட்டுப் போறாங்கன்னு உண்மை ஆயுடும்..:-)))) //
அவந்தி, அபி அப்பா ஏற்கனவே கெட்டுப் போய் தான் இருக்கார்ன்னு அபி அம்மா சொன்னது இங்கே கேக்குது எனக்கு. அவருக்கு ஒரு சாக்கு உன்னோட கதை அவ்வளவு தான். என்ன சொல்லுறீங்க அமி அப்பா, சரிதானே? ;-)
//அவந்தி, அபி அப்பா ஏற்கனவே கெட்டுப் போய் தான் இருக்கார்ன்னு அபி அம்மா சொன்னது இங்கே கேக்குது எனக்கு. அவருக்கு ஒரு சாக்கு உன்னோட கதை அவ்வளவு தான். என்ன சொல்லுறீங்க அமி அப்பா, சரிதானே? ;-) ///
அப்பா..அப்ப நான் தப்பிச்சேன் .:-))
தேங்க்ஸ்க்கா..
//VSK said...
என்னம்மா ஆச்சு உனக்கு இந்த சின்ன வயசுல!..எங்களுக்கும் அதைப் பத்தி சொல்லு!:) //
எழுதறேன் அண்ணா..தேங்க்ஸ்
ந.பா, தென்றல் அண்ணா
தேங்க்ஸ்
//காட்டாறு said...
// அவந்திகா said...
அபி அப்பா
பங்காளி அண்ணாவும், காட்டாறு அக்காவும், ஒரு வேலையும் செய்யாம இருக்கவா சொல்லுது ஸென்? அப்படின்னு என்ன கிண்டல் பண்றாங்க.. இப்ப நீங்களும் இப்படி சொன்னா, நான் எழுதற கதைய படிச்சு எல்லாரும் கெட்டுப் போறாங்கன்னு உண்மை ஆயுடும்..:-)))) //
அவந்தி, அபி அப்பா ஏற்கனவே கெட்டுப் போய் தான் இருக்கார்ன்னு அபி அம்மா சொன்னது இங்கே கேக்குது எனக்கு. அவருக்கு ஒரு சாக்கு உன்னோட கதை அவ்வளவு தான். என்ன சொல்லுறீங்க அமி அப்பா, சரிதானே? ;-) //
'கைப்புள்ள ரெஸ்ட் எடுக்கும் இந்த இடைப்பட்ட காலத்தில் அபிஅப்பாவுக்கு ஆப்பு வைக்கப்படும்"ன்னு வ.வா.சங்கத்துல ஏதும் போர்டு போட்டுட்டாங்களா சங்கத்து சிங்கங்கள்! ஆஹா ஒரு குரூப்பாதான் இருக்கீங்கப்பா:-))
இந்தக் கதை உண்மையில் ஸென் கதையா என்பது எனக்கு சந்தேகமாக இருக்கிறது. இது ஸென் வகையில் அடங்காது என்றே நினைக்கிறேன்!!!;-)
Post a Comment