Friday, April 6, 2007

ஆப்டிமிஸம்.-ஸென் கதை-4


ஒரு தடவை ஜப்பானிய ஜெனரல், அவரோட படையோட ஒரு போருக்கு போயிட்டு இருந்தாராம். அவரோட படை ரொம்ப பலம் வாய்ந்தது. கண்டிப்பா போர்ல ஜெயிச்சுறுவோம்னு அவர் confidentஆ இருந்தார். ஆனா வீரர்கள் அவ்வளவு confidentஆ இல்லை. தோத்து போயிறுவோம்னு ஒரு பயம் அவங்களுக்கு. Battle fieldக்கு போற வழியில ஒரு கோயில்ல சாமி கும்பிட போனாங்களாம்.

சாமி கும்பிட்டு முடிச்ச அப்புறம் ஜெனரல் ஒரு காசு எடுத்து 'நான் இப்போ டாஸ் போடப்போறேன். பூ விழுந்தா நாம தோத்து போயிறுவோம், தலை விழுந்தா ஜெயிச்சுறுவோம்னு சொன்னாராம். வீரர்கள் எல்லாருக்கும் ஒரே டென்ஷன். தலை விழனும்னு கடவுள்கிட்ட வேண்டிட்டாங்க. ஜெனரல் டாஸ் போட்டார். தலை விழுந்துச்சு. வீரர்கள் எல்லாருக்கும் ஒரே சந்தோஷம். ஆஹா நாம் ஜெயிக்கப்போறோம்னு.

அதே சந்தோஷத்தோட போய் fight பண்ணி ஜெயிச்சுட்டாங்களாம். ஜெயிச்ச அப்புறம் அவரோட lieutenant சொன்னாராம்..' no one can change the distiny'. அதுக்கு ஜெனரல் சிரிச்சிட்டே 'ஆமா நமக்கு ஜெயிக்கிறதுக்கு வேண்டிய பலம் இருந்துச்சு, நாம ஜெயிக்கனும்ங்கிறது விதி' அப்படீன்னு சொல்லிட்டே அவர் டாஸ் பண்ண காச lieutenant கிட்ட காமிச்சாராம். அதுல ரெண்டு பக்கமும் தலை தான் இருந்துச்சாம்.

11 comments:

said...

இந்த லெப்டினண்ட் க்கு ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணி நா பட்ட பாடு, அந்த பாழா போன டீச்சர் என்னய போட்டு சாத்தி தள்ளிட்டா!

பி.கு: டீச்சர் என் சித்திதான்

said...

அபி அப்பா

இன்னும் ஞாபகம் வச்சுட்டு இருக்கீங்களா..அப்ப எத்தன தடவை imposition எழுது இருப்பீங்க...:-)

படிச்சதுக்கு சந்தோஷம் அபி அப்பா..

said...

இந்த கதவழியா நம்ம teamக்கு ஏதும் உள்குத்து இல்லையே, தங்கச்சி!

உன்னால் முடியும், நம்பு... முத நம்ம நம்பனோம்...
மனசுல 'தில்' வேணும் சொல்லுங்க ...

said...

தென்றல் அண்ணா

ரொம்ப குத்து வாங்கிட்டாங்க..
அதனால போதும்.. இனி என்ன பண்ணலாம்னு பார்க்கலாம்..தேங்ஸ் அண்ணா தவறாம படிச்சு கமென்ட் போடறதுக்கு

said...

தங்கச்சி, இப்பதான போட்டாவை கவனிச்சேன்...
ஏதோ ... நம்ம team நிக்கிற மாதிடியே இருக்கு... ;)

/ரொம்ப குத்து வாங்கிட்டாங்க../
அதுவும் சரிதான்.. :(

said...

உங்க பேர்ல 'கா'வ கட் பண்ண மாதிரி என் பேர்ல 'ஷி' ய கட் பண்ணிப்போட்டா யாருக்கு தெரியும்..
:)))

சென் - ஷி

said...

சென்ஷி அண்ணா.. நாங்க எப்பவே 'ஷி'ய கட் பன்ணிட்டோம்.. நீங்க பார்க்கலையா?..:-))

http://crickchat.blogspot.com/2007/03/blog-post_27.html

said...

இந்தக் கதையும் நல்லா இருக்கு!

நம்பிக்கை இருந்தா எதையும் ஜெயிக்கலாம்னு எவ்வளவு அழகா இருக்கு இந்தக் கதை!

ஸென் கதையெல்லாம் நிறைய படிப்பீங்களோ!

எல்லா கதையும் எங்களோட பகிர்ந்துக்குங்க!

said...

//நாமக்கல் சிபி said...
இந்தக் கதையும் நல்லா இருக்கு!//

நிறைய இல்லண்ணா.. ஒரு புக்ல கொஞ்சம் படிச்சு இருக்கேன்.. நியாபகம் இருக்கிறத போடுறேன்..தேங்ஸ்

said...

//ஏதோ ... நம்ம team நிக்கிற மாதிடியே இருக்கு... ;)
//

எனக்கும் அப்படித்தான் தெரியுது!

:))

said...

இந்த கதைல Zen சொல்லாத ஒன்னும் இருக்குது பாத்தீங்களா? Motivation - ஒரு தலைவனுக்கு சிறந்த தகுதி தன் வீரர்களை ஒரு செயலைச் செய்ய சரியான முறையில் தூண்டவும் செய்ய வேண்டும். தலைவன் சரியான நேரத்தில் தூண்டுகோலாய் இருந்ததால் தான் வெற்றி பெற முடிந்தது.

அழகா எழுதுறீங்கம்மா நீங்க! தொடர்ந்து எழுதுங்க!

Locations of visitors to this page