Saturday, April 7, 2007

ஸென் கதையில் அழகு

என்னை தம்பி [ ஹை... ஒரு தம்பி இங்க, தம்பி அண்ணான்னா நல்லா இல்ல :-)] 'அழகு' விளையாட்டுக்கு கூப்டு இருந்தார். எனக்கு அவ்வளவு எல்லாம் எழுத தெரியாது. அதனால இந்த கதையிலேயெ சொல்லிட்டேன். தேங்க்ஸ் அண்ணா.

ஒரு அழகான கார்டன். அத பார்த்துக்குறதுக்கு, பூ, செடி, கொடியில எல்லாம் ரொம்ப ஆர்வமா இருந்த ஒரு ப்ரீஸ்ட் வேலைக்கு வச்சாங்களாம். அவரும் கார்டன ரொம்ப நல்லா பார்த்துட்டார். எப்பவும் கார்ட்ன்லயெ இருந்து, குப்பையெல்லாம் கூட்டி, ஒரு இலை விழுந்தாகூட அத கூட்டி சுத்தம் பண்ணீடுவார். ஒரு நாள் அந்த கார்டனுக்கு ஒரு விருந்தாளி ஒருத்தர் வர்ரதா சொன்னாங்களாம். இவர் உடனே கார்டன இன்னும் அழகா செய்யனும்னு, வெளியே நீட்டீட்டு இருந்த கொடி எல்லாம் கத்திருச்சு, செடி எல்லாம் நல்லா கட்டி, தண்ணி எல்லாம் ஊத்தி கழுவி ரொம்ப சுத்தமா வச்சுட்டார்.

இந்த கார்டனுக்கு பக்கத்துல ஒரு ஸென் மாஸ்டர், வயசானவர் இருக்கார். அவருக்கு எப்பவும் இந்த பூசாரி வேலை செய்யறத ஆர்வமா பார்த்து சந்தோஷப்படுவார். அன்னைக்கும் அப்படித்தான் இவர் சுத்தம் செய்யறத பார்த்துட்டே இருந்து இருக்கார். வேலையெல்லாம் முடிச்சுட்டு ஸென் மாஸ்டர பார்த்து "எப்படி, இன்னைக்கு கார்டன் ரொம்ப நல்லா இருக்கு இல்ல..ஒரு இலை கூட கீழ இல்ல பாருங்க, செடி எல்லாம் கட் பண்ணி, அழகா வச்சிறுக்கேன்" என்று சொன்னாராம். அதுக்கு அந்த மாஸ்ட்ர் ''ஆமா இன்னைக்கு ரொம்ப நல்லா இருக்கு, ஆனா ஒரெ ஒரு குறை மட்டும் இருக்கு என்ன உள்ளே விட்டா நான் அத சரி செஞ்சுறுவே''ன்னு சொன்னாராம். மனசில்லாம பூசாரியும் மாஸ்டர உள்ளே விட்டார். மாஸ்டர் உள்ளே வந்து ஒரு மரக்கிளைய பிடிச்சு உலுக்கி, இலையெல்லாம் கீழே விழ வைச்சாராம். இருக்கமா கட்டி வச்சுறுக்கிற செடிய லூஸ் பண்ணி விட்டாராம். கட்டு லூஸ் ஆனதுனால, செடி பூ எல்லாம் காத்துக்கு ஆடி அழகா இருந்துச்சு. கீழே விழுந்து இருந்த இலைகளும் கலர் கலரா அழகா இருந்துச்சாம்.

"இப்ப பாருங்க, இது இன்னும் அழகா இருக்கு இல்ல" அப்படீன்னு கேட்டாராம். அதுக்கு அப்புறம் தான் பூசாரிக்கு தெரிஞ்சது, அழகுன்னா என்னன்னு. நான் ரொம்ப சிறமப்பட்டு செயற்கைய உருவாக்கீட்டு இருந்தேன், இலவசமா இயற்கை இத்தன அழகா இருக்கும் போதுன்னு சொன்னாராம்.

அப்புறம் அழகு பத்தி சொல்றப்போ, என் ஜூலி பத்தி சொல்லலைனா, அது டென்ஷனாயிடும். பாருங்க இது தான் என்னோட ஜூலி (டேஷான்ட்). குட்டியில எடுத்தது.




இப்போ அதுக்கு 7 வயசு ஆச்சு. ரொம்ப அழகா இருக்கும். அடிக்கடி சண்டை போட்டுப்போம், ஆனா அதுக்கு என்ன விட்டா யாரும் இல்லை, எனக்கும் அத விட்டா வேற வழி இல்லை. அதனால சிக்கிரம் பேசீடுவோம்.


அப்பப்போ ரொம்ப புத்திசாலின்னு நினப்பு வந்துடும் அதுக்கு. இல்லாத பந்தா எல்லாம் பண்ணும். அப்பதான் எனக்கு டென்ஷன் ஆகும். அதுவும் இங்க வந்தப்புறம், இங்க இருக்குற ஆளுக மாதிரியே இதுவும் கொஞ்சம் 'ஒரு மாதிரி' ஆயுட்டு வருது. ஆனா அது என்ன பண்ணாலும் அழகு தான். நைட்ல நாங்க எல்லாம் தூங்கின அப்புறம் கத்தும். அப்புறம் அம்மா ''ஹே.. ஜூலி பேசாம தூங்கு''ன்னு சொல்லனும்.. அப்பதான் அது தூங்கும்.. இது டெய்லி நடக்கும். அதுவும் அதுக்கு தெலுங்குல சொன்னாதான் புரியும்.... :-))).

இது தான் என்னோட அழகு பதிவு. நல்லா இருக்கா?

41 comments:

said...

கதையும் அழகு! ஜூலியும் அழகுதான்!

said...

"அழகு" தான் ஜூலி:-))

said...

//''ஹே.. ஜூலி பேசாம தூங்கு"//

இத எப்படி தெலுங்குல சொல்வாங்க....தெரிஞ்சிக்கனும்னு ஒரு அல்ப ஆசை

said...

நாங்க சென்னைல இருந்தப்போ ஜூலி மாதிரியே மேல் வீட்டில் ரோனின்னு ஒரு நாய் இருந்தது. அதோட குறும்புகளை எழுதணும்னா ஒரு தனிப் பதிவே போடலாம்!

அதுக்கு சாக்லெட்டுன்னா ரொம்ப இஷ்டம். தப்பித் தவறி சாக்லேட்டைப் பார்த்துட்டா போதும். லபக்குன்னு கவ்விகிட்டு திபு திபுன்னு மொட்டை மாடிக்கு ஓடிடும். யாரும் பிடுங்குறதுக்குள்ளே அதைப் பிரிச்சி சாப்பிடணும் இல்லை!

said...

//இத எப்படி தெலுங்குல சொல்வாங்க....தெரிஞ்சிக்கனும்னு ஒரு அல்ப ஆசை//

ச்சப்டுக்கா பண்டுகோ:-))

எது எதுகெல்லாம் ஆசை பாருங்க:-))

said...

சிபி அண்ணா, அபி அப்பா தேங்ஸ்

பங்காளி அண்ணா..

தெலுங்குல..'நித்ரபோ ஜூலி'..

நான் நேத்து ஒரு ஸென் கதை போட்டேன்..நீங்க கமென்டே போடலை..

said...

//ச்சப்டுக்கா //

அய்யோ இது எந்த ஊரு தெலுங்கு..

பண்டுக்கோ ஓகே..

said...

ஜூலிக்கு பொரின்னா ரொம்ப பிடிக்கும்.. யாராவது பொரி போட்டா கூடவே போயிடும்.. லூசு ஜூலி...

said...

//ஜூலிக்கு பொரின்னா ரொம்ப பிடிக்கும்.. யாராவது பொரி போட்டா கூடவே போயிடும்.. லூசு ஜூலி...
//

அடடே! கவனமா பார்த்துக்குங்க! ஏதாவது பிரேத ஊர்வலம் போனா கூடவே போயிடப் போகுது!

:))

said...

நேத்து பதிவுல பின்னூட்டம் போடாத கதையச்சொல்றேன்....

பதிவ படிச்சிட்டு பின்னூட்டம் போட்டேன்னு நினைச்சிட்டு இருந்தேன், ஆனாலும் நம்ம பின்னூட்டம் கானோமா...ஒரே டவுட்டாய்டுச்சி, போட்டோமா,போடலையான்னு....

எங்கே என் பின்னூட்டம்னு சவுண்ட் விடலாம்னு யோசிச்சேன்.....மொதல்ல பின்னூட்டம் போட்டுட்டு அப்பால வந்து சவுண்ட் விடுன்னு சொல்லீட்டா நாம பல்புன்னு எல்லாருக்கும் தெரிஞ்சிருமேன்னு ஒரு கவலை....ஹி...ஹி

அதான் தாயீ, சைலண்ட்டா நம்ம பின்னூட்டம் வருமா வராதானு நகத்தை கடிச்சிட்டு உக்காந்திருந்தேன்....ஹி...ஹி

said...

அப்ப உங்க ஜூலிய பொரி வச்சி பிடிக்கலாம்னு சொல்லுங்க....

said...

சிபி அண்ணா..இங்க அந்த பயம் இல்ல....
நம்ம ஊர்ல அது நடக்கலாம்..இந்த லூசு பின்னாடியே போயிடும்..

said...

//அப்ப உங்க ஜூலிய பொரி வச்சி பிடிக்கலாம்னு சொல்லுங்க//

:))

பங்காளி! சூப்பர் கமெண்ட்!

said...

//எங்கே என் பின்னூட்டம்னு சவுண்ட் விடலாம்னு யோசிச்சேன்.....///

அண்ணா இது எல்லாம் ஓவர்.. நீங்க தானே inspiration எனக்கு இது எழுதறதுக்கு...ஏதாவது தப்பு இருந்தா நீங்க தானே சொல்லனும்

said...

////ச்சப்டுக்கா //

அய்யோ இது எந்த ஊரு தெலுங்கு..

பண்டுக்கோ ஓகே..//

"ஜூலி சப்புடுசேயாகுன்டா பண்டுகோ"

இது சரியா, சரியிலைன்னா பொரி வைத்து ஜூலிய புடுச்சிட்டு போயிடுவேன், இருங்க நான் என் அழகு பதிவுல டைகர் படம் போடுகிறேன்:-))

said...

ஹை ஆவீஸ் வந்துடீங்களா...

வாங்க வாங்க...நீங்க என் ப்ரென்ட் தானே..ஜூலிய பிடிக்க மாட்டீங்க..

சூப்பர் கமென்ட்டா.. அந்த அண்ணா சும்மா சொல்ரார்...

said...

\\ நான் ரொம்ப சிறமப்பட்டு செயற்கைய உருவாக்கீட்டு இருந்தேன், இலவசமா இயற்கை இத்தன அழகா இருக்கும் போதுன்னு சொன்னாராம். //


இதுனால தான் நான் என் வீட்டை அடிக்கடி ஒதுங்க வச்சு செயற்கை ஆக்கறது இல்லயாக்கும்.. எனக்கு இயற்கைதான் பிடிக்கும்.யாராச்சும் வந்தா செயற்கையா அழகு செய்வேன். :)

said...

அக்கா

சூப்பர்..நாம எல்லாம் nature lovers.
இப்படியே இருப்போம்...ஸென்லேயே சொல்லிட்டாங்க...:-))

said...

//வாங்க வாங்க...நீங்க என் ப்ரென்ட் தானே..ஜூலிய பிடிக்க மாட்டீங்க//

ஆமாம்! பிடிக்க மாடேன்!


(காரணம் எங்களுக்கு நாய்க்கறி பிடிக்காது :) )

said...

அவந்திகா....உங்க அழகு பதிவு ரொம்ப அழகான கதையுடன் அழகா இருக்கு. உங்க ஜுலியும் ரொம்ப அழகாக இருக்கு.

ஆமா....அதுஎன்ன ஜுலிக்கு தெலுங்குல சொன்னாதான் புரியுமா ....உண்மையில் ஜுலி ஒரு வியர்டுன்னு நினைக்குறேன் ;-))

ஆமா...அடுத்த மூணு பேரு யாருன்னு சொல்லவேல்ல?

said...

ஆவி அம்மணி

ரெம்ப நன்றிங்கோவ்...நாய்களுக்கும் ஆவி அம்மணிகளை கண்டா பிடிக்காதுங்கோவ்...
இருந்தாலும் நீங்க எங்க வூட்டுக்கு வரையில எங்க சூலி ஒன்னும் பண்ணாம நான் பாத்துக்குறேன்..

said...

ஜூலிக்கு இந்தப் பின்னூட்டத்தைப் படித்துக் காட்டிவிடுங்கள் அவந்திகா.

"ஏய் ஜூலி நீ ரொம்ப அழகா இருக்கே!"

said...

கோபி அண்ணா..ஜூலி அழகா இருக்குன்னு சொன்னதுக்கு தேங்ஸ்

நாங்க தெலுங்கிலேயே பேசி ஜூலியும் அப்படியே train ஆயுடுச்சு..

யாரை கூப்பிடறதுன்னு தெரியலை.. நான் கூப்டா போஸ்ட் போடுவாங்களான்னு தெரியலை... நான் கூப்பிடலாம்னு நினச்சவங்க எல்லாரையும் கூப்டுட்டாங்க.. சிலர் போஸ்ட் போட்டுட்டாங்க...அதான் யாரையும் கூப்பிடலை..

said...

//ரெம்ப நன்றிங்கோவ்...நாய்களுக்கும் ஆவி அம்மணிகளை கண்டா பிடிக்காதுங்கோவ்...
//

உண்மைதான்.

//
இருந்தாலும் நீங்க எங்க வூட்டுக்கு வரையில எங்க சூலி ஒன்னும் பண்ணாம நான் பாத்துக்குறேன்.. //

மிக்க நன்றி! ஏன்னா நாமதான் ஃபிரண்ட்ஸ் ஆச்சே!
:))

said...

//நான் கூப்பிடலாம்னு நினச்சவங்க எல்லாரையும் கூப்டுட்டாங்க.. சிலர் போஸ்ட் போட்டுட்டாங்க.//

அப்படி ஏன் நினைக்குறீங்க!

உங்களுக்குத்தான் நாங்க( ஆன் லைன் ஆவிகள்) இருக்கோமே!

:))

said...

ஹை தமிழ்நதி அக்கா...:-)))))

வாங்க..வாங்க...

சொல்லிட்டேன்..ஜூலி
உங்களுக்கு தேங்ஸ் சொல்லீருச்சு

அக்கா.. டைம் கிடைகறப்போ வந்து நான் எப்படி எழுதறேன்னு சொல்லுங்க

said...

அழகு பதிவு அழகா எழுதி இருக்கீங்க. நீங்க மூணு பேரைக் கூப்பிடணுமே. அப்போதானே இந்த ஆறு நல்ல பாய்ந்து ஓடும். யாரு மூணு பேரக் கூப்பிடப் போறீங்க?

said...

//இலவசக்கொத்தனார் said...
யாரு மூணு பேரக் கூப்பிடப் போறீங்க? ////

கண்டிப்பா கூப்பிடனுமா..அப்போ again ஆவீஸ் தான் ஹெல்ப் பண்ணனும்...

said...

//. நான் கூப்டா போஸ்ட் போடுவாங்களான்னு தெரியலை... ///

அப்படி எல்லாம் நினைக்காதீங்க. சின்னப் பையன் நான் கூப்பிட்டு வல்லியம்மா, துளசி டீச்சர் அப்படின்னு பெரியவங்க எல்லாரும் சரின்னு சொன்னாங்க பாருங்க. யாரையாவது மூணு பேர் கூப்பிடுங்க! பயமெல்லாம் வேண்டாம். :))

said...

சரி அண்ணா..கூப்பிடறேன்

said...

/இலவசமா இயற்கை இத்தன அழகா இருக்கும் போதுன்னு சொன்னாராம்.
/
அதென்னமோ உண்மைதான், தங்கச்சி!
இலவசமா...கிடைச்சாலே கண்டுக்க மாட்டோமோ?

/இது தான் என்னோட அழகு பதிவு. நல்லா இருக்கா?
/
நல்லா இருக்குங்க...ஜூலியும்தான்!

/ அவந்திகா said...
இந்த லூசு பின்னாடியே போயிடும்
/
ஜூலி கோவிச்சிக்கபோகுது?!

said...

//ஜூலி கோவிச்சிக்கபோகுது?!///


/நல்லா இருக்குங்க...ஜூலியும்தான்!//

:-))...ஆமா கோச்சுக்கும்..
தேங்க்ஸ் அண்ணா..

said...

உங்க அன்பான அழைப்பை ஏற்று நானும் ஒரு அழகுப் பதிவு போட்டுட்டேனே!

said...

அட அழகாதான் இருக்கு!

said...

--//சூப்பர்..நாம எல்லாம் nature lovers.
இப்படியே இருப்போம்...ஸென்லேயே சொல்லிட்டாங்க...:-))//--

தாயே...ஒன்னு சொன்னா கோவிக்கப்டாது....ஸென் இயல்பா இருன்னுதான் சொல்லுது....

said...

பங்காளி அண்ணா

எதுக்குண்ணா கோவிக்கறது
நீங்க எல்லாம் சொல்லாம யாரு சொல்லுவா...

said...

//தம்பி said...
அட அழகாதான் இருக்கு!//

தேங்க்ஸ் அண்ணா

said...

நீங்க கூப்பிடாமலேயே அ.ஆ. விளையாட்டுக்கு ஆ.அ. வந்துட்டாங்களே!! :)

said...

அண்ணா நீங்க சொன்ன உடனே அவீஸ் தான் ஹெல்ப் பண்ணனும்னு சொன்னனா..உடனே வந்துட்டாங்க.. ஆவீஸ் இல்லையா....அதான் என் மனசில இருந்தத புரிஞ்சிட்டாங்க...

//அ.ஆ. விளையாட்டுக்கு ஆ.அ. வந்துட்டாங்களே!! :)//

:-)))))))))))))))

said...

ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க! 6 அழகு எழுதனுமே....

கதை ஒன்னு சொல்லி, அழகுக்கு அழகு கூட்டிட்டிங்க.

Zen இயல்பா இருன்னு சொன்னார்ன்னு நெனச்சேன். "ஒன்னுமே செய்யாம இரு"ன்னு சொன்னாரா உங்க கிட்ட மட்டும். ;-)

ஜூலு கலக்கல். நாங்க சின்னப் பிள்ளைல இருந்தப்போ நாய், பூனை, வாத்து, முயல், Love Birds, மீன் எல்லாம் வளர்த்தோம். நீங்க அழகா போட்டோ எடுத்து போட்டது இன்னும் அழகு!

said...

எழுதி முடித்ததும் தான் காமெண்ட் எல்லாம் வாசிச்சேன். பங்காளியும் இயல்பா இருன்னு சொன்னத வாசிச்சேன். திரும்ப எழுதி கடுப்படிச்சிட்டேனா அம்மணி?

Locations of visitors to this page