Wednesday, April 18, 2007

வெற்றி - ஸென் கதை 6


ஒரு ஊர்ல ஒரு வயதான போர் வீரர் ஒருத்தர் இருந்தார். ரொம்ப கெட்டிக்காரர். வயசான அப்புறமும் எதிரிகளை வென்று வந்திருக்கிறார். அவர்கிட்ட தோல்வி அப்படீங்கறதே இல்லை. அவர் கிட்ட பலர் வந்து கத்துகிட்டாங்களாம்.

ஒரு முறை அந்த ஊருக்கு ஒரு சின்ன வயசு போர் வீரர் வந்தான். அவன் இந்த பெரியவர பத்தி கேள்வி பட்டு அவர எப்படியாவது தோர்க்கடிக்கனும்னு முடிவு பண்ணி சண்டைக்கு கூப்டானாம். இந்த இளம் வீரன் கிட்ட என்ன ஒரு பலம்னா, எதிரியோட வீக்னஸ் தெரிஞ்சு, அதையே இவனுக்கு பலமாக்கி தாக்குவான். இதுல இவன மிஞ்சறதுக்கு ஆள் இல்லை. எதிரிய முதல தாக்க விட்டுட்டு அப்புறம் தான் இவன் தாக்குவான்.

அதே மாதிரி இந்த வயதான வீரர் கிட்ட சண்டைய ஆரம்பிச்சான். பெரியவர் வந்து பேசாம அவன் முன்னாடி நின்னுட்டார். இவன் அவர் மேல மண் எடுத்து வீசினான். வாய்க்கு வந்த படி திட்டினான். முதல்ல அவர் அடிக்கட்டும்னு இத்தனையும் செஞ்சு இருக்கான். ஆனால் பெரியவர் ஒன்னும் அசையவே இல்லை. கடைசியில இவனே சோர்ந்து போய், முடியாம போயிட்டானாம்.

பெரியவர் கிட்ட படிக்குற மாணவர்கள் வந்து, "சார் என்ன நீங்க, அவன் அப்படி பேசி, அவமானப் படுத்தீட்டு போறான், நீங்க பேசாம இருக்கீங்க" அப்படின்னு கேட்டு இருக்காங்க.

அதுக்கு பெரியவர் சொன்னாராம், "ஒருவர் நமக்கு ஏதாவது பரிசு கொடுக்க வர்ரப்போ, நம்ம வேண்டாம்னு சொல்லிட்டா, அப்புறம் அந்த பரிசுக்கு யாருக்கு சொந்தம்னு?" கேட்டாராம்.
"To win without violence is the greatest victory!"

12 comments:

said...

//"To win without violence is the greatest victory!"//

காந்திக்கு அப்புறம் இந்த வார்த்தைய ஞாபகம் வச்சிருக்கறது 'சென்' கதையில மட்டும்தான்.

'சென்'ஷி

said...

//"To win without violence is the greatest victory!"//
இது இந்திய அணிக்கு உள்குத்தா?

said...

/"ஒருவர் நமக்கு ஏதாவது பரிசு கொடுக்க வர்ரப்போ, நம்ம வேண்டாம்னு சொல்லிட்டா, அப்புறம் அந்த பரிசுக்கு யாருக்கு சொந்தம்னு?" /

தங்கச்சி, இதேபோல அன்னை தெரசா வாழ்க்கையிலும் ஒரு சம்பவம் உண்டு.

/ "To win without violence is the greatest victory!"
/
ம்ம்... நடைமுறைக்கு ரொம்ப சவாலானதுதான்... மனிதர்களை மகாத்மாகவும்/புனிதர்களாகவும் ஆக்குவது இந்த குணம்தானோ?

said...

தேங்கஸ் சென்ஷி அண்ணா

//Fast Bowler said...
//இது இந்திய அணிக்கு உள்குத்தா?//

அண்ணா, பாவம் அவங்க என்ன பண்ணாங்க..."ஒன்னுமே பண்ணலை" இல்ல...:-))))

said...

தேங்கஸ் தென்றல் அண்ணா

said...

அவந்திகா....

நல்ல கதை...நல்ல நீதி...

இங்கே வலைபதியற சில பெரியவங்க இந்த கதைய படிச்சா இங்க நடக்கிற பாதிபிரச்சினை தீர்ந்திரும்...:-)))

said...

பங்காளி அண்ணா தேங்க்ஸ்..:-)

said...

கதை ரொம்ப நல்லா இருக்கு அவந்திகா! உங்க ப்ரோப்ஃபைலில் மாணவின்னு பார்த்தேன். ஆதனால Zen கதைய பார்த்ததும் ரொம்ப ஆச்சரியமா போச்சி. Zen தத்துவம் புரிய ஆரம்பிச்ச்சா, உலகமே ஒன்றாயிடுமே.

ரொம்ப அழகா எழுதுறீங்க! நெறையா எழுதுங்க!

said...

//காட்டாறு said...
கதை ரொம்ப நல்லா இருக்கு அவந்திகா! ......ரொம்ப அழகா எழுதுறீங்க! நெறையா எழுதுங்க!//

ரொம்ப தேங்க்ஸ்க்கா...

said...

இவ்ளோவ் சீக்கிரமா எழுந்தாச்சா....நைஸ்..நைஸ்...நல்ல பழக்கம்....

said...

அண்ணா..

தூங்க விட மாட்டேங்குறாங்க..:-))

all இம்சைஸ்..:-))

said...

//"To win without violence is the greatest victory!"//
Nice Ones.

Locations of visitors to this page