Monday, March 26, 2007

எப்ப படிச்சு முடிப்பேன்....சென் (ZEN)

நான் சென் (Zen) கதைகள் சிலது படிச்சு இருக்கேன். பங்காளி அண்ணா இப்ப சென் பத்தி எழுதறார் இல்ல?...அத பார்த்துட்டு எனக்கும் அந்த குட்டி குட்டி கதைகள் இங்க சொல்லனும்னு தோனுச்சு. தென்றல் அண்ணாவும் சொல்ல சொல்லி கமெண்ட் போட்டு இருக்கார். அதனால எனக்கு நியாபகம் இருக்குற சென் கதைகள் பத்தி எழுதப்போறேன். போரடிச்சா சொல்லுங்க.. OK?

பங்காளி அண்ணா...with your wishes I am starting this

கதை..

சென் படிச்சுட்டு இருந்த ஒரு மாணவன் அவங்க டீச்சர் கிட்டே போய் "ஐயா, நான் நல்லா படிச்சா, சென் படிச்சு முடிக்க எவ்வளவு நாள் ஆகும்"னு கேட்டானாம். அதுக்கு டீச்சர் சொன்னாராம் '10 வருஷம் ஆகும்" னு.

மாணவன் -" ரொம்ப நல்லா படிச்சா?"

டீச்சர் - "20 வருஷம்"

மாணவன் - "இன்னும் கஷ்டப்பட்டு படிச்சா?"

டீச்சர் - "30 வருஷம்"

மாணவனுக்கு ஓன்னும் புரியலை. என்ன ஐயா இப்படி சொல்ரீங்கன்னு கேட்டானாம். அதுக்கு டீச்சர் சொன்னாராம்

"When you have your one eye on the goal, then you will have only one eye on the path to achieve it. Then you will lack concentration"

(இது தமிழ்ல எழுத தெரியலை, மன்னிக்கவும்)

21 comments:

said...

"உன் ஒரு கண் மட்டுமே செல்லும்இடம் நோக்கி இருப்பின், அதைச் சென்றடையவும் ஒரு கண் மட்டுமே இருக்கும். உன் கவனம் அப்போது குறைந்துவிடும்."

நல்ல கருத்து. சகோதரி.

said...

VSK

//"உன் ஒரு கண் மட்டுமே செல்லும்இடம் நோக்கி இருப்பின், அதைச் சென்றடையவும் ஒரு கண் மட்டுமே இருக்கும். உன் கவனம் அப்போது குறைந்துவிடும்."//

நன்றி அண்ணா

said...

அஹா...அருமை..அருமை...

மொத பந்துலயே ஹி..ஹி..சாரி..மொத ஸென் பதிவுலயே சிக்ஸர் அடித்த அவந்திகாவுக்கு வாழ்த்துக்கள்....

சரளமா எழுதறீங்க...நெறய எழுதுங்க அவந்திகா...

Anonymous said...

உனது ஒரு கண் இலக்கில் கவனம் செலுத்துகமேயானால்,நீ செல்லும் பாதையை கவனிக்க ஒரே ஒரு கண் மட்டுமே உள்ளது. இதனால் உன் கூர்நோக்கும் திறன் குறைந்து விடும். - இது இன்னும் தெளிவாக இருக்கிறதல்லவா....? புரிந்து கொள்வது சற்றே கடினம். மனப்பூர்வமாக உணர்ந்து கொள்வது மிகவும் கடினம். அதை வாழ்வில் நடைமுறைப்படுத்துவது மிக மிகக் கடினம். இது அனேகமாக எல்லா ஸென் கருத்துகளுக்கும் பொருந்தும். இன்னொரு முக்கியமான விசயம், இன்று ஸென் கதைகள் என கூறப்படும் பல கதைகள் போலிகளே.

said...

//பங்காளி said
மொத பந்துலயே ஹி..ஹி..சாரி..மொத ஸென் பதிவுலயே சிக்ஸர்///

ஹை..அண்ணா அதுகுள்ள பார்த்துடீங்களா...
சிக்ஸர் example நல்லா இருக்கு...
:-))))
thanks anna

said...

ZEN கதைகள் எனக்கும் பிடித்தமானது. எழுதுங்க.. படிக்க சுவாரசியமும் சிந்திக்கவும் வைக்கும்.

said...

//இன்று ஸென் கதைகள் என கூறப்படும் பல கதைகள் போலிகளே//

message நல்லா இருந்தா share பண்ணிக்கலாம்...ஸென் கதைகள்னு சொன்னா நிறைய பேர் accept பண்ணிப்பாங்க இல்ல...
எப்படி கண்டு பிடிக்கறது போலியானு?...

said...

//சிவபாலன் said...
ZEN கதைகள் எனக்கும் பிடித்தமானது. எழுதுங்க.. படிக்க சுவாரசியமும் சிந்திக்கவும் வைக்கும்//

thanks anna

said...

நல்ல கதை'ம்மா.. தங்கச்சி.... :)

நீ இன்னும் வியர்ட் பதிவு போடலையா??? அப்பிடின்னா ஒன்னயே Tag எடுத்துற வேண்டியது தான் :))

said...

அட... முத கதையிலேயே ரொம்ப சிந்திக்க வைக்கிறீங்களே, அவந்திகா!

நல்ல முயற்சி, தங்கச்சி! தொடர வாழ்த்துக்கள்!

said...

இராம்/தென்றல் அண்ணா..நன்றி

ராதாக்கா என்ன weird க்கு கூப்டு இருக்காங்க...ஆளே லூசு அதுல எத pick பண்ணி எழுதறது?..

said...

http://valai.blogspirit.com/archive/2007/03/26/weird.html

said...

//உன் ஒரு கண் மட்டுமே செல்லும்இடம் நோக்கி இருப்பின், அதைச் சென்றடையவும் ஒரு கண் மட்டுமே இருக்கும். உன் கவனம் அப்போது குறைந்துவிடும்//

இதுல நம்ம அணிக்கு உள்குத்து எதுவும் இல்லையே :) ?

said...

நான் எப்ப படிக்க ஆரம்பிக்கறதுன்னே
தெரியல...? :))
அவந்தி.
உங்கிட்ட தான் புக் வாங்கி
படிக்கப்போறேன்.

said...

//இதுல நம்ம அணிக்கு உள்குத்து எதுவும் இல்லையே :)//

நம்ம அணியா?..அது எதுண்ணா?...
:-)))..மறந்து போனது எல்லாம் நியாபகப் படுத்தாதீங்க... என்ன குத்துனாலும் No use annaa...

லட்சுமி அக்கா

ஊர்ல இருக்கு எடுத்துட்டு வர்ரேன்..

Anonymous said...

// message நல்லா இருந்தா share பண்ணிக்கலாம்...ஸென் கதைகள்னு சொன்னா நிறைய பேர் accept பண்ணிப்பாங்க இல்ல...
எப்படி கண்டு பிடிக்கறது போலியானு?... // எத்தனை ஆயிரம் ஸென் கதைகள் இருந்தாலும் அவை சொல்லும் விசயம் ஒன்றே ஒன்றுதான். ஒரே ஒரு வாக்கியத்தில் சொல்லிவிடக்கூடிய தத்துவம்தான் ஸென். சில கதைகள் அத்தத்துவத்தை சிறப்பாக புரிந்து கொள்ள உதவும். 'ஸென்' என்ற பெயரில் புற்றீசல் போல வரும் கதைகளால் உண்மையான தத்துவ விளக்க கதைகள் சரியாக அடையாளம் தெரிந்து கொள்ளப் பட முடியாமல் போய் விடுகிறது. ஸென் அடிப்படையை அறிய முயலுங்கள். போலிகளை கண்டறியலாம். Example for one good zen quotation: "Before Enlighnment..... He goes to forest. chops wood. Fetches water. After Enlighnment ..... He goes to forest. chops wood. Fetches water. "

said...

இதுல இன்னொரு கண் எதைத் தேடுதுங்கிறது முக்கியமானது.

ஜென் கதைகள் தொடருங்கள்.

நான் போட்ட ஜென் பதிவ பாத்தீங்களா?

said...

anonymous...thanks..


சிறில் அலெக்ஸ் அண்ணா..உங்க போஸ்ட்..சூப்பர்..ரொம்பபபப பெரிய போஸ்ட்..download ஆயிட்டே இருக்கு
:-)))))...எப்படி..இப்படி..

said...

நான் கொஞ்சம் லேட்டுன்னு நினைக்குறேன் ;-(

ம்ம்ம்...சென் கதை ரொம்ப அருமையாக இருக்கும்மா ;-))

நானும் கூட படிச்சுருக்கேன் ஆனந்த விகடனில்.
அப்புறம் ரொம்ப நல்லா இருக்கு உங்க எழுத்து நடை....நிறைய எழுதுங்க ;-))

வாழ்த்துக்கள்

said...

அவந்திகா! குட், ஸென் கதையா... அபிபாப்பாவுக்கும் பாஸ் செய்கிறேன்:-))

said...

//NO TENSION PLEASE //
அப்ப படிக்காமலேயே இருந்தா :)) அடிச்சிடாதிங்க.. நல்லா இருந்திச்சி கதை.

Locations of visitors to this page