Wednesday, May 23, 2007

தமிழ்மணம் Vs World XI- Part-1


First time in the History of the game. Tamil bloggers are playing World XI at India Gate Lawn, New Delhi.

முதல்ல டீம் செலக்ஷன்.

யார எடுக்க யார விடன்னு ஒரே கன்ப்யூஷன். என்னையும் அபி பாப்பாவையும் உட்கார்ந்து டீம் செலக்ட் பண்ண சொன்னாங்க. அபி பாப்பாவ அனுப்பி வைக்க சொன்னது கண்மணி அக்காவும் மைபிரெண்டு அக்காவும்.

எனக்கு ஒரே குஷி, ஹை..அபிபாப்பா வரப்போகுதுன்னு. ஃபாஸ்ட் பவுளர் அண்ணா 'அவந்தி ரொம்ப சந்தோஷப் படாதே பாப்பாவ சமாளிச்சதுக்கு அப்புறம் இத சொல்லுன்னு" ஃபோனல் சொன்னார். இவருக்கு பொறாமைனு நினச்சுட்டு சரி சரி நான் பார்த்துக்குறேன்னு சொல்லிட்டேன்.

பாப்பாவ போய் ஏர்போர்ட்ல கூப்டுட்டு வீட்டுக்கு வந்தேன். டிரைவர் ஒரு சிங்

ஏய் அவந்தி 'என்ன டிரைவர் ஏற்பாடு பண்ணி இருக்கே?...குடுமி டிரைவர்..

பாப்பா அப்படியெல்லாம் சொல்லக்கூடாது அவங்க மதத்துல அப்படி தான்..

அது எல்லாம் முடியாது என் குடிமி விட அவன் குடிமி பெருசா இருக்கு. நான் ஏற மாட்டேன் வேற கார் ஏற்பாடு பண்ணுன்னு ரோட்ல உட்கார்ந்துட்டா.

ஆஹா ஆரம்பிச்சுறுச்சுட்டா போலன்னு பயம் வந்துறுச்சு. சர்தாஜிக்கிட்ட பேசி அனுப்பீட்டு வேற கார் ஏற்பாடு பண்ணேன். ஏசி இருக்கான்னு கேட்டா. எல்லாம் இருக்கு ஏறு பாப்பா...பூச்சாண்டி வந்துறுவான்னு பயமுறுத்தினேன்

ஏய் அவந்தி என்ன உங்க காலம் மாதிரி பூச்சாண்டிக்கு பயந்துக்குவோம்னு நினச்சியா. அந்த பூச்சாண்டிகே அல்வா குடுத்தவங்க நாங்க தெரியுமா?..

சரி சரி ஏறு பாப்பா ன்னு கெஞ்சி ஏற வச்சேன்.

பங்காளி அண்ணா, தென்றல் அண்ணா, எல்லாரும் அவங்களை நியாபகத்துல வச்சுக்கு சொல்லி போன்ல வாழ்த்து சொன்னாங்க. பாப்பா கிட்ட பேசனும்னு சொன்னாங்க. ஆனா பாப்பா I am very tired...டீம் செலக்ஷனுக்கு முன்னாடி யாரு கிட்டேயும் பேச மாட்டேன்.. நீயும் பேச கூடாதுன்னு சொல்லி போன பிடிங்கி வச்சிட்டா.


முதல் நாள் அபி பாப்பா ' ஏய் அவந்தி என்ன இது, இது மாதிரி இடத்துல உட்கார்ந்தா டீம் செலக்ட் பண்ணுவாங்க?. எனக்கு இப்படி எல்லாம் இருந்தா மூளை வேலை செய்யாது. (இருந்தாலும்..ஹ்ம்ம்ம்) கேஷ்மீர், சிம்லா கூப்டுட்டு போய், அந்த கிளைமெட்ல இருந்தாதான் நான் செலக்ட் பண்ணுவேன்" அப்படீன்னு ஒரே அடம்.

நான்- ப்ளீஸ் பாப்பா, இந்த தடவை அடஜ்ஸ் பண்ணிக்கோ, அடுத்த தடவை நம்ம Switzerland போலாம்.

பாப்பா- அடுத்த தடவை எங்க போறதுன்னு நீ என்ன சொல்றது. அது எல்லாம் முடியாது. என் ரேன்ஞ்சுக்கு நான் இந்த மாதிரி டீம் எல்லாம் செலக்ட் பண்றதே இல்லை. என்னமோ கண்மணியும், மைபிரெண்டும் ரொம்ப தொந்தரவு பண்ணாங்கன்னு ஒத்துட்டேன். அதுவும் நீ தான் என்னோட இருப்பேன்னு அந்த ரெண்டும் சொல்லவே இல்லை. எனக்கு இது எல்லாம் தேவையா.? Sorry..No chance..take me to Simla, அப்படீன்னு சொல்லீட்டு ரொம்ப மும்முரமா கைசூப்ப ஆரம்பிச்சுட்டா.

நான் - பாப்பா இது பாரு இன்னும் நீ கை சூப்பரதே நிறுத்தலை, இந்த ரேஞ்சல நீ விடற பந்தா உனக்கே ஓவரா தெரியலை?... இன்னைக்கு சாயந்திரத்துக்குள்ள டீம் டிசைட் பண்ணனும். ப்ளீஸ் பாப்பான்னு கெஞ்சினேன்.


பாப்பா - ஹூம்..அதி எல்லாம் முலியாது போதி....அப்படீன்னு கை எடுக்காம மறுபடியும் திட்டுனா.

நான் உடனே கண்மணி அக்காக்கு ஃபோன் பண்ணி' அக்கா இந்த குட்டி சாத்தான் கிட்ட என்ன விட்டுட்டு நீங்க என்னடான்னா ஜாலியா பிளாக் தண்டர் சுத்தீட்டு இருக்கீங்களா. இது சரிப்பட்டு வராது. பேசாம இவள அடுத்த பிளைட்ல அனுப்பி வச்சர்ரேன், அஞ்சலி பாப்பாவ அனுப்பி வைங்கன்னு சொன்னேன்.
இத கேட்டுட்டு பாப்பா 'ஓ இவ நம்மள அனுப்பீட்டு தான் வேற வேலை பாப்பா போல இருக்கு' ன்னு பயந்துட்டு "ஏய் அவந்தி இங்க வா..சரி சரி ரொம்ப அழுவாத, போனா போகுது, இந்த ஒரு தடவை செலக்ட் பண்ணி தொலைக்கிறேன்' ன்னு பெரிய மனசு பண்ணா.

பாப்பா- ''யார் யார் எல்லாம் பேர் குடுத்து இருக்காங்க. இங்க பார் தில்லி சுத்தி பார்க்க வர்ர கேஸ் எல்லாம் நான் செலக்ட் பண்ண மாட்டேன்.''

நான் - ''சரி பாப்பா, இந்தா லிஸ்ட்''

லிஸ்ட் வாங்கி பார்த்துட்டு.." எனக்கு ரொம்ப தாகமா இருக்கு Coke Please!.. கோக் இருந்தா எனக்கு கூடவே Almonds chocalate and Cashew Biscuits இருக்கனும். So அது எல்லாம் ரெடி பண்ணு.. என்ன முழிக்குறே. போ போ பராக்கு பாக்காம சீக்கிறம் எடுத்துட்டு வா..கஷ்டகாலம் இதுக கிட்ட எல்லாம் நான் வந்து.. என் தலை எழுத்து" அப்படீன்னு கவுண்டமனி மாதிரி செம பந்தா.

இருடி மேட்ச் முடியட்டும் அப்புறம் இருக்கு உனக்குன்னு மனசுல நினச்சுட்டேன். இப்ப தான் தெரியுது எதுக்கு அபி அப்பா பாப்பாவ அனுப்பி வச்சார்னு. அவர் தப்பிக்கிறதுக்காக என்னை மாட்டி விட்டுட்டார்.

பாப்பா- சரி யாரு கேப்டன்

நான் - எல்லாரும் என்னை இருக்க சொல்றாங்க பாப்பா

பாப்பா- ஏய் ! என்ன நான் கேனச்சின்னு நினச்சுட்டியா, நீயே முடிவு பண்ணிப்பியா அது எல்லாம் முடியாது, நான் தான் கேப்டன்

நான் - அய்யோ பாப்பா நீ பேட் ஹைட் கூட இல்லை..நீ எப்படி..

பாப்பா- ஏய் அதிகமா பேசற நீ...அத பத்தி உனக்கு என்ன கவலை.

நான் - பாப்பா, இருந்தாலும் இது எல்லாம் ஓவர். என்ன இருந்தாலும் உன்னை விட நாங்க எல்லாம் பெரியவங்க. இப்படி எல்லாம் பேச கூடாது.

பாப்பா - பெரியவங்களா?....உங்களுக்கு இதுக்கெல்லாம் பத்தாதுன்னு தான என்ன டீம் செலக்ட் பண்ண உலக தமிழர்களெல்லாம் சேர்ந்து அனுப்பி வச்சு இருக்காங்க, என்ன?.. என்ன கூப்டு வச்சு இன்சல்ட் பண்றியா?..

கீழ விழுந்து கைய கால ஆட்டி ...ஆர்ப்பாட்டம் பண்ணி...எனக்கு இப்பவே அம்மாவ பார்க்கனும். அம்மா..அம்மா.. போன்ல அபி அம்மாவ கூப்டு கம்ப்ளெயின்ட் பண்ணா. அம்மா இந்த அவந்தி குரங்கு என்ன அடிக்குறா அம்மா..திட்டிட்டே இருக்காம்மா---அய்யோ அவ்வ்வ்வ்ளோ பெரிய பொய்!

அபி அம்மா, என்கிட்ட அவந்திம்மா..ப்ளீஸ் கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்கோடா...இன்னைக்கு தான் நிம்மதியா சீரியல் பார்க்குறேன். இந்த அபி அப்பாவ சமாளிக்குறதே எனக்கு பெரும்பாடா இருக்கு. ரெண்டும் சேர்ந்தா இந்த ஊர்ல இருந்து எங்களை துரத்தீறுவாங்க. ப்ளீஸ் குட்டி."
பாவமா இருந்துச்சு..நமக்கு ஒரு நாளைக்கே இப்படி இருந்தா. காலம் பூரா இவங்ககிட்ட இருக்குற அம்மா பாவம்னு நினச்சு சரி சமாளிக்கலாம்னு நினச்சேன்.

நான் - பாப்பா கேப்டனுக்கு பேட்டிங்க இல்லண்ணா பவுளிங்க ஆவது தெரிஞ்சு இருக்கனும். உனக்கு என்ன தெரியும்.

பாப்பா- எனக்கு பதில் பங்காளி அங்கிள் பேட் பண்ணுவார்.

நான் - அது எப்படி?... அவர் சான்ஸ் வரும்போது என்ன பண்ணுவார்

பாப்பா - ஏன் பை ரன்னர் இருக்கும்போது பை பேட்ஸ்மென் இருக்க கூடாதா?... அவர் ரெண்டு தடவை பேட் பண்ணுவார். அவ்ரே பேசாம இருக்கும் போது உனக்கு என்னடி?...இங்க பார் இதுக்கு மேல ஏதாவது பேசினேன்னா அப்புறம் நீ என்ன ரொம்ப அடிச்சேன்னு எல்லார்த்கும் போன்ல சொல்லீறுவேன் .
- தொடரும்

29 comments:

said...

இது என்ன புது கதையா இருக்கு!!

said...

அஹ்ஹஹ்ஹா:-))))))))))))))))

said...

கண்மணி டீச்சருக்கு எழுத்து வாரிசு ரெடி:-)))

said...

நான் தான் பந்து பொறுக்கி போடுவேன், சரியா?

said...

எல்லார்துக்கும் தேங்க்ஸ்

said...

ROFTL..kalakal avanthika :))..

said...

அட... தங்கச்சி... கலக்குறீங்க..!
ஜீலியை பாத்துகூட அபி குட்டி பயப்படலையா ? ;(

/அபி அப்பா said...
கண்மணி டீச்சருக்கு எழுத்து வாரிசு ரெடி:-)))
/
அவந்திகா... எங்கேயோ போயிட்டீங்க.. :) !

said...

வெல்டன் அவந்திகா சூப்பர்ப்.அபிபாப்பாவ நெனச்சாலே நமக்கு காமெடி பிச்சிக்கும் ஏன்னா அது காமெடி லூஸு வீட்டு சாரி கிங் வீட்டு வாரிசாச்சே.
ஆனா அபிஅம்மாதான் இந்த ரெண்டையும் எப்டி சமாளிக்கிறாங் களோ?

said...

ஆஹா...இத எப்படி மிஸ் பண்ணினேன்...கலக்கறீங்க அவந்திகா....

ஹைய்யா..நாந்தான் பர்ஸ்ட் செலக்ட் ஆய்ருக்கேன்...

மக்களே, யாராச்சும் இந்த பெப்ஸி, கோக் பயபுள்ளைகள பாத்தா இங்கிட்டு அனுப்பி வையுங்களேன்..மேட்ச்சுக்கு முன்னால எவனாவது ஒருத்தன எண்டார்ஸ் பண்ணீ சில்லரை தேத்தீரலாம்...ஹி..ஹி..

said...

சந்தோஷ், அண்ணா..தேங்க்ஸ்

//தென்றல் said...
அட... தங்கச்சி... கலக்குறீங்க..!
ஜீலியை பாத்துகூட அபி குட்டி பயப்படலையா ? ;(//

பாப்பா தான் டைகர் கிட்ட பழக்கம் ஆன்வ ஆச்சே...அவ யாருக்கும் பயந்துக்குற மாதிரி தெரியலை.:-)

said...

கண்மணி அக்கா

ஆமா..அபி அம்மா ரொம்ப்ப்ப்ப பாவம்..:-)

பங்காளி அண்ணா..

நீங்க தான் பர்ஸ்ட் செலக்ஷன்.. உங்க பேர் இருக்கா இல்லையானு பார்காமையே பாப்பா உங்களை செலக்ட் பண்ணீட்டா.. ஏதாவது சம்திங் சம்திங் குடுத்தீங்களா..:-))

நல்லா இருக்கா..தேங்கஸ் அண்ணா..

said...

ஹாய்டா.. இன்னிக்குதான் ஃப்ர்ஸ்ட் டைம் உன் பதிவு படிக்கிறேன். கலக்கிட்ட!! அபி அப்பா சாமியாரா போகப்போறாராமே!! கை குடு மொதல்ல!!

said...

'World XI'அ எதிர்த்து ஆடறதுக்கு முன்னால ரெண்டு மூணு மேட்ச் ஜெயிச்சா கொஞ்சம் தெம்பா இருக்கும். அதனால் இந்திய அணிகூட ஆடறதுக்கு மறக்காம ஏற்பாடு பண்ணிடுங்க :)

said...

//காயத்ரி said...
ஹாய்டா.. இன்னிக்குதான் ஃப்ர்ஸ்ட் டைம் உன் பதிவு படிக்கிறேன். கலக்கிட்ட!! அபி அப்பா சாமியாரா போகப்போறாராமே!! கை குடு மொதல்ல!!///

தேங்க்ஸ் அக்கா..அவர் சாமியாரா போயியிட்டா,,அப்புறம் நாம அயர வச்சு இப்படி எல்லாம் எழுதறது..:-))

said...

மணிகண்டன் அண்ணா..

சூப்பர் ஐடியா..தேங்க்ஸ் அண்ணா.:-))

said...

கலக்கிப் போட்டீங்க அவந்திகா.....

பாத்து அவந்திகா.. அபி வெவகாரமானப் பாப்பா... டீம் செலக்ட் பண்றதுக்கே மேட்ச் ஃபிக்ஸிங் பண்ணாலும் பண்ணும் :))

said...

//காயத்ரி said...
ஹாய்டா.. இன்னிக்குதான் ஃப்ர்ஸ்ட் டைம் உன் பதிவு படிக்கிறேன். கலக்கிட்ட!! அபி அப்பா சாமியாரா போகப்போறாராமே!! கை குடு மொதல்ல!! //

இங்க பார்ரா! சந்தாஷத்தை, உடம்புக்கு சரியில்லைன்னு M.Com படிச்ச டாக்டர் கிட்ட போன தக்கச்சிக்கு நான் சாமியாரா போறதுல எவ்வளவு சந்தோஷ்ம்!!!:-))

said...

கலக்கல்...

அபிய வச்சு தொடரா??? நடத்துங்க நடத்துங்க :)))

said...

ஜி, அபி அப்பா, இம்சை அரசி..

தேங்கஸ்

said...

இந்த தடவை அபி அம்மா இந்தியாவுக்கு டெல்லி வழியாதான் வரப் போறாங்களாம் - உங்களைக் கவனிக்கிறதுக்காகவே!

ஜாக்கிரதை :(

said...

அய்யோ

முதல் தடவை வந்துட்டு இப்படி பயமுறுத்தீட்டு போறீங்களே..:-(((

அம்மாவ நான் சப்போர்ட் தானெ பண்ணியிருக்கேன்...

said...

காத்துவாக்கில வந்த சேதிய சொன்னேன் .. அவ்வளவுதான் ..

said...

//தருமி said...
காத்துவாக்கில வந்த சேதிய சொன்னேன் .. அவ்வளவுதான் ///

ஹ்ஹ்ம்ம்...சரி அங்கிள்..இனி மேல் இது கவனத்துல வச்சுட்டு எழுதறேன்

said...

//delphine said...
குட்டி பாப்பா என்னமா எழுதுங்கோ!//

தேங்க்ஸ் அக்கா..அடிக்கடி வாங்க..

said...

ஆஹா.... ரொம்ப லேட்டா வந்துட்டனே.... செல்லம்.... எங்கடா... எங்கடா... வச்சிருந்த இந்த அறிவ... கலக்கு கலக்குன்னு கலக்குறீயே ராசாத்தீ.... திருஷ்டி பட்டுறப்போகுது... அபி பாப்பாவுக்கும் ஒனக்கும் திருஷ்டி சுத்திப் போடச்சொல்லும்மா...

said...

thanks akka

said...

என்ன ஆச்சி....கொஞ்ச நாளா ஆளையே கானோம்...

அம்மனி பிஸியா?

said...

Pangaali anna....ellarum nalla irukeengla

naan enga oorla

enjoy panneettu irukean...

Delhi ellaam marandhu poachu..:-)))

said...

ஹாலிடேஸா.....

என்சாய்ய்ய்ய்ய்ய்....

Locations of visitors to this page