Monday, May 21, 2007

டீம் G.K.R.Nagar



காலனி கிரிக்கெட் டீம் பத்தி ரெண்டு பேர் எழுதினாங்க இல்ல...அத படிச்சதும் நான் எங்க காலனியில விளையாடின கேம் நியாபகம் வந்துடுச்சு.

பொண்ணுக யாரு கிரிக்கெட் விளையாட வருவா?. 8th படிக்கிறவரைக்கும் வந்து விளையாடினாங்க. அதுக்கு அப்புறம் அவங்க வீட்ல விடலை. ஆனா எங்க வீட்ல மாமா 'நீ போய் விளையாடு நான் இருக்கேன்னு" சொல்லி சப்போர்ட் பண்ணுவார்.

பசங்களோட தான் விளையாடனும். ஆனா பசங்க என்ன சேர்த்துக்க மாட்டாங்க. பொண்ணுகளுக்கெல்லாம் விளையாட தெரியாதுன்னு. ஆனா நான் அடம் பிடிச்சு எப்படியோ டீம்ல சேர்ந்துக்குவேன்.என் கஸின் யாதவ் வருவான். அவன் விளையாடுவானா, அவனோட சேர்ந்து நானும் உள்ள நுழஞ்சுறுவேன். (இல்லன்னா ஜூலிய அவுத்து விட்டுறுவேன்னு அவங்களுக்கு தெரியும்).

கொஞ்ச நாள் பெரிய பசங்களோட விளையாடீட்டு இருந்தேன். ஆனா சில நாள் கழிச்சு என்ன வெளியே அனுப்பறதுக்காக, 'யாதவ் சின்ன பையன் அவன சேர்த்துக்க முடியாது' ன்னு சொல்லிட்டாங்க. நான் சொல்றத கேக்கலை.

'பெரிய டீம்', போங்கடான்னு சொல்லி, சின்ன பசங்களை வச்சு நானே ரெண்டு கிரிக்கெட் டீம் ஃபார்ம் பண்ணேன். சின்ன பசங்க தான நான் சொல்றத கேப்பாங்க.

நான் தான் ரெண்டு டீம்க்கும் கேப்டன்..;-), யார் ஜெயிச்சாலும் நானும் ஜெயிச்ச மாதிரி ஆகும் இல்ல..அதுக்கு தான்..;-))

ஒரு சோப்பளாங்கி பொண்ணு தான் அம்பயர். என்ன டிசிஷன் குடுக்கறதுக்கு முன்னாடி என்ன பார்த்துட்டு அப்புறம் தான் குடுக்கனும். நான் சிக்னல் குடுப்பேன்.

யார் எப்ப பேட் செய்வாங்க, எப்ப பவுள் செய்வாங்கன்னு நான் தான் டிசைட் பண்ணுவேன். சில சமயம் ப்ளேயெர்ஸ் எமர்ஜன்ஸி சேன்ஞ் கூட பண்ணுவேன். அது எல்லாம் கேக்க கூடாது.

ஒவ்வொரு பால் போட்டதற்கு அப்புறம் ரெண்டு பேட்ஸ்மென்னும் பேட்டால டச் பண்ணிட்டு சிரிக்கனும். (லூசே தான்). அப்படி டச் பண்ணலைன்னா அவங்கள வெளியே அனுப்பிறுவேன்.

கிரவுண்ட்ல கண்டிப்பா ஜூலி இருப்பா. என்ன யாராவது திட்டுனா அவங்கள பார்த்து கத்துவா இல்ல...அப்ப அவங்க பயந்துட்டு பேசாம இருந்துப்பாங்க.


அப்புறம் பால் தூறமா போய் விழுந்தா ஜூலிதான் எடுத்துட்டு வருவா. அவ எப்ப குடுக்கறாளோ அப்ப தான் விளையாட ஆரம்பிக்கனும். அவ கொஞ்ச நேரம் வச்சு விளையாடீட்டு தான் குடுப்பா.

பொண்ணுக தான் ஃபர்ஸ்ட் பேட்டிங்க். பொண்ணுக மட்டும் மூனு தடவை அவுட் ஆகலாம். நாங்க அவுட் ஆகறதுக்குள்ள இருட்டு ஆயிடும்.

கண்டிப்பா இன்னொரு டீம்ல இருக்கும் பெரிய பசங்களோட யாரும் பேசக் கூடாது. இதுல சிலருக்கு அவங்க அண்ணன் இருப்பாங்க அந்த டீம்ல. எனக்கு பயந்துட்டு எனக்கு முன்னாடி பேச மாட்டாங்க.

அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு பசங்க நான் சொல்றத கேக்கலை. என்ன ஒரு டீம்க்கு தான் கேப்டன்னா இருக்கனும்னு சொல்லிட்டாங்க. சரி சின்ன பசங்களுக்கு சப்போர்ட் பண்ணனும்னு சரின்னு சொல்லிட்டேன்.

எங்க நகர்ல இருக்கும் சின்ன பொண்ணுகளையெல்லாம் டீம்ல சேர்த்துட்டேன். பசங்க திட்டுவாங்க. "டேய் நான் இல்லாட்டி நீங்க கிரிக்கெட் விளையாடி இருப்பீங்களா" ன்னு சொல்லி பந்தா விட்டு அடக்கீறுவேன். ஏதாவது பேசினா எங்களை எல்லாம் அடிச்சீங்கன்னு வீட்ல போய் சொல்லீறுவோம்னு பயமுறுத்தி வச்சோம். பொண்ணுக சொல்றது தான எல்லாரும் கேப்பாங்கன்னு ஒரு தைரியம் தான்.

இப்ப ஒரு வருஷம் ஆச்சு எங்க டீம்ல விளையாடி. ரொம்ப மிஸ் பண்றேன் எங்க டீம. ஆனா அதுக எல்லாம் ரொமப சந்தோஷமா இருக்காங்க. நானும் ஜூலியும் இல்லைன்னு.

21 comments:

said...

ஏ..ங்..ப்...பா...! ;)

அழகா சொல்லிருக்கீங்க...,தங்கச்சி!

'சிவாஜி - The Boss' மாதிரி ...
அவந்திகா-னா எல்லாரும் பயப்புடுவாங்க-னு சொல்லுங்க..!
[பன்ச் டயலாக்-லாம் சொல்லமாட்டீங்களா..?!]

அப்பப்ப.. ஜீலியையும் கூப்பிட்டுகிறீங்க ... அதுதான் கொஞ்சம் பயமா இருக்கு ;( !

said...

தேங்க்ஸ் அண்ணா..

//அவந்திகா-னா எல்லாரும் பயப்புடுவாங்க-னு சொல்லுங்க..!//

:-)).. அப்படியெல்லாம் இல்லண்ணா

ச்சும்மா..ஆனா ஜூலியோட போனா பயந்துக்குவாங்க..

said...

நல்ல பதிவு.

//ஒவ்வொரு பால் போட்டதற்கு அப்புறம் ரெண்டு பேட்ஸ்மென்னும் பேட்டால டச் பண்ணிட்டு சிரிக்கனும். (லூசே தான்). //

:)

//அப்புறம் பால் தூறமா போய் விழுந்தா ஜூலிதான் எடுத்துட்டு வருவா. அவ எப்ப குடுக்கறாளோ அப்ப தான் விளையாட ஆரம்பிக்கனும். அவ கொஞ்ச நேரம் வச்சு விளையாடீட்டு தான் குடுப்பா//

:)

said...

நல்ல பதிவா?....நிஜமாவாண்ணா?

தேங்க்ஸ்ணா

அண்ணா என் ஃப்ரெண்ட்ஸ் ஆவிஸ் உங்களுக்கும் ஃப்ரெண்ட்ஸ் தானே..கேட்டேன்னு சொல்லுங்க..:-))

said...

//யார் எப்ப பேட் செய்வாங்க, எப்ப பவுள் செய்வாங்கன்னு நான் தான் டிசைட் பண்ணுவேன். சில சமயம் ப்ளேயெர்ஸ் எமர்ஜன்ஸி சேன்ஞ் கூட பண்ணுவேன். அது எல்லாம் கேக்க கூடாது.
//

இந்திய கிரிக்கெட் அணிய வழிநடத்துற அத்தனை தகுதியும் உங்களுக்க்கு இருக்கு அவந்திகா. சீக்கிரமே இந்திய அணியின் கேப்டனாக வாழ்த்துக்கள். கூடவே ஜீலிக்கும் :)

said...

தங்கச்சி,

கலக்கிட்டம்மா.. கலக்கிட்ட!! :)

// ஒவ்வொரு பால் போட்டதற்கு அப்புறம் ரெண்டு பேட்ஸ்மென்னும் பேட்டால டச் பண்ணிட்டு சிரிக்கனும். (லூசே தான்). //

நாங்கெல்லாம் ஒரு ஓவருக்கு ஒருதடவைதான் பிச்சுக்கு நடுவுல போய் நின்னுக்கிட்டு "டச்சு" வைச்சுக்கிட்டு வருவோம். நீங்க ஒவ்வொரு பாலுக்குமா?!

நல்ல வேளை! நம்ப டீமுக்குள்ள மேட்சு நடக்கலை! :)))

said...

கலக்கல் :))

said...

//இந்திய கிரிக்கெட் அணிய வழிநடத்துற அத்தனை தகுதியும் உங்களுக்க்கு இருக்கு அவந்திகா. சீக்கிரமே இந்திய அணியின் கேப்டனாக வாழ்த்துக்கள். கூடவே ஜீலிக்கும் :)///

:-)

நீங்க தான் மேனேஜர்...
தேங்க்ஸ்ணா

said...

//நல்ல வேளை! நம்ப டீமுக்குள்ள மேட்சு நடக்கலை! :))) //

அண்ணா..எங்க பவுண்ட்ரி சித்ரா தான் அத தாண்டி போய் விளையாட மாட்டோம்....அதுனால உங்க டீம் கூட விளையாட சான்ஸ் இல்லை...

said...

//சந்தோஷ் aka Santhosh said...
கலக்கல் :))///

தேங்க்ஸ் அண்ணா

said...

முக்கியமான விஷயம்...பக்கத்து வீட்ல பால் விழுந்தாலும் அவுட்..

இந்த மாதிரி யாராவது rules பார்த்திருக்குறீங்களா..:-))

said...

ஆஹா..

என்னன்னு சொல்ல தெரியல, ஆனா படிச்ச உடனே சந்தோசமா இருக்கு.
இந்த நடை உங்களுக்கு ரொம்ப லாவகமாவருது...நெறய எழுதுங்க அவந்திகா...

சும்மா சொல்லக்கூடாது, மெய்யாலுமே கலக்கறீங்க தாயே...

said...

வருங்கால இந்திய அணித்தலைவி....

வாழ்க! வாழ்க!!

said...

ஆஹா என்ன அருமையான பதிவு, லேட்டா பார்த்துட்டனே! என்னப்பா கலக்கலா எழுதறயே. இப்படியே கண்டின்யு பண்ணினா கண்மணி டீச்சர் அளவுக்கு வந்திடலாம்! வெரிகுட்!

பின் குறிப்பு: அப்படியே அண்ணாத்த இப்ப போட்ட பதிவு பாத்துட்டா நல்லது ஹி..ஹி.:-)))

said...

//சும்மா சொல்லக்கூடாது, மெய்யாலுமே கலக்கறீங்க தாயே...///

நீங்க எல்லாம் குடுக்குற encouragement தான் அண்ணா.. தேங்கஸ்:-)

said...

//Fast Bowler said...
வருங்கால இந்திய அணித்தலைவி....

வாழ்க! வாழ்க!! ///

அண்ணா..நீங்க தான் நான் கேப்டன் ஆனப்புறம் சப்போர்ட் பண்ணனும்.. பவுளிங்கல தான்..:-)..தேங்க்ஸ் அண்ணா

பங்காளி அண்ணா பேடிங்க்ல..:-)))

said...

//ஆஹா என்ன அருமையான பதிவு, லேட்டா பார்த்துட்டனே! என்னப்பா கலக்கலா எழுதறயே. இப்படியே கண்டின்யு பண்ணினா கண்மணி டீச்சர் அளவுக்கு வந்திடலாம்! வெரிகுட்!///

தேங்க்ஸ் அண்ணா..உங்க கிட்ட மட்டும் சொல்றேன்..சிலதெல்லாம் கேட்டு கேட்டு எழுதினேன்..:-))

said...

அடபாவிகளா,

மதுரை - 625001 போஸ்ட் எழுத விட மாட்டிங்களே??

said...

ராம் அண்ணா

நீங்க எழுதுங்க...நான் வந்து century அடிக்கிறேன்...:-))

said...

என்னான்னு சொல்லுறது... ஏதுன்னு சொல்லுறது... இங்கன ஒரு அசாத்திய தெறமக்காரிய வச்சிட்டு..சரியா விளையாட இந்தியா ஆளில்லாமல்ல தவிக்குதாம்... ராசாத்தீ... நீங்க என்ன பண்ணுறீங்க.... அபி பாப்பாவையும், ஜூலியையும், டைகரையும் கூட்டிட்டு இந்திய அணில உடனே சேர்ந்திடு... அப்புறம் என்ன இந்தியான்னா வெற்றி... வெற்றின்னா இந்தியான்னு ஆயிரும்... என்ன சொல்ற...

ஆனாலும் ராசாத்தீ.... பக்கத்து வீட்டுல பால் விழுந்து அவுட் ஆறது மட்டும் நீக்கிறுங்க...

said...

hi h i hi...:-))))

thanks akkaa

Locations of visitors to this page